Saturday, 30 November 2013

இளநரையை போக்கும் மருதாணி

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும். இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.

இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும்.

நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

அழகு தரும் வைட்டமின்கள்

ஒவ்வொரு வைட்டமின்னுக்கும் உடலைக் கட்டுப்படுத்தும் பல வேலைகள் இருக்கின்றன. இதனால் ஒன்று குறைந்தாலும் சமநிலை இழப்பு ஏற்படும். பி வைட்டமின்கள் நீரில் கரையக் கூடியவை. அதனால் உடலில் சேமித்து வைக்க முடியாது என்பதால் தினமும் அவற்றை சாப்பிட வேண்டியது அவசியம். சிறுவயதில் முதிய தோற்றம் ஏற்படுவதை தயமின் என்ற பி1 வைட்டமின் தடுக்கிறது.

இது சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், ஓட்மீல், சோயா பீன்ஸ், முந்திரி போன்றவற்றில் கிடைக்கிறது. தோல் மற்றும் உடலில் உள்ள எல்லா செல்களும் புதுப்பிக்கப் பயன்படும் ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி2. இவை பால், முட்டை, இறைச்சி, கல்லீரல், தானியங்கள், பச்சை காய்கறிகளில் கிடைக்கின்றன.

செல் மெட்டாபாலிசம், கார்போஹைட்ட்ரேட் கிரகிப்புக்கு நியாசின் என்ற வைட்டமின் பி3 தேவை. இதன் மூலம் ஆற்றல் கிடைப்பதோடு, இறந்த செல்கள் அழிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டு, புது செல்கள் உருவாக்கப்படும். மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசியில் இந்த வகை வைட்டமின் கிடைக்கிறது. சுழற்சியை தடுத்து, கொழுப்பு உடைதலை வேகமாக்கி பருக்கள் உருவாகாமல் தடுக்கிறது வைட்டமின் பி5. இவை மக்காச்சோளம், முட்டை, சீஸ், இறைச்சி, தக்காளியில் கிடைக்கிறது.

தோலின் எண்ணெய் பசைமிக்க பகுதிகளில் செதில் உரியும் நோயை சரிசெய்ய உதவுகிறது. பைரிடாக்சின் என்ற வைட்டமின் பி6. இரவ முழு தானியங்கள்,கல்லீரல், பயறுகள், வாழைப்பழம் போன்றவற்றில் உள்ளன. பயோடின் என்ற வைட்டமின் பி7 கூந்தல் வளர்ச்சிக்கும், சருமம், நகங்கள் மெருகேறுவதற்கும் உதவுகிறது.

இவை பயறுவகைகள், பழங்கள், காய்கறிகள்,முட்டை,சீஸ் போன்றவற்றில் கிடைக்கிறது. ரத்த சிவப்பு அணுக்கள் உருவாகி, முதிர்வடைந்து, மெருகேறுவதற்கு போலிக் அமிலம் என்ற வைட்டமின் பி9 தேவைப்படுகிறது. இவைகள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும், இளநரையை தடுக்கவும் உதவுகிறது. இந்த சத்து வைட்டமின் பசலைக்கீரை, ஈரல், ஆரஞ்சு ஜூஸ்,கருஞ்சீரகம் போன்றவற்றில் உள்ளது.

சருமத்தின் செல்களை புதுப்பித்து அழகுப்படுத்தும வேலையை கோபாலமின் என்ற வைட்டமின் பி12 செய்கிறது. இவை முட்டை, கோழி, தயிர், பால் பயறு போன்றவற்றில் கிடைக்கிறது. உடலில் செல்களைப் பராமரிப்பதற்கான ஆற்றலைத் தருவதற்குத் தேவையான கலோரிகளை பெற பி வைட்டமின்கள் உதவுகின்றன.

இறந்த செல்களை மாற்றுவது, சருமத்தை இளமையாகவும், மிருதுவாகவும், வைத்திருக்க உதவும் எண்ணெய் உற்பத்தி செய்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்கள் உதவுகின்றன. வைட்டமின் என்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கு உதவுகிறது.




கண்களை அழகாக காட்ட

நம் உடலில் சென்சிடிவான பாகம் கண் ஆகும். தூக்கமின்மை, கடின உழைப்பு, சத்துக்குறைவு, கண்களுக்கு அதிக வேலை.... இவற்றால் கருவளையம் வந்து கண் அதன் ஜீவனையே இழந்துவிடும். கண்களுக்கு நிறைய ஓய்வு கொடுங்கள். குறைபாடுகள் இருந்தால் உடனே பரிசோதித்து உரிய சிகிச்சை பெறுங்கள்.

பார்வை பாதித்தால் வயதான தோற்றம் தருமே என்று கண்ணாடி போடாமல் இருக்காதீர்கள். கண்ணாடியும் அழகுதான். வட்ட முகத்துக்கு மெல்லிய சிறிய சதுர வடிவ கண்ணாடி பொருத்தமாக இருக்கும். ஓவல் முகத்துக்கு சற்று அகலமான சதுர கண்ணாடி பொருந்தும். நீள முகத்துக்கு வட்ட கண்ணாடி பொருந்தும்.

• கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள்.

• பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும்.

• விழி துருத்திக் கொண்டு இருப்பது போல் தோற்றம் உள்ளவர்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.

• கருமையான விழி உடையவர்கள் புருவத்துக்கும், இமைக்கும் நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.

லிப்ஸ்டிக் நீண்ட நேரம் கலையாமல் இருக்க வேண்டுமா?



பெண்கள் உபயோகிக்கும் அழகுப் பொருட்களில் முதன்மையானது தான் லிப்ஸ்டிக். லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கவும், லிப்ஸ்டிக் போடும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் பார்க்கலாம்...

* லிப்ஸ்டிக் போடும் முன், சிறிது பெட்ரோலியம் ஜெல்லைத் உதட்டில் தடவிய பின் லிப்ஸ்டிக் போட்டால், லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்.

* நீண்ட நேரம் லிப்ஸ்டிக் இருக்க வேண்டுமானால், இரவில் படுக்கும் முன், லிப்ஸ்டிக்கை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு தூங்க வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த லிப்ஸ்டிக்கை போட்டால், அது நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

* லிப்ஸ்டிக் போட்ட பின் பார்க்க சூப்பராகவும், அதிக நேரம் அது நிலைத்து இருக்கவும், உதடுகளுக்கு சிறிது பவுடர் போட்டு, பின்னர் லிப்ஸ்டிக் போட வேண்டும். இதனால் லிப்ஸ்டிக் காபி குடித்தால் கூட போகாமல் அப்படியே இருக்கும்.

* தற்போது வயதானவர்களும் லிப்ஸ்டிக் போட ஆரம்பிப்பதால், அவர்கள் நல்ல அடர்ந்த நிறமுள்ள லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுத்து போடாமல், வெளிர் நிறங்களை தேர்ந்தெடுத்து போட்டால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

* எப்போதும் லிப்ஸ்டிக் போடும் போது, இரண்டு வகையான நிறங்களை ஒன்றாக போடக்கூடாது. இதனால், அவை சில நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்தி, உதடுகளின் அழகையே கெடுத்துவிடும்.

நகங்களை பாதுகாக்கும் மருதாணி

நகங்களை நீளமாக வளர்ப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. விரலின் விளிம்புக்கும் அதிகமாக நகங்களை வளரவிடுவது நல்லதல்ல. நகங்களுக்கு சாயம் பூசி அழகுபடுத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும்.

சாதாரணமாக நாம் இதற்கு மருதாணி இலைகளையே பயன்படுத்துகிறோம்.மருதாணி அரைக்கும் போது நன்கு வெண்ணெய் போல் அரைப்பது சிறந்ததாகும். அப்போதுதான் அது நகங்களில் நன்றாக பற்றும். மருதாணி இலையை அரைக்கும் போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம் நன்கு ஏற உதவும்.

விரல்களை நன்கு சுத்தம் செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய ஆரம்பிக்க வேண்டும். இது நகத்தில் சிவப்பு நன்கு ஏற உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க பயன்படும். நகங்களுக்குப் பூசிய பின்னர், உள்ளங்கைகளில் அழகிய வேலைபாடுகள் அடங்கிய, கவர்ச்சி பொருந்திய "டிசைன்களை" மருதாணியைக் கொண்டு இடலாம்.

உள்ளங்கை அளவே உள்ள அட்டைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் அழகான டிசைன்களை வரைந்து, நடுவில் வெட்டி எடுக்கவும். பின், டிசைன்கள் வெட்டப்பட்ட அட்டையை உள்ளங்கையில் வைத்து, அதன் மீது மருதாணி விழுதை நன்கு பரப்பி அதன் இலையை வைத்து கட்டிடவும்.

மறுநாள் மருதாணியை எடுத்துவிடும் போது கைகளில் அழகான டிசைன்கள் அமைந்து விடும். உள்ளங்கைகளைச் சுற்றிப் பொட்டுகள் வைப்பதும் உண்டு. மருதாணியைத் தவிர, பலரகச் செயற்கைப் பூச்சுகளைப் பலர் உபயோகிப்பதுண்டு.

சிவப்பில் பல ரகங்களில் இது கிடைக்கும் இயற்கை நிறத்திலும் உண்டு. இயற்கை நிற பூச்சு நகத்திற்கு தனி நிறம் கெடாது. ஒருவித பளபளப்பை மட்டும் உண்டு பண்ணி மெருகேற்றி விடுகிறது.

ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்புகள்

தோற்றம் அழகாக அமைவதற்கு கூந்தல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் சரியாக அமையாவிட்டால். பார்ப்பதற்கு பொலிவில்லாமல், களையிழந்து காணப்படும். அதனால் இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் தலைமுடியை நேராக்கல் (Straightening), பெர்மிங் போன்ற தலைமுடி சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

அழகை அதிகரிக்க விலை உயர்ந்த சிகிச்சைகளான இவைகளை மேற்கொண்டால், கூந்தலின் அமைப்புத் தரம் அதிகரிக்கப்போவது உண்மை தான். ஆனால் காலப்போக்கில் கூந்தலின் வேர்கள் பாதிப்படையும்.  கூந்தலை நிரந்தரமாக நேராக்க விரும்பும் பெண்கள் பார்லர் போய் அமரும் முன் பல ஆயிரம் முறை யோசித்துக் கொள்ளுங்கள்.

ஒரு முறை கூந்தலை நேராகி விட்டால், அதன் பின்னால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் நிரந்த பாதிப்புகள் சிலவற்றை அது ஏற்படுத்திவிடும்.ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால் கூந்தலுக்கு ஏற்பட போகும் பாதிப்புகளை பார்க்கலாம்.

• கூந்தலை ஸ்ட்ரெய்ட்டெனிங் பின் அதிகளவிலான முடி உதிர்தலை அனுபவிக்க நேரிடும். இது நிரந்தரமாக முடியை நேராக்குவதால் ஏற்பட போகும் பெரிய பிரச்சனை. அதனால் முடியை நேராக்கல் செய்யக்கூடாத காரணங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.

• கூந்தலை ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால், கூந்தலின் வேர்கள் உடனடியாக பாதிக்கப்பட்டுவிடும். கூந்தலின் வேர்கள் பாதிக்கப்பட்டால் புதிதாக வளரும் முடிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். ஆகவே முடியின் வேர்களை பாதுகாக்க கண்டிப்பாக ஸ்ட்ரெய்ட்டெனிங்  செய்வதை தவிர்ப்பது நல்லது.

• கூந்தலை ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால் காலப்போக்கில் கூந்தல் கரடு முரடாக மாறிவிடும். ஏனெனில் கூந்தலை நேராக்க பயன்படுத்தும் ஜெல், கூந்தலின் அமைப்புத் தரத்திற்கு நல்லதல்ல. மேலும் அந்த ஜெல் நாட்கள் போக போக கூந்தலை சொரசொரப்பாக மாற்றி விடும். கூந்தலின் அமைப்புத் தரம் கரடு முரடாக மாறுவதால், முடியின் நுனிகள் பிரியத் தொடங்கும். இது ஒன்றோடு நிற்காமல் ஆயிரக்கணக்கில் பிரியத் தொடங்கும்.

• கூந்தலில் உள்ள ஜொலிப்பு நின்று போனால், பார்ப்பதற்கு வறண்டு களையிழந்து காட்சி அளிக்கும். முடியை ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால், கூந்தலின் ஜொலிப்பை அது எடுத்துவிடும். அதனால் கூந்தல் களையிழந்து காட்சி அளிக்கும். ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால் இந்த இயற்கையான ஜொலிப்பு மற்றும் மென்மையை கூந்தல் இழந்து விடுவதால், அதனை தவிர்ப்பது நல்லது.






அழகை அள்ளித்தரும் பழங்கள்

பழங்கள் மூலம் பெறும் அழகு, ஆரோக்கியமானது. நிரந்தரமானது. எந்தெந்த பழங்களை அழகுக்காக எப்படி பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?

ஆப்பிள்: இது, சருமத்திற்கு பொலிவு தரும் ‘ஸ்கின் டோனர்’. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். ஆப்பிளை கூழ்போல் ஆக்கி, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.

மாம்பழம்: எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின்- ஏ, சி போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தரும். நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கிவிட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூச வேண்டும். சருமத்தின் சுருக்கங்களையும் இது போக்கும்.

ஆரஞ்ச்: வைட்டமின் சி நிறைந்திருக்கும் பழம் இது. இரண்டாக வெட்டி ஒரு பகுதியால் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் சருமம் பிரஷ் ஆகிவிடும். பழத்தோலால் நகங்களை தேய்த்தால், அதில் இருக்கும் கறை நீங்கும். தோலை வெயிலில் காயவைத்து தூளாக்கி, பாதுகாத்திடுங்கள். அதில் முல்தானிமெட்டியும், தண்ணீரும் கலந்து குழைத்து முகத்தில் ‘பேக்’ செய்யலாம். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவிவிட்டால் முகம் பளிச்சிடும்.

நேந்திரன் பழம்: பழத்தின் உள்ளே இருக்கும் கறுப்பு போன்ற புள்ளி விதைகளை நீக்கிவிட்டு கூழாக்கி முகத்தில் பூசவேண்டும். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். பழத்தில் இருக்கும் பொட்டாசியம், சருமத்திற்கு புத்துணர்ச்சியை தரும்.

