Sunday, 1 December 2013

வியர்க்குருவை விரட்ட வெள்ளரி....!

ஒருவருக்கு வியர்த்தல் என்பது ஆரோக்கியமான நிகழ்வே. ஆனால், தற்போது கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால், பெரும்பாலானவர்கள் வியர்க்குரு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். முதுகு, கழுத்து அல்லது தலை போன்ற பகுதிகளில் தோன்றும் வியர்க்குருக்கள் அரிப்பை உண்டாக்கும்.

* கோடை காலத்தில் வியர்க்குரு தோன்றாமல் இருக்க அடிக்கடி குளிக்க வேண்டும். குளிக்கும் போது மூலிகையினால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்துவதே சிறந்தது.

* வெள்ளரிக்காயை வெட்டி, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறைகள் செய்யலாம். இதை வியர்க்குரு மறையும் வரை தொடர்ந்து செய்யலாம்.

* சோற்றுக் கற்றாழை ஜெல்லை, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்தால், நாளடைவில் குணமாகும்.

* வியர்க்குரு தோன்றியுள்ள பகுதிகளில், சாமந்தி பூவின் சாறு தடவினால் குணமடையும். சாமந்தி பூவை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட பவுடர்கள் மற்றும் ஆயின்மென்ட் போன்றவையும் கடைகளில் கிடைக்கின்றன.

* அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அதிக நறுமணம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதை தவிர்ப்பதே நல்லது.

பொடுகு தொல்லையா?



* தேங்காய் பால் - 1/2 கப், எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.

* அருகம்புல்லில் சாறு எடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

* வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு குளித்து வந்தால் பொடுகு நீங்கும். சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்துக் குளித்தால் நல்லது.

* வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டித் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.

* பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதுடன் கண்டிஷனராகவும் இருக்கும். மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திப் பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறுங்கள்.

ஷாம்பு தலைக்கு போடுவது அவசியமா?



இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் தலையை சுத்தமாக வைத்து இருக்கும். ஷாம்பு போட அவசியமே இல்லை. சொல்லபோனால் ஷாம்பு அந்த ஆயிலை தலையில் இருந்து அகற்றிவிடுகிறது.

மேலும் ஷாம்பு, கண்டிஷனரில் உள்ள கெமிக்கல் குப்பைகளை என்ன செய்வது என்பது நம் முடிக்கு தெரிவது இல்லை. முடி வெட்டியபிறகு தலைக்கு குளிக்க வேண்டும் எனில் பின்வரும் இயற்கை ஷாம்புவை பயன்படுத்தலாம்.

1) தண்ணீர்: தலையில் நீரை விட்டு முடியை மசாஜ் செய்தாலே போதும். ஐந்து நிமிட மசாஜ் முடியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து இருக்கும்.

2) முட்டை: முழு முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து கொள்ளுங்கள். இதை தலையில் ஊற்றி ஓரிரு நிமிடம் காத்திருந்து தலையை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். குளிர்ந்த நீரில் மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டும். இது அளிக்கும் புத்துணர்வை எந்த ஷாம்புவும் அளிக்க முடியாது.

கண்டிஷனர் வேண்டுமா?

எலுமிச்சை ஒன்றை நேரடியாக தலையில் பிழிந்து சிறிது நீர் விட்டு மசாஜ் செய்யுங்கள். அல்லது லெமன் ஜூஸை நீரில் கலந்து கண்டிஷனராக பயன்படுத்துங்கள். இப்படி வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும்.

பவுடர் ஃபவுன்டேஷனை பயன்படுத்து முறை


பவுடர் ஃபவுன்டேஷன் என்பது நாம் உபயோகப்படுத்தும் பவுடரை போன்றது. ஆனால் சற்று இறுகிய நிலையில், இன்னும் தரமுள்ள மேக்-கப் சாதனமாக உள்ளது.பவுடர் ஃபவுன்டேஷன் நான்கு வகைப்படும். க்ரீம்-பவுடர் ஃபவுன்டேஷன், லிக்விட்-பவுடர் ஃபவுன்டேஷன், மினரல் பவுடர் ஃபவுன்டேஷன் மற்றும் பிரஸ்ட் பவுடர் ஃபவுன்டேஷன் ஆகிவைகள் தான்.