திராட்சை: எண்ணெய்த்தன்மை கொண்ட, அடிக்கடி பருக்கள் வரும் முகத்திற்கு ஏற்றது. தினமும் திராட்சை சாறு பூசி, 20 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.

மாதுளை: சுருக்கத்தையும், கறுப்பு படையையும் போக்கும் தன்மைகொண்டது. மாதுளையை அரைத்து முகத்தில் பூசி, கழுவிவிட்டால் முகமும் மாதுளைபோல் பளிச்சிடும். செயலிழந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கும் திறன் இதற்கு உண்டு.

பப்பாளி: பப்பாளி பழ கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினுமினுப்பும் கிடைக்கும். பப்பாளி கூழ், ஓட்ஸ், தேன் போன்றவைகளை கலந்து ‘பேஸ் பேக்’காக பயன்படுத்தலாம்.

அழகான கன்னம் வேண்டுமா?

உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, தொடை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட்டும் தான் கரைக்க முயலுகிறோம். ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்றவற்றை குறைப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

கன்னங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு ஒருசில உடற்பயிற்சிகள் உள்ளன. அதனைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் கன்னங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்கலாம். அதுமட்டுமின்றி, இந்த பயிற்சிகளில் சில ஒட்டியுள்ள கன்னங்களை சரியான அளவில் வைத்துக் கொள்ளவும் உதவும்.

• கன்னங்களை அழகாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகளில் முதன்மையானது தான் வாயை குவித்தல். உதடுகளை இறுக்கமாக மூடி, 1 நிமிடம் குவித்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு குறைந்தது 3 வேளை, 10 நிமிடம் செய்ய வேண்டும்.

• முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு. இவ்வாறு வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைவதால், அது கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் 15 நிமிடம் சிரிப்பு பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

• பொதுவாக சூயிங்கம் போட்டால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் இந்த சூயிங்கம் மெல்லுவது என்பது முகத்திற்கான ஒரு சூப்பரான பயிற்சியாகும். இதனால் இரட்டை தாடைகளை தவிர்க்கலாம்.

• நன்கு பெரியதாக இருக்கும் கன்னங்களை குறைக்க இருக்கும் சிறந்த வழிகளுள் கன்னங்களை தூக்குதலும் ஒன்று. அதற்கு முடிந்த அளவில் கன்னங்களை தூக்குங்கள். அதற்காக கையை கொண்டு தூக்காதீர்கள். சிரிப்பதன் மூலம் கன்னங்களை நன்கு தூக்குங்கள்.

• மீன் போன்று உதடுகளை குவித்து, 20 நொடிகள் வைத்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கும் 10-20 முறை செய்து வந்தால், கன்னங்களை குறைக்கலாம்.

• வாயில் காற்றினை நிரப்பி 2 நிமிடம் கழித்து, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கன்னங்களை குறைப்பதோடு, கன்னங்கள் இல்லாதவர்களுக்கு கன்னங்கள் சரியான அளவில் இருக்கும்.

முகத்திற்கு பொலிவு தரும் இயற்கை ஃபேஸ் பேக்

1. கடல் உப்பை மணல் பதத்திற்கு இளம் சூடான தண்ணீரில் கலக்கவும். முகத்தை ஆவியில் காட்டவும். பின்னர் உப்பு பூச்சைத் தடவவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர் நீரில் கழுவவும். கடல் உப்பு சரும துவாரங்களை அடைத்துப் பொலிவும் புத்துணர்ச்சியும் கொடுக்க வல்லது.

2.  முட்டை வெள்ளையை நன்கு நுரை வரும் வரை அடித்துத் அதில் 1 ஸ்பூன் தேனைக் கலக்கவும். முகத்தில் கண்ணைத் தவிர மற்ற இடங்களில் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும். மிச்சம் இருப்பதை சில நாட்களுக்குக் குளிர் சாதன பெட்டியில் வைக்கலாம். உபயோகிக்கும் முன் கலவையை நன்கு கலக்கவும்.

3. பால் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்,  பிராந்தி 1 ஸ்பூன் எடுத்து கொண்டு அதை நன்றாக கலந்து முகத்தில் தடவவும்.10 - 15 நிமிடத்திற்குப் பிறகு குளிர் நீரால் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.

4. 1/2 கப் பால், 1 ஸ்பூன் இளம் சூடான நீர்,3/4 ஸ்பூன் பால் சேர்த்து மூன்றையும் நன்கு குழைய கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவி மீண்டும் தடவவும். 10 நிமிடத்திற்குப் பிறகு முதலில் இளம் சூடான நீரிலும், பின் குளிர் நீரிலும் கழுவவும்.

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம். கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன.

நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

* கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

* உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது.எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.

* மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.

நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.

* பயோட்டின்’ கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் “பயோட்டின்’ நிறைந்துள்ளது.

* இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.

கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும்.

முக அழகிற்கு தகுந்த புருவ மாற்றம்


முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.

• குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும்.

• நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை.

• ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.

• அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.

• புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.

• சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.

• புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.

• கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.

• வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும்.

• நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.

• நீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.
• வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.

• உடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள்.

கண் பார்வையை பாதுகாக்க டிப்ஸ்

\உடலில் முக்கிய பாகங்களில் ஒன்று கண்கள். அந்த கண்களை சரியாக பராமரிக்க வேண்டும். கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க தினமும் குறைந்தது 8 மணிநேரம் தூங்க வேண்டும். மேலும் கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கீரை, காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* போதிய வெளிச்சத்தில் எழுதுதல் மற்றும் படித்தல் வேண்டும்.

* கண்களில் தூசி விழுந்தால் கைகளால் கசக்க கூடாது. தண்ணீரால் கண்களை சுத்தம் செய்ய வேண்டும்.

* கம்ப்யூட்டரில் பணி செய்யும் போதும், டிவி பார்க்கும் போதும் அடிக்கடி கண்களை மூடி திறக்கவும். அதாவது கண்களை சிமிட்டவும். இவ்வாறு செய்வதால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு நீங்கும்.

* பால், முட்டை, கீரை, பழங்கள் போதுமான அளவு சாப்பிடவும்.

* வாகனம் ஓட்டும் போது (கண்ணாடி அணியாதவர்கள்) பவர்லெஸ் கண்ணாடி அணியுங்கள்.

* 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஓராண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் கண்களை பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

* நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கட்டாயம் கண்களை பரிசோதனை செய்யவும்.

அக்குள் கருமையை போக்க வழிகள்

பெரும்பாலானோரது அக்குள் கருமையாக இருக்கும். அதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு விருப்பமான ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியமாட்டார்கள். அப்படியே அணிந்தாலும், கைகளை மேலே தூக்கமாட்டார்கள். ஏனெனில் அக்குள் கருமையாக இருந்தால், அது மிகவும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.

இத்தகைய அக்குள் கருமையைப் போக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன. மூலிகைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். இவற்றில் சில பொருட்கள் ஒருசிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதால், அக்குளில் பயன்படுத்துவதற்கு முன்னர், இதனை ஒருமுறை கைகளில் சோதித்துக் கொள்ள வேண்டும். அக்குள் கருமையைப் போக்கும் சில வைத்தியங்களைப் பார்க்கலாம்.

• கற்றாழையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.

• எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இதன் சாற்றினைக் கொண்டு, கருமையான அக்குளை மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் அக்குள் கருமை மறையும். ஆனால் சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், எலுமிச்சையை பயன்படுத்தக்கூடாது. இதனால் எரிச்சல் ஏற்படுவதோடு, சருமம் மேலும் பாதிக்கப்படும்.

• ரோஸ் ஒரு அருமையான நறுமணமிக்க மலர். அத்தகைய மலரின் இதழ்களை அரைத்து அக்குளில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக கருமை மறையும்.

• மஞ்சளுக்கு சருமத்தின் கருமையை போக்கும் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே மஞ்சளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்தில் தடவி உலர வைக்க வேண்டும். குறிப்பாக இந்த முறை சென்சிடிவ் சருமத்திற்கு ஏற்றது.

• அதிமதுர வேரை தண்ணீர் ஊற வைத்து அரைத்து, அதனை கருமையாக இருக்கும் அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும். இதனால் அக்குள் கருமை மறைவதோடு, அக்குளில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.

• சருமத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை போக்குவதில் வேப்பிலை ஒரு சிறந்த மூலிகைப் பொருள். அந்த மூலிகைப் பொருள் சருமத்தை வெள்ளையாக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. ஆகவே வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலையை அரைத்து, அக்குளில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

ஆயில் ஃபேஸ் தடுக்க வழிகள்

 காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி, நான்கு மிளகு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

இதன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தோலின் துவாரங்கள் இறுகி கூடவே முகம் பளபளப்பாகவும் மாறும். நிறைய தண்ணீர் குடித்தால் நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து வெளியேறும்.

2. நார்ச்சத்து மிகுந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், முட்டைக்கோஸ், கேரட் போன்றவற்றை தினமும் சாப்பிடுங்கள். முகத்தில் பருக்களே வராமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஒரு வாரத்திற்கு பச்சைக் காய்கறிகள், வேகவைத்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

3. முகத்திற்கான அழகு சாதனப் பொருட்களை வாங்கும்பொழுது அதில் கிளைகாலிக் அமிலம், ரெட்டினாயிக் அமிலம் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இவை ஆயில் அதிகமாக உருவாவதை தடுக்கக் கூடியவை.

உங்கள் கிளன்ஸர்களை வாங்கும்பொழுது அதனுள் ஹைட்ராக்ஸி அமிலம், சாலிசிலிக் அமிலம், பென்ஸைல் பெராக்ஸைட் போன்றவை இருக்கிறதா என்று கவனியுங்கள். டோனர்கள் வாங்கும்போது அதில் ஆல்கஹால் இருப்பதைத் தவிருங்கள். இவை முகத்தில் இருக்கிற மொத்த ஆயிலையும் நீக்கி சருமத்தை வறட்சி அடையச்செய்து சுருக்கம் ஏற்பட வழி ஏற்படுத்தும்.

4. வெதுவெதுப்பான தண்ணீரால் தினமும் மூன்று முறையாவது முகத்தை கழுவுங்கள். இதனால் அதிகப்படியான ஆயில் நீக்கப்படும். முகம் கழுவும்போது தேய்க்காதீர்கள். முகம் கழுவ ஜான்சன் அண்ட் ஜான்சன், க்ளீன் அண்ட் க்ளியர் டீப் ஆக்ஷன் கிளன்ஸர், லோ ஓரல் போன்றவை பயன் தரும்.

மேலும் களிமண் அடிப்படையில் செயல்படும் மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள். இவை தோல் துவாரங்களை இறுக்கி ஆழமாக சுத்தம் செய்யும். ஆயில் அதிகம் சுரப்பவர்கள் ஆயில் அற்ற தோல் கிரீம்களைப் பயன்படுத்துவது நல்லது.

காட்டன் புடவைகளை பராமரிப்பது எப்படி?

பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் மட்டமான காட்டன் சேலைகள் சில நாட்களிலேயே பழைய புடவை போல மாறிவிடும். கைத்தறி காட்டன் புடவைகள்தான் எப்போதும் சரியான சாய்ஸ். பெங்கால், மங்களகிரி, ராஜஸ் தான், காஞ்சி போன்ற காட்டன்கள் எப்போதும் ‘பளிச்’ லுக் தரும்.

அகலம் குறைவாக இருந்தாலும், சுருங்காது. அயர்ன் தேவையில்லை. டார்க் கலர்களைவிட லைட் கலர் பெஸ்ட். நிறம் வெளுக்கும் தன்மை டார்க் கலர்களில் அதிகம். காட்டன் புடவைகளை சரியாகப் பராமரிக்காவிட்டாலும் சீக்கிரமே சுருங்கிப் போய்விடும்.

அடிக்கடி துவைக்காமல் இரு முறை பயன்படுத்திய பிறகு துவைக்கலாம். பிரஷ் வாஷ் செய்யக்கூடாது. புடவையின் ஷைனிங் போய்விடும் என்பதால் வாஷிங் மெஷினை தவிர்ப்பது நல்லது. நல்ல தரமான கஞ்சியை மைல்டாக பயன்படுத்தினால் பல வருடங்கள் தாண்டியும் பளிச்சென இருக்கும்.

அழகு தரும் ஆரஞ்சு பழ ஃபேஸ் பேக்

ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

* ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ''ப்ளிச்'' ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

* உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

* ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப்போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

* சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்... வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

ஆயுளை காக்கும் பற்கள்

இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரிடமும் அழகுக்கான ஏக்கம் இருக்கிறது. அழகு இருந்தால்தான் மற்றவர்கள் ரசிக்கும் விதத்தில் நல்ல வாழ்க்கை வாழ முடியும். அதாவது தன்னம்பிக்கை தரும் அளவுக்காவது முகத்தின் அமைப்பு அழகாக இருக்கவேண்டும். எந்த வகையிலும் காண்பவரை உறுத்தும் வண்ணம் முக அமைப்பு இருந்துவிடக்கூடாது.

நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும்போதுகூட தோற்றத்திற்கு அங்கே மதிப்பிருக்கிறது. தகுதிகள், திறமைகளுக்கு இணையாக தோற்றமும் இருக்கிறதா என்று எடை போடுகிறார்கள். அதனால்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் லட்சணமான முகம் அத்தியாவசியமாகிறது. யாருமே அவலட்சணமான முகத்திற்கு ஆசைப்படுவதில்லை.

ஆனால் பிறவியிலேயே தாடை, பற்கள் மற்றும் உதடுக் குறைபாடு ஏற்பட்டிருந்தால் முக அமைப்பு திருப்தி இல்லாமல் போய்விடுகிறது. இதெல்லாம் இயற்கை கொடுத்த தண்டனை என்று விரக்தி அடையாமல், முகத்தை சீர்படுத்தி அழகாக்கும் முக சீரமைப்பு சிகிச்சை இப்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்யப்படுகிறது.

• முக அழகு மேம்பாடு:

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பிறவியிலேயே தாடை மற்றும் உதடு பிளவு குறைபாடுடன் கிட்டத்தட்ட 800-க்கு ஒரு குழந்தை பிறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறவியிலேயே சிலருக்கு குறைவான அல்லது கூடுதல் வளர்ச்சியுடன் தாடை இருக்கும்.

பற்கள் நேர் வரிசையாக இல்லாமல் ஏறுக்குமாறாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு முகம் ஒருபக்கம் கோணலாக அமைந்திருக்கும். இதுபோன்ற குறைபாடுகளுக்குக் காரணம், முக எலும்புகள் முழுமையாக வளர்ச்சி அடையாததுதான். இதுதவிர விபத்துக்களால் தாடை, பற்கள் சேதமடைந்து முகத்தின் அழகு பாதிக்கப்படலாம்.

சிலருக்கு முக எலும்புகள் உடைந்து சேதமடையலாம். கதிர்வீச்சு போன்ற காரணிகளாலும் முகத்தில் குறைபாடு தோன்றலாம். சிலர் தங்கள் பழக்க வழக்கத்தாலும் குறைபாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது ஒருசில குழந்தைகள் மட்டும் பள்ளிக்குச் செல்லும் வயதைத் தாண்டிய காலகட்டத்திலும் கை சப்பும் பழக்கத்தை தொடருகிறார்கள்.

இதனால் முகத்தின் அமைப்பு சற்று மாறிவிடுகிறது. இதுதவிர வாயைத் திறந்து தூங்கும் பழக்கம் சிலரிடம் இருக்கிறது. இதுபோன்ற பழக்கங்களாலும் இன்னும் சில கணிக்க முடியாத காரணங்களாலும் முக அமைப்பில் விரும்பத் தகாத மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.

முகத்தில் எலும்புகள், பற்கள், தாடைகளில் தோற்றக் குறைபாடுகள் இருந்தால் அதை சீர்படுத்தி இயல்பான அழகுக்கு கொண்டுவந்துவிட இயலும். உதட்டுப்பிளவு, அண்ணப்பிளவு போன்ற குறைபாடுகளையும் சிகிச்சை மூலம் எவ்வித தழும்புகளும் வெளியே தெரியாதவண்ணம் சீராக்கிவிடலாம்.
















பால் பவுடர் ஃபேஸ் பேக்


பால் பவுடரை கொண்டு நாம் பல வகை ஃபேஸ் பேக்குகள் தயாரிக்கலாம். பால் பவுடர் உடன் நம் சமயலறையில் உள்ள மற்ற பொருட்களையும் கொண்டு ஃபேஸ் பேக்குகள் தயாரிக்கலாம். இவ்வாறு பால் பவுடரை கொண்டு தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகள், அதிக சரும நிறமாற்றம், பருக்கள், சன் டான், சரும வறட்சி தன்மை ஆகியவற்றை போக்குகின்றது.

இவ்வகை தொல்லையற்ற ஃபேஸ் பேக்குகளை ஒரு நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்பது மிகவும் சிறப்பானதாகும். நாம் நமது சருமத்திற்கு ஏற்ற வகையான ஃபேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். இப்பொழுது பால் பவுடரை கொண்டு தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

* ஒரு கிண்ணத்தில் 2 மேஜைக்கரண்டி பால் பவுடர் மற்றும் 2 மேஜைக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும். இதனை நன்றாக கலந்த பின்னர் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராக இருக்கும்.

* பால் பவுடரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும். இதனை பசை பதத்திற்கு கொண்டு வரவும். அதை, முகம் மற்றும் கழுத்தில் தடவி, குறைந்தது 20 நிமிடங்கள் வரை காய வைக்கவும். பின்னர், குளிர்ந்த நீரால் கழுவவும். இது ஒரு சிறந்த சரும வெண்மைக்கான ஃபேஸ் பேக் ஆகும். இதனை தினமும் பயன்படுத்தலாம்.

* 1 மேஜைக்கரண்டி தேன், ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர் மற்றும் அரை மேஜைக்கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் கலந்து பசை போலாக்கவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இதனை தினமும் பயன்படுத்தி வந்தால், சன் டானில் இருந்து விடுபடலாம்.

* ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடரில், அரை மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை பசை பதத்திற்கு கொண்டு வரவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காய விடவும். பின்னர் சுடுநீரில் கழுவிவிடவும். இது, சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்து, ஒட்டுமொத்த சரும வலிமையை மேம்படுத்தும்.

* ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர், ஒரு மேஜைக்கரண்டி தயிர், ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் அரை மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதனை ஒரு கிண்ணத்தில் கலந்து ஃபேஸ் பேக்கை தயாரிக்கவும். பின் இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சுடுநீரில் கழுவிவிடவும்.

மென்மையான சருமத்திற்கு வழிகள்

நமது சருமமானது தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்புடையதாகவே அமைந்துள்ளது. ஆனால், இந்த தட்பவெப்ப நிலைகள் அதிகரிக்கும் போது அவை நமது சருமத்தை பெரிதும் பாதிக்கின்றது. இதனால் சரும வறட்சி, பருக்கள், தேமல் மற்றும் சில சரும நோய்கள் போன்றவை வர வாய்ப்பளிக்கின்றது.

தற்போது முன்பை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில், வருடம் முழுவதும் ஒரே நிலையில் இருக்கும் சருமத்தை பெறும் வாய்ப்புகள் தான் அதிகம். ஆகவே நமது முகத்தை பேணிப் பாதுகாப்பது முதன்மையாக இருக்கின்றது.

எனினும், சருமத்தை மென்மையாகவும், வழுவழுப்பாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். மேலும் இயற்கையாகவே நிறம் மாறினாலும், நமது சருமத்தை உறுதியாகவும், நிறமாகவும், வறட்சியின்றி இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு இதோ சருமத்தை அழகாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்ள சில எளிதான வழிகள் உள்ளன. அவற்றை பார்க்கலாம்.

• தினமும் பிரஷைக் கொண்டு உடல் முழுவதும் வட்ட இயக்கமாக தேய்க்க வேண்டும். இதன் மூலம், இரத்த ஓட்டம் ஊக்குவிப்பது, செல்லுலைட் குறைய செய்வது மட்டுமல்லாது, இறந்த செல்களை உதிரச் செய்து, அதன் கீழ் இருக்கும் மென்மையான சருமத்தை வெளிக்காட்டும்.

உடலை பிரஷ் கொண்டு தேய்த்தப் பின்பு, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்க்ரப் உபயோகித்து குளிக்கவும். அதிலும் தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து தடவி வந்தால், சருமம் ஸ்பா சிகிச்சைக்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்தும். இதனால், சருமம் அழகாகவும், நல்ல நறுமணத்தையும் பெறக்கூடும்.

• சருமத்தை மென்மையாக வைப்பதில் பாடி வாஷ்கள் நல்ல பயனை அளிக்கின்றது. பலவற்றில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் சரும உறுதிக்கு தேவையான பொருட்களும் உள்ளது. ஆகவே உங்களுக்கு தேவையான ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். அதிலும் அவை சருமத்தில் அதிகப்படியாக தங்கும் மாசுக்களை நீக்குமாறும் இருக்கலாம். மேலும் சரும உரிப்பிற்கு தேவையான ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் கிளைக்கோலிக் அமிலங்களும் இவற்றில் உள்ளது.

• மூன்று நாட்கள் டிடாக்ஸ் பயன்படுத்தி வந்தால், அது வயிற்று உப்புசத்தை குறைத்து, சருமத்தை பொலிவை அதிகரிக்கும். அதற்கு ஜூஸ்களை அதிகம் பருகி, காபி, மது, சர்க்கரை, உப்பு போன்றவற்றை தவிர்த்தால், மூன்றே நாட்களில் உப்புசம் குறையும். இதனால் வயிறு சீரடைந்து தட்டையாகி விட்டதை உணர முடியும்.

• ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை முற்றிலும் நீக்குவது என்பது முடியாது என்றாலும், அதனை தடுக்க தினமும் மாய்ஸ்ச்சுரைஸ் செய்வது மற்றும் நிறைய தண்ணீர் அருந்துவதாலும் தடுக்க முடியும். அதுமட்டுமின்றி ஸ்ட்ரெச் மார்க்குகளை மங்கச் செய்வதற்கு, ரெட்டினால் உள்ள பொருட்களைப் பயன்படுத்தலாம்.

இது அணுக்களின் உற்பத்தியையும், கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்யும். மாறாக, ஸ்ட்ரெட்ச் மார்க்குகளில் சன் ஸ்க்ரீன் லோஷன் தடவினால், அது மேலும் சருமத்தை கருமையாக்கி வெளிப்படுத்தும்.

நகங்கள் வலுவிழப்பதை தவிர்க்க வழிகள்

உங்களில் எத்தனை பேருக்கு கையில் நகங்கள் அடிக்கடி உடைகிறது?. கண்டிப்பாக பலர் இந்த பிரச்சனைக்கு ஆளாகி இருப்பீர்கள். இன்னும் சிலருக்கு நகங்கள் வலுவிழந்து மெதுவாக பிளவடையும். அதனால் ஸ்வெட்டெர் போன்ற ஆடைகளை அணியும் போது, நக கன்றுகளில் சிக்குவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

நகங்கள் இப்படி வழுவிழந்து போச்சே என்று நமக்கு எரிச்சல் மற்றும் வருத்தம் ஏற்படும். அதனால் நகங்களை வலுவடையச் செய்து, ஆரோக்கியமாக வளரச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். அதைப் படித்து நகங்களை எப்படி திடமாக வைத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

• நகத்தை கடிப்பதாலோ அல்லது நகத்தில் உள்ள அழுக்கை முரட்டுத்தனமாக எடுப்பதாலோ நக நுனிகளில் ஸ்ட்ரெஸ் முறிவு ஏற்படும். நாளடைவில் நகமே உடைந்து விழுந்து விடும். அதே போல் சிலருக்கு நகத்தை வைத்து எதையாவது சுரண்டும் பழக்கம் இருக்கும். சில பெண்கள் இதை பயத்தினால் செய்வதுண்டு. இது நகத்தின் மேல் கோடுகள் போல் தோற்றத்தை உருவாக்கி விடும்.

• வீட்டில் உள்ள பொருட்களை துடைக்கும் போது, பெண்கள் கையில் ரப்பர் கையுறை அணிந்து கொள்வது நல்லது. அதனால் நகத்திற்கு ஆபத்தை விளைவித்து, அதனை உடைக்க செய்யும் ஆபத்தான ரசாயனத்தில் இருந்து அதனை பாதுகாக்கலாம்.

• நகத்தை தொடர்ந்து தண்ணீரில் வைத்திருந்தால், அது தண்ணீரில் ஊறி போய், வலுவிழந்து, சுலபமாக கையோடு பிய்த்துக் கொண்டு வந்துவிடும். ஏனெனில் நகங்களில் சிறு துளைகள் இருப்பதால், அது தண்ணீரை உள்வாங்கும். அதனால் குளித்து முடித்த பின்னரோ அல்லது கைகளைக் கழுவிய பின்னரோ நகங்களை சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.

• நகங்கள் மற்றும் அதன் புறத்தோல் போன்றவற்றிற்கு மெனிக்யூர் முறையை சீரான முறையில் செய்து கொள்வது அவசியம். அதே போல் தினமும் சருமத்தின் மீது மாய்ஸ்சுரைசர் தடவினால், நகங்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

• நச்சுத்தன்மையுள்ள நெயில் பாலிஷ்களில் ஃபார்மால்டிஹைடு, ஃபார்மால்டிஹைடு ரெசின் மற்றும் டொலுவீன் போன்ற ஆபத்தான ரசாயனங்கள் உள்ளது. இவ்வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தினால், நகங்கள் வலுவிழந்து, ஆரோக்கியமிழந்து போய்விடும்.

• நகம் புறத்தோல்களுக்கு கீழ் தான் வளரும். அதனால் புறத்தோலை மசாஜ் செய்தால், அந்த இடத்திற்கு இரத்தத்தை கொண்டு வந்து நகங்கள் ஆரோக்கியமாக வளர உதவி புரியும். இதற்கென சிகிச்சைக்கு செல்வதற்கு பதிலாக, வெறுமனே மசாஜ் செய்தால் போதிய பலனை அது அளிக்கும்.

ஆப்பிள் பேஸ் மாஸ்க்

ஆப்பிளை சாப்பிட்டால் சுருக்கங்கள் உண்டாவதை தடுக்கலாம். ஏனெனில் அதில் உள்ள ஆன்டி- ஏஜிங் பொருள் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்கும்.

மேலும் இறந்த செல்களை நீக்கி, பொலிவான தோற்றத்தை கொடுக்கும். அதிலும் இந்த பேஸ்ட்டை முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் பளிச்சென இருக்கும். மேலும் இது ஒரு சிறந்த கிளின்சர்.

• இந்த பழத்தில் உள்ள அமிலத்தன்மை, முகத்தில் இருக்கும் தேவைக்கு அதிகமான எண்ணெய் பசையை நீக்கும். அத்தகைய ஆப்பிள் கிளின்சரை செய்ய, முதலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ், 2 டேபின் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தடவி 3-4 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஆப்பிளின் மகிமை, இதன் முடிவில் நன்றாக தெரியும்.

• ஆப்பிளை வைத்து மாஸ்க் செய்தால், அதைவிட நன்றாக இருக்கும். ஏனெனில் அப்போது ஆப்பிளில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நேரடியாக உடலில் செல்லும். அந்த மாஸ்க் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மீல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது அழகாக, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

• ஆப்பிளானது பிம்பிள் மற்றும் முகத்தில் இருக்கும் கொப்புளங்கள், புண் போன்றவை நீக்கும். அதற்கு அதனை மாஸ்க் போல் செய்ய வேண்டும். அதற்கு ஆப்பிள் துண்டுகளை, முகத்தில் தேய்க்க வேண்டும். இல்லையென்றால் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து, முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10-15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும்.

• முக்கியமாக ஆப்பிள் ஒரு சிறந்த சன் ஸ்கிரீன் பொருள். இது சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும். அதற்கு தினமும் குளிக்கும் முன், ஆப்பிள் சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்கவும். இவ்வாறெல்லாம் செய்தால் முகமானது பளிச்சென்று இருப்பதோடு, பொலிவாக இருக்கும்.

ப்ளவுஸ் ஐடியாக்கள்

பண்டிகைக் காலம் நெருங்கிகிட்டு இருக்கு. ஜவுளி வாங்கி தைக்க கொடுத்துன்னு பிசியா இருக்கும். டெய்லர் கிட்ட கொடுத்திட்டு போராடுவதற்கு பதில் ரெடிமேட்டே மேல்னு பலர் ரெடிமேட் உடைகள் எடுத்துப்பாங்க. தீபாவளி, தசரா போன்ற பாரம்பரிய பண்டிகைகளுக்கு புடவை உடுத்துவதுன்னு சிலர் கொள்கை வெச்சிருப்பாங்க.

ஆசை ஆசையாய் புடவை எடுத்து ப்ளவுஸில் டெய்லர்கள் சொதப்பிடுவாங்க. அவங்களுக்கு அவசரம்.  புடவை என்னதான் கிராண்டா இருந்தாலும் அதை எடுத்துக்காட்டுவது ப்ளவுஸ் தான். வித்தியாசம் வேணும்னு நினைக்கறவங்களுக்கு இந்த டிப்ஸ்:

1. புடவைக்கு மேட்சிங்கா சில்க் காட்டனில் துணி வாங்கிக் கொண்டு உடம்புக்கு அந்த துணியையும் கைகளுக்கு புடவையில் வந்திருக்கும் ப்ளவுஸ் துணியையும் கொடுத்து தைக்கலாம்.

2. சில்க் காட்டனில் ப்ளவுஸ் தைத்து கைகளுக்கும் கழுத்து பகுதிக்கும் ப்ளவுஸ் துணையை பைப்பிங் வைக்கச் சொல்லலாம்.

3. பின் கழுத்து டிசைனில் மட்டும் அந்த ப்ளவுஸ் துணியைக்கொண்டு தைக்கச் சொல்லலாம். கீழே இருக்கும் இந்த பேட்டனில் தைக்கச் சொல்லலாம். ஜரி போட்ட புடவைகளுக்கு கைகளில் மட்டும் ஜரி வாங்கி வைத்து தைய்ப்போம்.

அதோடு கொஞ்சம் கூட ஜரி வாங்கி பின் கழுத்து பேட்டனில் வைத்து தைத்தால் டிசைனர் ப்ளவுஸ் ரெடி. கொஞ்சம் மெனக்கெட்டு புடவைக்கு மேட்ச்சான லேஸ், மயில், மாங்காய் மோத்திஃப்கள் வாங்கிக்கொண்டால் இரண்டு பக்கம் கைககளிலும் வைத்து தைய்க்கலாம்.

பார்க்க ரொம்ப அழகா இருக்கும்.  சாதாரண ஜியார்ஜட் புடவைகளுக்கு கூட அம்சமாக சிம்பிள் டிசைன் ப்ளவுஸ்களில் செய்தால் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.

நாம் டெய்லரிடம் சொல்லி ரெடி செய்து கொள்ளலாம். ப்ளவுஸில் டீப்நெக் வைத்தால் மட்டுமே டிசைன் செய்ய முடியும் என்பதில்லை. அதனால் தைரியமாக டீப்நெக் போடாதவர்களும் தங்களின் ப்ளவுசில் டிசைன் செய்யச் சொல்லலாம்.

கூந்தல் உதிர்வை தடுக்கும் இயற்கை வழிகள்


இன்று பெண்களைப் போல ஆண்களும் தங்கள் தலைமுடியைக் காப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்களுக்கும், பெண்களும் உதவும், முடிகாக்கும் குறிப்புகள் இவை...

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து, காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி, தலையில் தேய்த்துக் குளித்துவர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்துக்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* முடி உதிர்ந்த பகுதிகளில் முடி வளர கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் பலனிருக்கும்.

* இளநரை கருப்பாக, நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்.

* முடி கருப்பாக, ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்திப் பூ இடித்துத் தூள் செய்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர வேண்டும்.

* காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி, தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவந்தால் முடி கருமையாகும்.

* தலைமுடி கருமை, மினுமினுப்புப் பெற அதிமதுரம் 20 கிராம் அளவை, 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

* செம்பட்டை முடி நிறம் மாற, மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குத் தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

* நரை போக்க தாமரைப் பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரை மாறிவிடும்.

* முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* முடிகொட்டிய இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்துத் தடவிவர வேண்டும்.

* புழுவெட்டு மறைய, நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும், புழுவெட்டும் மறையும்.

உங்கள் சருமத்தை பாதுகாக்கும் 5 பொருட்கள்


1.  சருமப் பாதுகாப்பிற்கு மிக அடிப்படையான விஷயம் தான் க்ளென்சிங்.. இது சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றி எண்ணெய்ப்பசையை நீக்குவதோடு மட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தும் விட்டமின்கள் மற்றும் சன்ஸ்கிரீன் போன்றவை சருமத்துள் ஊடுருவிச் சென்று ஊட்டமளிக்கத் துணைபுரிகின்றது.

எல்லா க்ளென்சரும் ஒரே மாதிரியானவை என்று சொல்லிவிட முடியாது. பேசியல் க்ளென்சர் சோப் இல்லாததாக இருக்க வேண்டும். உங்களுடையது மிக உலர்ந்த சருமமாயின் கண்டிப்பாக நீங்கள் க்ரீமி க்ளென்சர்களைப் பயன்படுத்த வேண்டும்.

உலர்ந்த மற்றும் எளிதில் பாதிப்படையக்கூடிய (sensitive) சருமமாக இருந்தால், க்ரீமி க்ளென்சராக இருந்தாலோ இல்லாவிட்டாலோ கண்டிப்பாக ஆல்கஹால் கலந்ததாக இருக்கக் கூடாது. எண்ணெய்ப்பசை சருமமாக இருந்தால் alpha-hydroxy கலந்த தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

2.  மனித உடல் நீரினால் நிரப்பப்பட்டது. நமது உடற்செல்கள் ஊட்டப்பொருட்களை உறிஞ்சிக் கொள்வதற்கும் ஜீரண நடவடிக்கைகளை சீராக்குவதற்கும் நீர் மிக முக்கியமானது.  சுவாசிக்கும்போதும் வியர்வை வெளியேறும்போதும் செல்களில் உள்ள நீரின் அளவில் இழப்பு ஏற்படுகிறது.

இந்த இழப்பை ஈடுசெய்ய நாம் தொடர்ச்சியாக நீர் அருந்த வேண்டிய தேவை உள்ளது.  நீர் சருமத்திலுள்ள அழுக்குகள் மாசுக்களை அகற்றி பருக்கள் ஏற்படுவதைத் தடுத்து சருமத்தை மென்மையாக்குகிறது. சருமத்தை ஊட்டமுள்ளதாக வைத்திருக்க நாளொன்றிற்கு கட்டாயமாக 2 லிட்டர் நீர் அருந்த வேண்டும்.

3.  கொழுப்பு அமிலங்கள் இல்லாவிட்டால் சருமக் கலன்கள் உலர்ந்து கறைகள் படிந்ததாய்க் காணப்படும். ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்ற கொழுப்பு அமிலங்கள் சருமத்தைப் பொலிவுறச் செய்கின்றன.  ஒமேகா-6 கொழுப்பு அமிலம் கோழி இறைச்சி, தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றில் அதிகம் உள்ளன.

ஒமேகா-3 கொழுப்பு அமிலமானது சிலவகை மீன்கள், சூரியகாந்தி எண்ணெய், கிட்னி பீன்ஸ், வால்நட்ஸ் மற்றும் ஸ்பைனாக் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது.  சில சரும நிபுணர்கள் Gamma Linolenic Acid (GLA) இணையும் தற்போது பரிந்துரை செய்து வருகின்றனர்.  இந்த கொழும்பு அமிலமானது தாவர எண்ணெய்யில் அதிகம் காணப்படுகிறது.

4.  சன்ஸ்கீரின்களை நீங்கள் பாவிக்கின்ற பொழுது சருமப் புற்றுநோய்களிலிருந்தும் ஏனைய சரும நோய்களிலிருந்தும் உங்கள் சருமத்தை நீங்கள் பாதுகாப்பதோடு சூரிய ஒளியினால் உங்கள் சருமம் வயதான தோற்றத்தை விரைவில் பெறுவதிலிருந்தும் பாதுகாப்புச் செய்கின்றீர்கள்.

சூரிய ஒளி நேரடியாக சருமத்தைத் தாக்கும்போது நிறமாற்றம், சுருக்கம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகையில் சன்ஸ்கீரின் UV கதிர்களை ஊடுருவ விடாமல் இவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

5. அன்டியக்சிடன்ட்ஸ் (Antioxidants):

கார்டியோவஸ்குலார் ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பிற்கு அன்டியக்சிடன்ட்ஸ் பயன்படக்கூடிய ஒன்றாக நம்பப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், கடல் உணவு மற்றும் எண்ணெய் வகைகள் போன்றவற்றில் இது அதிகம் காணப்படுகிறது.  பலதரப்பட்ட அன்டியக்சிடன்ட்ஸ் இருக்கின்ற போதும் இரண்டு வகை மட்டுமே சருமப் பராமரிப்பில் அதிக கவனத்தைப் பெற்றவை.

சருமத்தை பொலிவடைய செய்யும் சர்க்கரை ஸ்கரப்

பொதுவாக சர்க்கரை ஒரு ஆரோக்கியமற்ற பொருள் என்று தான் தெரியும். ஆனால் இந்த சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்தப் பொருளாக உள்ளது. எப்படியெனில், சர்க்கரையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சருமத்தின் மென்மைக்கு இடையூறாக இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவற்றை எளிதில் வெளியேற்றிவிடும்.

அதற்கு சர்க்கரையை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது அதனை வேறு சில சரும பராமரிப்பு பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். இதனால் சருமம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும். அதிலும் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமம் மிகவும் மென்மையாகிவிடும்.

அதுமட்டுமின்றி, சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை. எப்படியெனில் சர்க்கரையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்யும் போது, சருமத் துளைகள் திறந்து, அதிலுள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்குவதோடு, சரும செல்கள் எளிதில் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.

• அவசரமாக வெளியில் கிளம்பும் போது, சர்க்கரையை தண்ணீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை 5 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், சருமம் சுத்தமாக பொலிவோடு காணப்படும்.

• கிளின்சரில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, ஈரமான துணியால் துடைத்து, பின் நீரில் கழுவலாம். இதனாலும் சருமம் அழகாக ஜொலிக்கும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.

• எலுமிச்சை சாற்றில் சிறிது நாட்டு சர்க்கரையை சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பொலிவுறும்.

• க்ரீன் டீயில் ஆன்டி-ஏஜிங் தன்மை அதிகம் இருப்பதோடு, அது சருமத்தில் பாதிக்கப்பட்டுள்ள திசுக்களை குணமாக்கும் தன்மை கொண்டவை. ஆகவே க்ரீன் டீயில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சரும சுருக்கம் நீங்கி, முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.

• தேங்காய் எண்ணெயில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்யலாம். வேண்டுமெனில், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்க வழிகள்!!!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் சிக்கனமாகவும், நம்மை அழகுப்படுத்திக் கொள்ளலாம். கரும்புள்ளிகள் பெரும்பாலும் முகத்தில் தான் தென்படும். பெரும்பாலும் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில் தான் தென்படும். இந்த கரும்புள்ளிகள் பருக்களாக மாறும்.

ஆகவே 'வரும் முன் காப்போம்' என்னும் பழமொழிக்கேற்ப, அவை பருக்களாக மாறும் முன், சரியான சிகிச்சைகளை மேற்கொண்டால், நிச்சயம் அந்த கரும்புள்ளிகளை போக்குவதோடு, சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

• கருப்பு மற்றும் பச்சை நிறப் புள்ளிகள் இல்லாத உருளைக்கிழங்கை எடுத்து கொண்டு அதை சீவிக் கொள்ளவும். பின்பு அதனை கரும்புள்ளிகள் மீது 15 நிமிடங்கள் தேய்க்கவும். காய்ந்த பின்பு முகத்தை கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 2 நாள்கள் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

• எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினால் கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம்.

• ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதனை மூக்கிலும், கன்னத்திலும் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமின்றி இந்த கலவை சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும்.

• 2 மேஜை கரண்டி தயிருடன், 2 மேஜைகரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் மீது தடவி 10 நிமிடங்கள் காய விடவும். பின்னர் முகத்தை அலம்பவும். இது நல்ல பலனைத் தரும். இதை வாரம் ஒரு முறை செய்யலாம்.

• சிறு துளி ஆலிவ் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகித்தால், அது கரும்புள்ளிகளை நீக்கும். அதற்கு இதனை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவி சில நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் முகத்தை அலம்பவும்.

சப்போட்டா பழம் தரும் அழகு பராமரிப்பு

சப்போட்டா பழத்தில் உள்ள அதிக அளவு பால் தன்மையால், பல் துவாரங்களை நிரப்பும் ஒரு கச்சா பொருளாகப் பயன்படுத்தலாம். சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும். அதிலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் `ஈ' சத்தினால், ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் பெற உதவி செய்கிறது.

எனவே, சப்போட்டா பழம் சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நல்லது. சப்போட்டா விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால், தலைமுடி ஈரப்பதமாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது.

மேலும் இது தலைமுடிக்கு பளப்பளப்பை தருகிறது மற்றும் சுருட்டை முடிக்கு சிறந்தாகக் கருதப்படுகிறது. இந்த எண்ணெயை கூந்தலுக்கு உபயோகப்படுத்துவதால், கூந்தலில் அதிகமாக வழவழப்புத் தன்மை இல்லாமல், எளிதில் உறிஞ்சப்பட்டு முடியை மென்மையாக இருக்க உதவுகிறது

சப்போட்டா விதையின் எண்ணெய் உச்சந்தலைக்கு ஊட்டம் அளித்து, எரிச்சலூட்டும் ஸ்கால்ப்பிற்கு நிவாரணமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியைக் கொடுக்கிறது. மேலும் இந்த எண்ணெய் சரும அழற்சி காரண மாக தலைமுடி உதிர்வதற்கு சிகிச்சையளிப்பதிலும் திறன் மிக்கதாக செயல்படுகிறது.

சப்போட்டா விதைகளை பேஸ்ட் செய்து, அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, பின்பு இதனை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக தேய்க்கவும். பிறகு மறுநாள் காலையில் தலைமுடியை நன்றாக அலசவும்.

இது தலைமுடியை மென்மையாக்கச் செய்து, பொடுகுப் பிரச்சனைக் கூட கட்டுப்படுத்த உதவுகிறது. சப்போட்டா பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்ததுள்ளது.

எனவே, அது உடலில் சீக்கிரம் முதுமை அடையச் செய்யும் மூலக்கூறுகளின் தீவிரத்தை குறைத்து, விரைவில் முதுமை அடைவதை தடுக்கும் பொருளாக விளங்குகிறது. மேலும் இது சுருக்கங்களைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது.

பார்ட்டிக்கு போறீங்களா?

பார்ட்டிக்கு போகும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

ஹேர் ஸ்டைல் :

முதல்ல நாம் முகத்துக்கு எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் பொருந்தும்னு பார்க்கணும். பார்ட்டிக்கு போறப்ப, முன் பக்க முடி கலையாம இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.  ரொம்ப ஸ்பெஷலான பார்ட்டிக்கு தற்காலிக ஹேர் கலர் பண்ணிக்கலாம். இது ஒரு நாள் மட்டும் இருக்கும்.

மேக்கப்:

மிதமான காம்பேக்ட், பவுடர், ஐ லைனர், காஜல், லிப்ஸ்டிக் அவசியம். இடத்துக்கும், பார்ட்டிக்கும் ஏத்தபடி இதையே இன்னும் அதிகமாக போட்டுக்கலாம். டிரெடிஷனல் பார்ட்டின்னா பொட்டு வச்சுக்கலாம். வெஸ்டர்ன் பார்ட்டிக்கு தேவையில்லை நகங்களை அழகாக ஷேப் பண்ணி, மேட்ச்சிங் நெயில் பாலீஷ் போடனும். அது பிடிக்காதவங்க நகங்களை சின்னதா வெட்டி நகங்களோட நிறத்துல நெயில் பாலீஷ் போட்டுக்கலாம்.

உடை:

சேலை கட்டுறவங்களாக இருந்தா சேலையை மட்டுமில்லாமல் உள் பாவாடையும் இஸ்திரி செய்து தான் கட்டணும். மெல்லிசான மெட்டீரியல்ஸ், ஃபிஷ் கட் உள்ள பாவாடைகள் சேலை கட்டறவங்களோட உடம்பை அழகான ஷேப்ல காட்டும்.

குண்டானவங்களுக்கு மெல்லிசான சாஃப்ட் சில்க் மற்றும் காட்டன் புடவைகள் அழகாக இருக்கும் சேலையே கட்டத் தெரியாது ஆனா பார்ட்டிக்கு சேலை தான் கட்டியாகணும்னு நினைக்கிறவங்க இப்ப பிரபலமா இருக்கிற ரெடிமேட் புடவைகளை கட்டலாம்.

மடிப்போ, பட்டையோ வைக்க வேண்டிய அவசியமில்லாம அப்படியே உடுத்திக்கிற சேலை அது. சேலை கட்டத் தெரிஞ்சா மட்டும் போதாது. முந்தானையை அழகா முழங்கைல தாங்கிப் பிடிக்கிற ஸ்டைலும் முக்கியம். சல்வார் போடறவங்களாக இருந்தா அனார்கலி மாடலை தேர்ந்தெடுக்கலாம்.

ஹை நெக், பேன்ட் அடில நிறைய சுருக்கம், கண்ணாடி மாதிரி துப்பட்டா... இது தான் இப்ப ஃபேஷன். துப்பட்டாவை கழுத்தோட ஓட்டி போடணும். அதுக்குக் கீழே தான் நகைகள் தெரியணும். வெஸ்டர்ன் டிரெஸ் போட நினைக்கிறவங்க கையில்லாததும், இறக்கமான கழுத்து வச்சதையும் தவிர்த்து நீளமான டாப், அதுக்கேத்த பேன்ட் அல்லது ஸ்கர்ட் அணியலாம்.

நகைகள்:

பெரிய மோதிரம் போடறது இப்ப ரொம்ப பிரபலம். ஒரு கைல வாட்ச் இன்னொரு கைல வளையல் போடலாம். ரெண்டு கைகளுக்கும் வளையல் போடறது ஹோம்லியான தோற்றத்தை தரும்.

செருப்பு:

லேசா ஹீல்ஸ் வச்ச செருப்புகள் ஒருத்தரோட தோற்றத்தையே மாத்திக்காட்டும். பார்த்து பார்த்து டிரெஸ்சையும் மேக்கப்பையும் பண்ணிட்டு செருப்பு விஷயத்துல அலட்சியம் கூடாது.

பார்ட்டிக்குனு தனியா சில செட் ஸ்பெஷல் செருப்புகள் வச்சிருக்கிறது அவசியம். நீளமான கை வச்ச டிரெஸ், டார்க் நிற நெயில் பாலீஷ், பளபள கல் வச்ச நகைகள் மாட்டல், பெரிய பொட்டு, இதெல்லாம் பார்ட்டிக்கு வேண்டவே வேண்டாம்.

சரும அழகிற்கு ‘கொலோஜின்’

முப்பது வயதைக் கடக்கும் போது சருமத்தில் சுருக்கங்களும், படைகளும் தோன்றுகின்றன. ரத்த ஓட்டம் குறைவதும், கொலோஜின் உடலில் குறைவதும்தான் இதற்கான காரணம். இந்த குறைபாடுகளை களைந்து சருமத்திற்கு இளமையையும், அழகையும் தருவது கொலோஜின் சிகிச்சை.

இந்த அழகு சிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது தெரியுமா?

டீஹைட்ரேட்டிங் கிளன்சர் பயன்படுத்தி சருமத்தை முதலில் சுத்தம் செய்வார்கள். தொடர்ந்து டீடாக்சிபையிங் எக்ஸ்போலியேட்டர் கிரீம் பயன்படுத்தி முகம், கழுத்துப் பகுதி சருமத்தை நன்றாக ஸ்கிரப் செய்வார்கள். கண்களை சுற்றியுள்ள பகுதியை மிக மென்மையாக கையாண்டு ஸ்கிரப் செய்யவேண்டும்.

இவ்வாறு செய்வதால் செயலிழந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சி பெறும். நாலைந்து நிமிடங்களுக்கு பிறகு பஞ்சை பயன்படுத்தி இந்த கிரீமை துடைக்கவேண்டும். சருமத்தில் வெள்ளை, கறுப்பு புள்ளிகள் இருந்தால் அவைகளையும் நீக்க வேண்டும். அடுத்து கொலோஜின் கிரீம் பயன்படுத்தி சருமத்தை மேல் நோக்கி நன்றாக மசாஜ் செய்யவேண்டும்.

இந்த கிரீமில் கிளிசரின், திராட்சை பழத்தின் சக்தி இருக்கும். பின்பு கோலோஜின் ‘பேக்’ போடவேண்டும். மோய்சரைசர், ஒயிட்னிங் சீரம், வைட்டமின் சி மற்றும் திராட்சை சாறு அடங்கிய பேக்கை முகம் மற்றும் கழுத்தில் பூசவேண்டும். 15-20 நிமிடங்களில் கழுவி விடுவது அவசியம். பின்பு முகத்திற்கு ‘கூல் கம்பிரஷன்’ கொடுப்பார்கள்.

இந்த சிகிச்சையை முடித்துவிட்டு சன்ஸ்கிரீம் லோஷன் பூசிய பின்பே வெளியே கிளம்பவேண்டும்.

கவனிக்கத் தகுந்த விஷயங்கள்:

இந்த அழகு சிகிச்சைக்கு பிறகு ஒரு மாதம் வரை ஆன்டி ஆக்சிடென்ட் அடங்கிய பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்க்கவேண்டும். வைட்டமின் கேப்ஸ்யூல்களும் உட்கொள்ளலாம்.

காலை உணவுக்கு பிறகு பி காம்ப்ளக்ஸ், மதிய உணவுக்கு பிறகு வைட்டமின் சி, இரவு உணவுக்கு பிறகு வைட்டமின் ஈ போன்ற மாத்திரைகளை உடல் நிலைக்கு தகுந்தபடி உட்கொள்ளலாம். வாரத்தில் ஒருநாள் வீட்டிலே ‘ஸ்கின் புட் சிகிச்சை’ மேற்கொள்ளலாம்.

இதற்கு தேவைப்படும் கிரீமை வீட்டிலே தயாரிக்கலாம். மூன்று பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்து தோலை நீக்கிவிட்டு, அரையுங்கள். அரை தேக்கரண்டி ஓட்ஸ் பவுடர், அரை தேக்கரண்டி முட்டை மஞ்சள் கரு, நான்கு சொட்டு தேன் போன்றவைகளை பாதாம் அரைப்புடன் சேர்த்து கலந்திடுங்கள்.

அதிகமாக வறண்ட சருமம் என்றால், சிறிதளவு பாலாடை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த கிரீமை முகத்திலும், கழுத்திலும் பூசவேண்டும். 15 நிமிடங்கள் கடந்ததும், மீண்டும் ஒருமுறை பூசவேண்டும். அடுத்த பதினைந்து நிமிடங்களில் கழுவவேண்டும். இதை பயன்படுத்தினால் சருமம் பொலிவு பெறும். சுருக்கங்களும் நீங்கும்.

புடவைக்கு அழகு சேர்க்கும் ஜாக்கெட் டிசைன்கள்


மற்ற உடையை விட, புடவையில் தான் பெண்கள் மிகவும் அழகாகவும், பாரம்பரியத் தோற்றத்திலும் தெரிவார்கள். மேலும் செக்ஸியான உடையும் புடவை தான். அதிலும் விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவையை அணிந்தால், அந்த விழாக்களில் கலந்து கொள்வோரின் மனதில் நல்ல பெயரைப் பெறலாம்.

தற்போது பல்வேறு டிசைன்களில் புடவைக்கு ஜாக்கெட்டுகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமானதாக இருந்தாலும், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். எந்த உடைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் போடலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து, அதன் படி நடந்து ஃபேஷனாகவும், பாரம்பரிய தோற்றத்திலும் மின்னுங்கள்.

• டபுள் கலர் ஜாக்கெட்:

இது இரட்டை நிறங்கள் கலந்தவாறான ஜாக்கெட். இந்த ஜாக்கெட்டில் கைகளுக்கு ஒரு நிறமும், உடலுக்கு ஒரு நிறமும் வைத்து தைக்கப்படும் ஒரு டிசைன். இது அதிகப்படியான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவைக்கு பொருத்தமாக இருக்கும்.

• கருப்பு மற்றும் கோல்டன் நிற ஷீர் ஜாக்கெட்:

ஷீர் டைப் பிடிக்குமானால், இந்த மாதிரியான ஸ்டைலில் ஜாக்கெட்டை மேற்கொள்ளலாம்.

• பஃப் ஜாக்கெட்:

இப்போது பஃப் கை வைத்த ஜாக்கெட்டுகள் பல விதமாக டிசைன்களில் கிடைக்கிறது. இந்த முறையில் வித்தியாசமாக பஃப் கொண்ட ஜாக்கெட்டை அணியலாம்.

• மின்னும் ஜாக்கெட்:

இது மற்றொரு ஸ்டைலான ஜாக்கெட். இந்த ஜாக்கெட்டின் ஸ்பெஷல் என்னவென்றால், இது சில்வர் மற்றும் கோல்டன் கலந்து மின்னுவதால், இதனை சில்வர் மற்றும் கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அனைத்து புடவைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.

• வெல்வெட் ஜாக்கெட்:

வெல்வெட் ஜாக்கெட் ஒரு ஸ்டைலான லுக்கை கொடுக்கும். அதிலும் இந்த ஜாக்கெட்டின் முனைகளில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால், இது ப்ளைனான அல்லது அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவைக்கு பொருத்தமாக இருக்கும்.

• ஷீர் லேஸ் ஜாக்கெட்:

புடவையை வித்தியாசமான முறையில் அணிய நினைத்தால், ஷீர் லேஸ் கொண்ட ஜாக்கெட் அணிந்தால், அது புடவையின் தோற்றத்தையே மாற்றும்.

• ஃபுல் நெக்லைன் ஜாக்கெட்:

இந்த ஜாக்கெட் பார்த்தால், இதன் கழுத்து மேலே ஏறியும், முக்கால் கை கொண்டும் இருக்கும். இந்த மாதிரியான ஸ்டைலை, பல்வேறு நிறங்கள் கொண்ட புடவைக்கு மேற்கொள்ளலாம்.

• கோல்டன் ஜாக்கெட்:

தங்க நிறம் கொண்ட புடவைக்கு, காலர் கொண்டவாறான கோல்டன் ஜாக்கெட்டை அணிந்தால், அது ஒரு ஹை லுக்கை கொடுக்கும்.

• நீள்வட்ட ஜாக்கெட்:

இந்த ஜாக்கெட்டின் ஸ்பெஷலை பார்த்தால், இதன் கழுத்து நீள்வட்ட வடிவில் இருக்கும். மேலும் முழுக் கை கொண்டிருக்கும்.

நெயில் ஆர்ட் வீட்டிலேயே போடும் முறை


1. வீட்டிலேயே நக கலையை மேற்கொள்ள முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது உங்கள் நகத்தின் நிலையை தான். ஒவ்வொரு தருணத்திலும் நக கலையின் மீது கவனம் செலுத்த வேண்டும். அதன் விளைவுகளையும் ஒவ்வொரு தருணத்திலும் குறித்து கொண்டே வாருங்கள்.

நகங்களின் நிலையை அறிந்து கொள்ள முதலில் உங்கள் நகங்களை வழுவழுப்பாக மாற்றி அதன் மீது புறத்தோலை மென்மையாக்கும் சொல்யூஷனை தடவுங்கள். பின் உங்கள் கைகளை சோப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இது நக கலையை அதிக நாட்களுக்கு நீடிக்க செய்யும்.

2. இரண்டாவதாக நீங்கள் செய்ய வேண்டியது நகங்களின் ஒரு பேஸ் கோட் அடிப்பது. நக கலையை அதிக நாட்களுக்கு நீடிக்க செய்வதால் பேஸ் கோட் மிகவும் முக்கியமானதாகும். மேலும் கறைகள் ஏதும் ஏற்படாமல் நகங்களை அது பாதுகாக்கும். பேஸ் கோட்டை ஒழுங்காக செய்யாவிட்டால் உங்கள் நகங்களில் மஞ்சள் கறைகளை ஏற்படுத்தி விடும். அதனால் சரியான பேஸ் கோட்டை பயன்படுத்த தவறாதீர்கள்.

3. மூன்றாவதாக உங்களுக்கு பிடித்த நிறத்தில் நக பூச்சை தேர்ந்தெடுங்கள். நிறத்தை தேர்ந்தெடுக்கும் போது அதிக கவனம் தேவை. உங்கள் உடல் நிறத்திற்கு ஏற்றார் போல் ஒரு நிறத்தை தேர்ந்தெடுங்கள். உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்தால் நல்ல தோற்றத்தை அளிக்கும். இவ்வகை நிறங்களை நீங்கள் அலுவலகத்துக்கு செல்லும் போதும் சரி, இரவு பார்டிக்கு செல்லும் போதும் சரி பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. தேர்ந்தெடுத்த நக பூச்சினை இரண்டு கோட்டிங் போட்டு கொள்ளுங்கள். போடும் போது ப்ரஷ் உங்கள் நக புறத்தோல்களுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை ப்ரஷ், புரத்தோல்களை தொட்டால் கூட, குளிக்கும் போது அது போய் விடும். அதன் பின் தடவிய பாலிஷை சிறிசு நேரம் காய விடுங்கள். இதனால் உங்களின் நகத்தில் செய்யப்பட கலை அதிக நாட்களுக்கு நீடிக்கும்.

5. அதன் பின் உங்களின் பளபளப்பு பாலிஷை எடுங்கள். முடிந்த வரை பிரஷில் உள்ள பாலிஷை எடுக்க விடுங்கள். வெறுமனே அந்த பளபளப்பு மட்டுமே அதில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். அதன் பின் அதை வைத்து உங்கள் நகங்களில் சின்ன சின்ன கலைகளை வரைந்து கொள்ளுங்கள்.

6. பிரஷை மீண்டும் ஒரு முறை ஈரமாக்கி, உங்கள் நகங்களில் தேவைக்கு அதிகமாக ஒட்டியிருக்கும் நக பாலிஷை நீக்குங்கள். கடைசியாக பிரஷில் பாலிஷை தடவி நக நுனியில் பிரெஞ்சு டிப் முறைப்படி தடவுங்கள். கடைசியாக நீங்கள் செய்ய வேண்டியது கூடுதலாக ஒரு கோட்டிங் கொடுப்பது மட்டும் தான். கடைசியாக கொடுக்கும் கோட்டிங் உங்களின் நக கலையை நீண்ட மாதங்களுக்கு நீடிக்க செய்யும்.

ஹேர் எக்ஸ்டென்ஷன் மோகம்

ஹேர் கலரிங் வந்ததும் கருப்பான கூந்தல் மோகம் காணாமல் போனது. இயல்பாக கருகரு கூந்தல் உள்ளவர்கள் கூட, அதை செம்பட்டையாகவும் டார்க் பிரவுன் நிறத்திலும் மாற்றிக்கொள்ள ஆரம்பித்தார்கள். கலரிங் பத்திப் பேசறதுக்கு முன்னாடி ஹேர் எக்ஸ்டென்ஷனோட பலன்களைப் பார்த்துடலாம்.

இன்னிக்கு கூந்தலை பராமரிக்க யாருக்கும் நேர அவகாசமோ, பொறுமையோ இருக்குறதில்லை. பல விதமான காரணங்களால் எல்லாருக்கும் முடி கொட்டுது. தலையில் முடி இல்லை என்று கவலைப்படுபவர்களுக்காக இப்போது வரப்பிரசாதமா வந்திருக்கிற சிகிச்சைதான் ஹேர் எக்ஸ்டென்ஷன்.

விக், சவுரி முடி, உபயோகிக்கிறதுல உள்ள நடைமுறை சிக்கல் இதுல கிடையாது. ஏற்கனவே உள்ள முடியோட, செயற்கை முடியை தச்சு விடறது. ஒட்டி விடறது. கிளிப் டைப்ல ஃபிக்ஸ் பண்றதுனு இதுல நிறைய வகைகள் இருக்கு. அவங்கவங்க தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏத்தபடி எதை வேணாலும் தேர்ந்தெடுக்கலாம்.

அழகு நிலையத்திற்கு வந்து ஹேர் எக்ஸ்டென்ஷன் பண்ணிக்கிட்டா போதும். நீங்களா சொன்னாலொழிய யாருக்கும் அது செயற்கை முடிங்கிற விஷயம் தெரியாது. இழுத்தா வராது. திடீர்னு கழண்டு விழுந்துருமோங்கிற பயம் வேண்டாம். சுத்தமாக பராமரித்தால் மட்டும் போதும்.

இதோ ஹேர் எக்ஸ்டென்ஷன் முறையில் பண்றது தான் இந்த லேட்டஸ்ட் கலரிங்கும். ஒரிஜினல் முடியில் கலரிங் பண்ண வேண்டாம்னு நினைக்கிறவங்களுக்கும், பார்ட்டி மாதிரி ஒரு நாள் கூத்துக்கு கலரிங் பண்ண நினைக்கிறவங்களுக்கும் தான் இந்த ஹேர் எக்ஸ்டென்ஷன்.

டிரெஸ்சுக்கு மேட்ச்சா சிகப்பு, நீலம், பச்சை, மஞ்சள், காப்பர், வயலட், பிளான்ட், கோல்ட்னு எல்லா கலரும் இருக்கு. கல்யாணப்பெண்கள் மத்தியில் இதுக்கு மவுசு அதிகம். ஸ்ரெயிட்டனிங் பண்ணின மாதிரி சுருள், சுருளா அலை அலையா எப்படி வேணாலும் பண்ணிக்கலாம்.

இயற்கை முறையில் சரும பராமரிப்பு

வெள்ளரிக்காய்:  

வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும் என்று பாட்டிகள் சொல்வார்கள். எனவே தான் இப்போதும், எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும், முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.

முகத்தை கழுவுதல் :

முகத்தை தினமும் மூன்று முதல் நான்கு முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

ஆவிப் பிடித்தல் :

ஆரம்ப காலத்தில் ஸ்கரப் மற்றும் அழகுக்கு என்ற சிகிச்சைகள் இருக்காது. ஆகவே அப்போது பெண்கள் ஆவி பிடித்துதான், அழகைப் பராமரித்து வந்தார்கள். எனவே முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு ஆவிப் பிடித்தால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

பழங்கள் :

கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும். அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ரா பெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.

சூப்பர் மாய்ஸ்சுரைசர் :

சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.

கடுகு எண்ணெய் :

கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு, வாக்ஸிங் செய்வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக, தினமும் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு, மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், கைகள் மென்மையாக, முடியின்றி இருக்கும். இதனால் தான் நமது பாட்டிகளின் கைகள் மற்றும் கால்களில் முடி இல்லாமல் இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் காணப்படுகின்றனர்.

தக்காளி தரும் சரும அழகு


பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம்.

* தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும்.

* ஒரு சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.

* தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

* உருளைக்கிழங்கு துருவல் சாறு 1 தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து தக தகவென்று மின்னும்.

* சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டதா? தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இவ்வாறு தொடந்து செய்து வந்தால் உங்கள் சருமம் மிருதுவாவதை காணலாம்.

* தக்காளிச் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும். இதுதான் இயற்கை ஸ்கரப்பாக உபயோகிக்கலாம்.

கழுத்து கருமையை போக்க வழிகள்

சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும்.. அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது.

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து வாராம் 3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து குளிக்கலாம்.

* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும். * பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் – இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் மறையும்.

* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். கடலை மாவு தயிர் கலந்தும் தடவலாம். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் தான் பலன் கிடைக்கும்.

பிரகாசமான முகத்திற்கு ஆல்கஹால் ஃபேசியல்

ஆல்கஹாலை ஃபேசியல் செய்வதற்கு பயன்படுத்தினால் சருமத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். சொல்லப் போனால் அதை அழகுச் சாதனப் பொருட்கள் என்றும் கூறலாம். உண்மையில் ஆல்கஹால் சருமத்திற்கு ஒரு நல்ல பொலிவைத் தருகிறது.

1. ஒயின் ஃபேசியல்:

ஆல்கஹாலை வைத்து ஃபேசியல் செய்வதில் ஒயின் ஃபேசியல் மிகவும் சிறந்தது. இந்த ஒயினை வைத்து ஃபேசியல் செய்தால் சருமமானது ரிலாக்ஸ் ஆகும். மேலும் இதை தலைவலியானது அதிகம் இருக்கும் போது அருந்தினால், தலைவலியானது உடனடியாக சரியாகிவிடும்.

ஒயினானது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அடக்கியுள்ளது. இத்தகைய ஒயினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து பூசும் போது, இது சருமத்தில் ஊடுருவிச் சென்று பொலிவைத் தருகிறது. இந்த ஃபேசியலை செய்வதால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் எளிதில் வெளிவந்துவிடும்.

2. பீர் ஃபேசியல்:

பீர் ஆனது கூந்தலுக்கு மட்டும் பளபளப்பைத் தருவதில்லை, முகத்திற்கும் பளபளப்பைத் தருகிறது. 2 டேபிள் ஸ்பூன் பீரை தேன் மற்றும் வினிகருடன் கலந்து முகத்திற்கு தடவி வந்தால் முகமானது பளபளப்புடன் மின்னும். மேலும் பீரில் சருமத்திற்கு ஏற்ற வைட்டமின் பி இருக்கிறது. இது முகத்தில் குளிர் இல்லது மழை காலத்தில் வறட்சியால் ஏற்படும் வெடிப்பை சரிசெய்து, முகத்திற்கு அழகைத் தருகிறது.
3. வோக்கா ஃபேசியல்:

வோக்கா என்பது நீர்நிலையில் பிடிக்கும் புகையிலை. இந்த வோக்காவை ஐஸ் கட்டியாக செய்து தான் ஃபேசியல் செய்ய வேண்டும். மேலும் இதை வைத்து ஃபேசியல் செய்வது மிகவும் குறைவு. இதற்கு முதலில் புதினா டீ மற்றும் ரோஸ் டீ-யை தனியாக செய்து கொள்ளவும்.

பின் அதோடு 2 டேபிள் ஸ்பூன் வோக்கா மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து கட்டிகளாக்கி, முகத்தில் தேய்த்துக் கொள்ளவும். இது முகத்திற்கு ஏற்ற இளமைப் பொலிவைத் தருகிற ஒரு ட்ரிக் ஆகும்.

4. விஸ்கி ஃபேஸ் பேக்:

விஸ்கி ஒரு ஆன்டிசெப்டிக் பொருள். இது முகத்தில் இருக்கும் சுவடுகளை எளிதில் நீக்கும் திறன் கொண்டது. மேலும் முகத்தில் பரு, கட்டி, கொப்புளம் இருப்பவர்கள், இந்த விஸ்கி ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

இதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் விஸ்கியை ஊற்றி முகத்திற்கு தடவ வேண்டும். மேற்கூறிய ஃபேசியல்களை செய்து பாருங்கள், முகமானது பளபளப்புடன் இருப்பதோடு, முகமும் அழகாக இருக்கும்

வாகனத்தில் செல்பவர்களுக்கு சரும பராமரிப்பு


தற்போது பெண்கள் கூட அலுவலகத்திற்கு பைக்கில் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்படி பைக்கில் செல்பவர்கள், தவறாமல் சருமம் மற்றும் கூந்தலை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக் கூடும்.

ஏனெனில் பைக்கில் செல்பவர்கள் காற்று, சூரிய வெப்பம், மழை என்று எந்த காலநிலையிலும் ஓட்டுவதால், அவர்கள் ஒருசிலவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக பைக்கில் பயணிப்பவர்கள் முகப்பரு, பிம்பிள், பழுப்பு நிற சருமம் என்று பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

அதுமட்டுமின்றி அவர்களது கூந்தல், மென்மையிழந்து வறட்சியாக இருக்கும். பைக்கில் பயணம் செய்பவர்கள் கீழ்காணும் முறைகளை பின்பற்றி வந்தால் சருமத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் வராமல் தடுக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

• கிளின்சிங்கை தினமும் தவறாமல் செய்து வர வேண்டும். இதனால் அது சருமத்துளைகளைத் திறந்து, அதில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கிவிடும். அதற்கு ரோஸ் வாட்டர் அல்லது பாலை, பஞ்சுருண்டையில் நனைத்து, முகம் மற்றும் கைகளை துடைக்க வேண்டும். இதனால் சருமம் மாசுபடுவதை தவிர்க்கலாம்.

• கிளின்சிங்கை தொடர்ந்து டோனிங் செய்ய வேண்டும். டோனிங் செய்வதால் முகப்பரு நீங்குவதோடு, திறந்த சருமத்துளைகள் மூடும். அதற்கு பழங்கள் அல்லது காய்கறிகளின் சாற்றினை, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

• பெண்கள் பைக் ஓட்டும் போது சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவதை நிறுத்தக் கூடாது. குறிப்பாக கண்கள், முகம், கழுத்து, முழங்கை, காது மற்றும் பாதங்களுக்கு மறக்காமல் தடவ வேண்டும். இதனால் சூரியனின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும். சன் ஸ்க்ரீன் தடவிய பின்னர், ஃபௌண்டேஷனை ஒரு கோட்டிங் கொடுக்க வேண்டும்.

• பைக் ஓட்டும் போது, காற்று மற்றும் மாசுக்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு, கை மற்றும் முகத்திற்கு ஸ்கார்ப் கட்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில் பைக் ஓட்டும் போது, தூசிகள் அதிகம் சருமத்தில் பட்டால், பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே முகத்திற்கு துணியையும், கைகளுக்கு மறக்காமல் கிளவுஸையும் அணிந்து கொள்ள வேண்டும்.

• பைக் ஓட்டும் போது ஹெல்மெட் போடும் முன், தலையில் துணியை கட்டிக் கொள்ள வேண்டும். பெண்கள் பைக் ஓட்டும் போது முடியை விரித்துக் கொண்டு இல்லாமல், கூந்தலை கட்டிக் கொண்டு, துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம்.

• பைக் ஓட்டியப் பின், தவறாமல் தலையை சீவ வேண்டும் மற்றும் முகத்தை 3-4 முறை நன்கு கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்

பெண்கள் விரும்பும் கொலுசு

அணிகலன்கள் அணிவதில் பெண்களுக்கு அலாதி பிரியம் உண்டு. கொலுசு அணிவதில் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே தனி. கொலுசுக்கு இந்தியாவில் வரலாற்று பாரம்பரியமும், பின்னணியும் உண்டு. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

வெள்ளியால் நகை ஒவ்வாமை பிரச்சனை ஏற்படாது. பழங்காலத்தில் பெண்கள் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான காப்பு போன்ற கொலுசுக்களை அணிந்து வந்தனர். இந்தியாவில் குழந்தைகளக்கு கொலுசு அணிவிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

குழந்தையின் அசைவுகளை உறங்கும் போதும், விழித்து இருக்கும் போதும் கொலுசு ஒலி, தாய்க்கு அறிவிக்கும். அந்த காலத்தில் இளவயது பெண்கள் கொலுசு அணிய மாட்டார்கள். திருமணமான பெண்கள் மட்டுமே அணிந்து வந்துள்ளனர்.

தங்களுக்கு திருமண செய்தியை கால் கொலுசு சத்தம் மூலம் பிறருக்கு தெரிவிப்பதாக அறியப்பட்டு வந்தது. திருமண சடங்குகளில் மணப்பெண் கொலுசு அணிவது ஒரு முக்கிய மரபு. சின்ன சின்ன முத்துக்கள், சிறிய சலங்கைகள், பின்னல்வேலைப்பாடுகள் கொண்ட கொலுசுகள் பழைய மாடலாகிவிட்டன.

தற்போது கொலுசுகள் எளிமையான வேலைப்பாடுகளுடன் மெல்லிய சங்கிலி போல வடிவடைக்கப்படுகின்றன.  மெட்டியையும், கொலுசையும் இணைத்து ஒரு வடிவம் கொடுத்துள்ளார்கள். முன்பு கொலுசுகள் புடவையுடன் அணியப்பட்டு வந்தன. தற்போது நவீன உடைகளுக்கு ஏற்ப நவீன பாணி கொலுசுகளை அணிகிறார்கள்.

ஒரே காலில் சில பெண்கள் 2 விதமான கொலுசுகளை அணிகிறார்கள். தங்கள், வெள்ளி கொலுசுகள் மட்டுமல்லாமல் தோல், பிளாஸ்டிக், நைலான், சாதாரண நூல் என பலவகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கொலுசுகளையும் பெண்கள் அணிகிறார்கள்.

தங்கம், வெள்ளியில் செய்யப்படும் கொலுசுகள், சின்ன சின்ன முத்துக்கள் சேர்க்கப்பட்டு மெல்லிய சங்கிலியால் இணைக்கப்பட்டு இருக்கும். செயற்கை கற்கள், குந்தன் கற்கள், சூறை மணிக்கற்கள் (செமிபிரிசியஸ்) பதித்து செய்யப்படும் தண்டைகள், பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.

சிறிய கண்களுக்கான மேக் அப் டிப்ஸ்

நமது முகத்தில் கண்கள் தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாகமாகும். நீங்கள் மனதில் நினைப்பதை உங்கள் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். நமது உணர்ச்சிகள் நல்லவையாக இருந்தாலும் சரி, கெட்டவையாக இருந்தாலும் சரி, நமது கண்கள் அதனை வெளிப்படுத்தும்.

சிறிய கண்களை பெரிதாக வெளிப்படுத்த.. கண்களுக்கான மேக் அப் டிப்ஸ்... சிறிய கண்களை உடையவர்களுக்கு கண்கள் பெரிதாக காட்டுவதற்கான சில ஒப்பனை டிப்ஸ்களை இப்பொழுது பார்க்கலாம்.

• மஸ்காராவை பயன்படுத்தி சிறிய கண்களை அழகாக மாற்றலாம். பொதுவாக, சிறிய கண்களின் கண் ஒப்பனைக்கு திக் மஸ்காரவை பயன்படுத்தவேண்டும். இந்த மஸ்காரா இமைகளை தடித்து காட்டி கண்களுக்கு மேலும் அழகு சேர்க்கும். கண் மஸ்காராவை மேல் மற்றும் கீழ் இமைகளுக்கும் பயன்படுத்தவேண்டும். எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகின்றோமோ நமது கண்களை அவ்வளவு அழகாக வெளிக்காட்டும்.

• சிறிய கண்களுக்கான ஒப்பனைகளில் ஒன்று இந்த ஐ லைனர். நமது கண்களை திருத்தி சீரான வடிவத்தை கொடுக்கும். மென்வண்ணம் அல்லது வெள்ளை ஐ லைனர்களை பயன்படுத்தினால் கண் மஸ்காராவை மேலும் எடுத்துக்காட்டும். அடர் வண்ண ஐ லைனரையும் பயன்படுத்தலாம். இரண்டையும் முயற்சி செய்து உங்கள் கண்களுக்கு எது பொருத்தமாக இருகின்றதோ அதை பயன்படுத்துங்கள்.

• ஐ ஷேடோ நமது கண்களை மிகவும் அழகாகக் காட்டும் கண் ஒப்பனைகளில் ஒன்றாகும். மாலை வேளைகளில் அடர் நிறங்களான கிரே, கருப்பு, ஊதா போன்றவற்றையும் மதிய வேளைகளில் ரோஸ், பழுப்பு மற்றும் மரூன் நிறங்களையும் பயன்படுத்தவேண்டும். இளம் பெண்களுக்கு அடர் நிற ஐ ஷேடோக்கள் அழகாக இருக்கும். நாம் அணிந்திருக்கும் உடைக்கும் ஆபரணங்களுக்கும் பொருத்தமான ஷேடோக்களையே பயன்படுத்தவேண்டும்.

• ஃபௌண்டேஷன் அல்லது ஐ ஷேடோ பயன்படுத்துவதற்கு முன்பு ப்ரைமர் பயன்படுத்த வேண்டும். அது நமது ஒப்பனை வெகு நேரம் வரை கலையாமல் இருப்பதற்கு உதவும். ஃபௌண்டேஷன் மற்றும் கன்சீலர்கள் நமது கண்ணின் கருவளையங்கள் மற்றும் பல குறைபாடுகளையும் குறைக்கச் செய்யும்.

• ஷிம்மர் பவுடர் சிறிய கண்களை பளிச்சிடச் செய்யும் ஒப்பனைகளில் ஒன்றாகும். இவை சிறிய கண்களால் கன்னங்கள் பெரிதாகக்காட்டுவதைத் தடுக்கும். இவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் அதிகமாக பயன்படுத்தினால் உங்கள் முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். இவை அனைத்தும் சிறிய கண்களுக்கான ஒப்பனை டிப்ஸ்களாகும். இரவு படுக்கச் செல்லும் முன்பு கண்டிப்பாக கண் ஒப்பனையை கலைக்க வேண்டும். நல்ல தரமான ஒப்பனை பொருட்களையே பயன்படுத்தவேண்டும். 

கருப்பான பெண்கள் நிறமாக மாற

கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன….?

பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத்.

பழ பேஷியல்

முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.

காய்கறி பேஷியல்

முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.

மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.

நன்கு அடித்த பூவன் வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.

குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.

வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய


உடல் எடை குறைய

மிக பெரிய பிரச்சனை மற்றும் மன அழுத்தத்தை தருவது குழந்தை பிறந்தப்பின் அம்மாக்களுக்கு ஏற்படும் உடல் பருமன். குழந்தை பேறு என்பது ஒரு தாய்க்கு அடுத்த பிறவி என்பார்கள். குழந்தை பேற்றால் நம் உடலில் பல வித மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் முதலில் இருப்பது நம் உடலின் எடை. மிக சிலர் மட்டுமே எப்போதும் போல் இருப்பார்கள், அதற்கு குடும்பவழி காரணமாக இருக்கலாம். ஆனால் 99% பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். அதற்கான காரணங்கள் :-

1. இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றங்கள்

2. குழந்தையை கவனிப்பதில் நம்மை நாம் கவனித்துக்கொள்வதில்லை

3. குழந்தைக்காக நன்றாக சாப்பிடவேண்டும் என்று சாப்பிட்டு சாப்பிட்டே நம் வயிற்றின் கொள்ளளவு அதிகமாகிவிடுகிறது.

4. அதிகமான உடல் உழைப்பு இல்லாமல் போவது.

அடிவயிற்று சதையை மட்டும் குறைக்க (குறிப்பாக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள்) வீட்டிலேயே செய்யும் எளிதான உடற்பயற்சிகளை குறிப்பிடுகின்றேன். இதை செய்யவதற்கு முன்

1. உடற்பயற்சி செய்யும் போது, மிகவும் வேதனைப்படும் அளவு வலி இருந்தால் நிறுத்திவிடவேண்டும்.

2. வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு செய்யக்கூடாது. திட உணவு சாப்பிட்டு குறைந்த பட்சம் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். திரவ உணவு சாப்பிட்டால் குறைந்தபட்சம் 1/2 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்

3. உடற்பயிற்சி முடிந்தவுடன் சாப்பாடு சாப்பிடக்கூடாது. குறைந்தபட்சம் 1/2 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.

4. தண்ணீர் நிறைய குடிக்கலாம், அதுவும் சுடத்தண்ணீராக இருந்தால் நலம்.

5. பயிற்சியின் எண்ணிக்கையை படிப்படியாக தான் உயர்த்த வேண்டும், நமக்கு வேகமாக குறைக்க வேண்டும் என்று, கடுமையாக செய்யக்கூடாது.

கீழ்கண்ட படத்தில் இருப்பது போன்று படிப்படியாக செய்து பாருங்கள்.
aaa

1. தரையில் விரிப்பு ஏதாவது போட்டு நேராக படுத்துக்கொள்ளுங்கள்

2. இடது காலை மட்டும் மெதுவாக மேலே தூக்குங்கள். முடிந்தவரை தூக்கிவிட்டு இறக்கிவிடுங்கள்.

3. அடுத்து வலது காலை மெதுவாக மேலே தூக்குங்கள். மெதுவாக இறக்கிவிடுங்கள்.

இதை வேகமாக செய்யக்கூடாது, மிகவும் மெதுவாக செய்யவேண்டும். அப்போது தான் தசைகளுக்கு நல்லது.

இதில் படம் 2, 3 ல் காட்டியுள்ள உடற்பயிற்சிகளை மட்டும், முதலில் ஒரு 5 முறை மேலே தூக்கி இறக்குமாறு எண்ணிக்கை வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு கால்களும் சேர்ந்து மொத்தம் 10 முறை. இதனை குறைந்தபட்சம் 7 நாட்கள் தொடர்ந்து செய்துவாருங்கள். 5 என்ற எண்ணிக்கை 10 ஆக்கி கொள்ளலாம். உங்களால் நன்றாக சுலபமாக வலியில்லாமல் கால்களை தூக்கி இறக்க முடிந்தவுடன், படம் 4 ஐ முயற்சி செய்யுங்கள்.

4. இரண்டு கால்களையும் ஒரு சேர மெதுவாக தூக்கி, ஒரு சேர மெதுவாக இறக்குங்கள். இப்படி தினமும் உங்களால் முடிந்த அளவு விடாமல் செய்து வந்தால் அடிவயிற்று சதை கொஞ்சம் கொஞ்சமாக கண்டிப்பாக குறையும்

5. எப்போது உடற்பயற்சி செய்தாலும் கடைசியில் ஒரு நிமிட அளவு உடலில் எந்த அசைவும் இல்லாமல், கண்களை மூடி அப்படியே படுத்து இருந்துவிட்டு எழுந்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக படம் 6 இல் காட்டி இருப்பது போல் எப்போது எல்லாம் தரையில் உட்காருகிறீர்களோ அப்போது எல்லாம் கால்களை குத்திட்டு, கைகளால் இறுக்கி உடம்போடு அழுத்தி உட்காருங்கள். இதை டிவி பார்க்கும் போது செய்யலாம். உட்காரும் போது எல்லாம் இப்படி உட்கார்ந்து பழக்கப் படித்துக்கொண்டால், அடிவயிற்று சதை குறையும். இதை தனியாக உடற்பயிற்சியாகவும் செய்யலாம். ஆனால் மிக எளிதாக செய்ய முடியும் என்பதால் முடியும் போது எல்லாம் செய்யுங்கள்.

நாம் உட்காரும் போது சோபா, சேர் என்று உட்காராமல், தரையில் உட்கார்ந்து எழுந்து பழகலாம், அதுவுமே ஒரு உடற்பயற்சி தான்.

இப்படி உடற்பயிற்சிகள் எல்லாம் என் குழந்தைக்கு 5 வயது ஆகும் போது தான் நான் ஆரம்பித்தேன். அதுவரையில் எனக்கு அதன் தேவை இல்லாமல் இருந்தது, அதற்கு பிறகு நடைபயிற்சி. இது ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 -3 கிமி நடந்து செல்லுவேன். பள்ளிக்கு குழந்தைக்கு சாப்பாடு எடுத்துச் செல்ல நடந்தே சென்று வருவேன். இரண்டு சக்கர வாகனம் இருந்தாலுமே உபயோகப்படுத்தாமல் இருந்தேன். நடப்பதினால் என் உடல் பருமன் ஏறாமல் இருந்தது.

வீட்டில் டிரட் மில் இருந்தால், குறைந்த பட்சம் 10 நிமிடமாவது பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை உடலுக்கு தேவையான பயிற்சியையும், உங்களை எப்போதும் Active ஆக இருக்கும்படியாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றிக்கும் மேல் உங்கள் எடை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் மன உறுதியோடும், நம்பிக்கையோடும் இருக்க வேண்டும்.


Friday, 29 November 2013

இளமையாகத் தோன்ற ஆசையா?

முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:-

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.

கண்ணில் கருவளையம் மறைய…

சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

முகத்தை பாதுகாக்கும் முறை:-

ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.
உதடு உலர்ந்து விட்டதா?

உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

கழுத்தில் உள்ள கருவளையம் மறைய:-

சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படலாம். இதைப் போக்க. கோதுமை மாவில் வெண்ணையைக் கலந்து கழுத்தைச் சுற்றி பூசவும் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் அகன்றுவிடும்.

இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல:-

இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.

காது அழகை பராமரிப்பது எப்படி?

பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும்… காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.

ஆகவே பெண்மணிகளே காதை மிளிர வைப்பது எப்படி? என்பது பற்றிய யோசனையைகேளுங்க.

உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.

சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்தும் பளபளவென பளிச்சிடும்.

முகப் பொலிவுக்கு சில டிப்ஸ்

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.

பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும்.

பொடுகுத் தொல்லை,​ ஹார்மோன் பிரச்னை,​ நகத்தினை வளர்த்தல்,​ முறையற்ற உணவுப் பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிப்படையான பயன்பாடுகளைப் பொறுத்த வரையில் தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும்.

குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.

தண்ணீர் நிறைய பருக வேண்டும்.

முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

​இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வரலாம். எண்ணைத் தன்மை உடைய சருமத்தை உடையவர்களில் 90 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது. இதர சருமம் கொண்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது.

இதில் உலர்ந்த சருமத்தைக் கொண்டவர்கள் நிலை பரவாயில்லை. இவர்களுக்கு பெரும்பாலும் முகப்பருக்கள் வருவதில்லை.

வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும்.

முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு இரசாயனத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக் கொள்ளாததாக இருக்கிறது.

அதுபோல எலுமிச்சைச் சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

சந்தன பவுடர் கடைகளில் கிடைக்கும். அதனைப் பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருத் தொல்லையே இருக்காது.

முகத்தில் பருக்கள் பெருமளவு உருவாகி விட்டால் அதற்கு வெளியே கொடுக்கும் சிகிச்சை மட்டுமின்றி உள்ளேயும் சிகிச்சை அவசியமாகும்.

ஆசை முகம் அழகாக வேண்டுமா?

இந்த நவீன காலத்தில் முகம் பேணுவது முக்கியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்களும் பெண்களும் போட்டிபோட்டிக்கொண்டு முகப்பொலிவைச் செய்கின்றனர். இதற்கான அழகு மையங்கள் ஆங்காங்கே போட்டி போட்டுக்கொண்டு முளைக்கின்றன. ஆனால் மருத்துவ ரீதியாக இவைஎல்லாம் தங்களின் தோலுக்கு ஒத்து வருமா ஒத்துவராதா என்ற சிந்தனை இன்னும் தோன்றவில்லை.

பலபேர் தங்களின் கரடுமுரடான முகத்தை அழகு செய்ய விரும்பினாலும் கூடுதல் செலவு, மற்றும் பக்க விளைவுகள் கருதி அதனைச் செய்யப் பயப்படுகின்றனர். அவர்களின் பயத்தைப் போக்கி நல் முகம் ஆக்க மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தோல் நோய்ப்பிரிவு முகப்பொலிவு சிகிச்சையைத் துவங்கியுள்ளது.

உலகின் எந்த நவீன சிகிச்சை தொடங்கப் பெற்றாலும் அதற்கான கருவிகளை உடன் வாங்கி மக்களுக்கான எளிய மருத்துவச் சேவைகளைத் தொடர்வது மீனாட்சி மிஷன் மருத்துவமனை.

அந்த வகையில் அண்மையில் இறக்குமதி செய்யப் பட்ட மக்களின் முக நன்மைக்கு வகை செய்யும் முகப்பொலிவு சிகிச்சை கருவி தான் டெர்மாபரேடர் என்பது.

முக அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது எண்ணெய் வழிவது. கருவளையங்கள் இருந்து அசிங்கம் காட்டுவது. இதனால் இளமையானவர்கள் முதியவராகத் தோற்றம் காட்டுவது போன்றவற்றைத் செய்யும். இதேபோல் பலருக்கு பருவ காலத்தில் முகப்பரு ஏற்பட்டிருக்கும்.

அது தணிந்து சரியாக ஆறி இருந்தாலும் முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகள் அப்படியே இருக்கும். பருக்களால் ஏற்படும் தழும்புகள் அப்படியே இருக்கும். பொதுவாகவே முகப்பருத்தழும்புகளைத் தடுப்பது மிகவும் சிரமமான ஒன்று. முகப்பருத்தழும்புகளால் பலருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.

ஒரு இடத்திற்கு வேலைக்குப் போகிறவர்கள் மிடுக்கும் துடுக்கும் நிறைந்த தோற்றப் பொலிவோடு காணப்படவேண்டும். இது போன்ற முகப்பரு தழும்புள்ளவர்கள் பலர் இது போன்ற நேரங்களில் மனம் சங்கடப்படுவர்.

இவர்களின் மனச் சோர்வைப் போக்கும் வண்ணம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் தோல் நோய்ப் பிரிவில் முகப்பருத்தழும்புகள் நீக்கும் சிகிச்சை நடந்து வருகிறது. இதன் மூலம் மிகவும் ஆபத்தான குழித்தழும்புகள் உள்ளவர்கள் கூட அவர்களே பெருமைப்படும் வண்ணம் முகப் பொலிவை உண்டாக்கலாம்.

Co2 laser மற்றும்… மைக்ரோ டெர்பாபரேட்டர் சிகிச்சைகளின் மூலம் 80 முதல் 90 சதம் வரை முகச் சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை சரி செய்து வருகிறோம்.

ஸ்கின் ரெஜிவுனேஷன் (Skin Rejuvenation) எனப்படும் முகம்பொலிவு சிகிச்சையால் முகப்பருக்கள் இல்லாமல் கூட செய்யலாம். இதனை மாதம் இரண்டு முறை செய்து கொண்டால் வெயிலினால் ஏற்படும் மாற்றம் மற்றும் எண்ணெய் வடிவதை குறைந்து முகத்தில் மசாஜ் செய்வதுடன் முகத்தையும் பொலிவு பெறச் செய்யும்.

இதன் முக்கியச் செய்தி என்னவென்றால் இதனை ஒரு முறை செய்தவுடன் உடனடியாக முகத்தைத் தடவிப்பார்த்தாலே முக வித்தியாசத்தை நன்றாக அறியலாம். சென்னை மற்றும் மும்பைப் பகுதியில் நடிகர் நடிகைகள் மட்டுமே செய்து கொண்ட இந்த சிகிச்சை இப்போது உங்கள் மீனாட்சி மிஷன் மருத்துவ மனையிலும் நடைபெறுகிறது. இதில் சென்னை, மும்பையை விட இங்கு செலவு குறைகிறது.

முகத்தில் ஆசை வைத்தவர்கள் அனைவரும் தங்களின் ஆசை முகத்தை மேலும் அழகாக்கிக் கொள்ள எம்மை நாடலாம்.

எளிய அழகுக் குறிப்புகள்



சந்தனம், முல்தானிமட்டி கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.

* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்

* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.

* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.

* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.* தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.

* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.

* சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு மறைந்து விடும்.

* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.

* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.

* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.* கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.

* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.

* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.

முகத்திற்கு இளமையும், பளபளப்பும்

சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும்.

அயோடின் சத்துக் குறைவால் “கழலை” எனப்படும் கழுத்தின் “முன்புற வீக்கம்”, “கழுத்துக்கழலை” நோய் ஏற்படுகிறது.

தவிடு
கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் உமி, தவிடு போன்றவை அழகிற்கு அழகூட்டும் பொருட்களாகப் பயன்படுகின்றன. வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்த இந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, முகச் சுருக்கங்களையும் நீக்குகின்றன.

முகத்திற்கு இளமையும், பளபளப்பும் கூட்டுகின்றன. சருமத்திற்கு இதமளிப்பதால் சருமத்திற்கான அழகு சாதன கிரீம்களில் சேர்க்கப்படுகின்றன.

முல்தானி மட்டி
இது ஒரு வகை மென்மையான, களிமண் வகையைச் சேர்ந்த மண். இது சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய்ச் சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே அதிக எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்திற்கும், கேசத்திற்கும் இம்மண் பவுடர், அழுக்கு நீக்கியாகவும், அதிக எண்ணெய்ப் பசையை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

சருமத்திற்கு புத்துணர்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியும் தரக் கூடியது. கேசத்தினையும் சுத்தப்படுத்தக்கூடியது. எனினும் அதிகப்படியான தொடர்ச்சியான பயன்பாட்டினால் சரும வறட்சி ஏற்படும்.

இதிலுள்ள தாது உப்புகள், வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டத்தையும் இளமையையும் தருகிறது.

அழகுக்கூடும்

வேர்க்குருவிற்கு சிறந்த வீட்டு மருத்துவம்

மூல்தானி மெட்டி கூட வேர்க்குருவிற்கு சிறந்த வீட்டு மருத்துவமாகத் திகழ்கிறது. 4 டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி, 2 டேபிள் ஸ்பூன் பன்னீர், ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் குழைக்கவும். பின் வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில், இந்தக் குழம்பைப் பூசி 30 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.

சந்தனப் பவுடர் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை தலா இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் 2-3 டேபிள் ஸ்பூன் பன்னீர் விட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். பின் அதனை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி உலர விட்டு, குளிர்ந்த நீரால் நன்கு அலசி விடவும்.

பஞ்சு அல்லது பருத்தித் துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, அதனை வேர்க்குரு உள்ள இடங்களின் மீது போர்த்துமாறு மூடிவிடவும். பஞ்சு அல்லது துணியிலுள்ள ஈரம் முழுவதும் உறிஞ்சும் வரை காத்திருக்கவும். இம்முறையை ஒரு நாளுக்கு 2 அல்லது 3 முறை செய்யவும். இல்லையெனில் வேர்க்குரு உள்ள இடத்தின் மீது குளிர்ந்த நீரை கொண்டு கழுவலாம். வேர்க்குருவின் அரிப்பிற்கும், எரிச்சலுக்கும் உடனடி நிவாரணம் தரும் முறை இதுவே.

ஆலமரப்பட்டை வேர்க்குருவை போக்க சிறந்த பொருளாக பயன்படுகிறது. காய்ந்த ஆலமரப் பட்டைகளை எடுத்துக் நன்கு பொடியாக அரைக்கவும். இப்பொடியை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவவும். இது வேர்க்குருவின் அரிப்பிற்கும் எரிச்சலுக்கும் உடனடி நிவாரணம் தரும்

தலைமுடியைப் பாதுகாக்க.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. முகத்திற்கு அழகு சேர்ப்பதில் தலைமுடி பிரதானமாக அமைகிறது.

பெரும்பாலானவர்கள் சிறு வயதில் தலைமுடியை சரிவரப் பராமரிப்பதில்லை. விளைவு? 35 – 40 வயதிலேயே முடி உதிர்ந்து வழுக்கை அல்லது முன் வழுக்கை ஏற்பட்டு விடும்.

வேறுசிலர் மாதக்கணக்கில் தலைமுடிக்கு ஷாம்பூ போன்றவற்றைக் காட்டாமல் அழுக்குடன் வைத்திருப்பார்கள். இப்படி பராமரிப்பின்றி முடி இருப்பின், உதிர்வதற்கு நாமே வித்திடுவதாகி விடும்.

தலைமுடி உதிர்வைத் தடுக்கவும், அவற்றை முறையாகப் பராமரித்து ஆரோக்கியமாகத் திகழவும் இதோ சில தகவல்கள்:

தலைமுடியின் வகை எதுவாயிருந்தாலும் லேசான ஷாம்பு பயன்படுத்தி அதன் வனப்பையும் ஆரோக்கியத்தையும் காப்பது அவசியம்.

மிகவும் அழுக்கடைந்த முடிக்கு, கிளாரிஃபயர் பயன்படுத்தலாம். ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் அலசினால் நல்லது.

முடிக்கு இயற்கை எண்ணெய் தடவுவது அவசியம். எண்ணெய் தலையில் சிறிதளவேனும் இருப்பது நல்லது. கன்டிஷனர் நிறைந்த சன்ஸ்கிரின் பயன்படுத்தினால் முடியின் பளபளப்பு நீடிக்கும்.

டிரையர்களை சற்று தள்ளி வைத்துப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முடி அதிகம் உலர்ந்து வறட்சியாகக் காணப்படும்.

கோடையில் பளபளப்பற்ற, வறட்சியான முடி இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

தலைமுடிக்கு வண்ணம் பூசுவதும் நல்லது. நீச்சலின்போது முடி நன்கு அலசப்படுகிறது. உப்பு நீராக இருப்பின் முடியின் அடிப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும்.

நல்ல தண்ணீர் கொண்டு மீண்டும் தலையை அலச வேண்டும்.

கோடை காலத்தில் முடியைப் பாதுகாக்க தொப்பி அணிவது முக்கியம்.

மென்மையான கைக்குட்டையால் போர்த்தலாம். குடைபிடித்துச் செல்லலாம். தலையின் அடிப்பகுதி வரை சூரியனின் சூடு பட்டு முடிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தலைமுடியைப் பாதுகாக்க சென்னை போன்ற நகரங்களில் ஹெல்த் சென்டர்கள், அழகு நிலையங்கள் உள்ளன.

கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்

ஆரோக்கியமே அழகுக்கு அடிப்படை. எனவே, அழகாக இருப்பதற்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அழகு என்பதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறக்கும் போது ஒருவரின் தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது தான். கூந்தலை பராமரிப்பதற்கான எளிய முறைகளை காணலாம்.

கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்

*ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம்.

* மன உளைச்சல், கோபம், படபடப்பு.

* கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.

* கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.

* அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு.

முடி உதிர்வது நிற்க வேண்டுமா?
பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.

முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள்:

*வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

*இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

*தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.
நரைமுடி கருப்பாக வேண்டுமா?
பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

* மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

* கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.