இவை அனைத்துமே சாதாரண சருமம், எண்ணெய் பசையுள்ள சருமம் மற்றும் கலவையான சரும வகைகளில் நன்றாக செயல்படும். பல பெண்கள் அதை பயன்படுத்தினாலும், அதை முறையாக பயன்படுத்த பலருக்கும் தெரிவதில்லை. இப்போது பவுடர் ஃபவுன்டேஷனை முறையாக பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்......

முதலில் மிதமான க்ளின்சரைப் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இது முகத்தில் உள்ள அனைத்து அழுக்கையும், எண்ணெயையும் நீக்கும். பின் டோனரை பயன்படுத்தி சருமத்தை நிறம்பதப்படுத்துங்கள். ஏனெனில் கழுவி நிறம்பதப்படுத்தப்பட்ட முகத்தில் தான் ஃபவுன்டேஷன் செய்ய வேண்டும்.

பின்பு சரியான மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தி சருமத்தை மேம்படுத்த வேண்டும். இதனால் மாய்ஸ்சுரைசர் சருமத்தை பாதுகாக்கும் அடுக்காக இருக்கும். அதனால் ஈரப்பதம் வெளியேறாமல் சருமத்திலேயே இருக்கும். மேலும் காய்ந்த திட்டுகள் ஏதும் இருந்தால் கூட, அவைகளையும் இது நீக்கிவிடும்.

முக்கியமாக அதனை சருமத்தின் மீது குறைந்தது 3 நிமிடங்களாவது ஊற விட வேண்டும். சருமத்தில் உள்ள எந்த ஒரு குறைபாடாக இருந்தாலும் சரி, கன்சீலரை பயன்படுத்தி அதை மறைத்திடவும். பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை மறைக்க, சற்று அடர்த்தியான கன்சீலர்களை பயன்படுத்தவும்.

அதிலும் பயன்படுத்தும் கன்சீலர்களானது சரும வகைக்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். கன்சீலரை நேரடியாக பயன்படுத்தும் போது, மேக்-கப் போடும் சிறிய பிரஷை பயன்படுத்தி போட வேண்டும். பவுடர் ஃபவுன்டேஷனை முழுமையாக செய்து முடிக்க, ஒரு மேக்-கப் ஸ்பாஞ்சை பயன்படுத்தி, பவுடர் ஃபவுன்டேஷனை தடவ வேண்டும்.

இதற்கு ஒரு ஃபவுன்டேஷன் ப்ரஷும் தேவைபடும். ஆனால் பவுடர் ஃபவுன்டேஷனை தடவிய பின் எக்காரணத்திற்காகவும் விரல்களை பயன்படுத்தக் கூடாது. முதலில் ஸ்பாஞ்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஃபவுன்டேஷனில் வைத்து ஒத்தி எடுக்கவும். ஒத்திய ஸ்பாஞ்சை முகம் முழுவதும் தடவ வேண்டும்.

அதிலும் நெற்றி, மூக்கு மற்றும் நாடியிலும் தடவலாம். ஒருவேளை பிரஷ் பயன்படுத்துவதாக இருந்தால், பிரஷை பவுடர் ஃபவுன்டேஷனில் நன்றாக சுழற்ற வேண்டும். பின் பிரஷில் இருக்கும் அதிகப்படியான பவுடரை உதறி விட வேண்டும். பின்பு முகத்தின் மீது வட்ட வடிவ இயக்கத்தில் மெதுவாக தடவ வேண்டும்.

பிறகு ஆங்கில எழுத்து 'S'-ஐ போல், கீழ்நோக்கி ஃபவுன்டேஷனை தடவ வேண்டும். பவுடர் ஃபவுன்டேஷன் செய்யும் போது, கவனமான முறையில் கலவை இருக்க வேண்டும். பின் நெற்றியில் ஆரம்பித்து முகம் முழுவதும் தடவியிருக்க வேண்டும். ப்ளென்டிங் செய்யும் போதும் வட்ட வடிவில் இயக்க வேண்டும்.

முக்கியமாக தடங்களோ, கோடுகளோ தெரியாத படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பயன்படுத்தும் ஃபவுன்டேஷன், சருமத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். குறிப்பாக பவுடர் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் முகம் பார்ப்பதற்கு செயற்கையாக காட்சி அளிக்கும்.

பற்கள் அழகை பாதுகாக்க

அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒரு சில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச் சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்ன வென்று பார்க்காம்.

• எலுமிச்சை எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

• பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

• பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

• அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

• அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

• ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

• ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

• பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.

• பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.

சரும அழகிற்கு குளியல் பொடி



இன்று பல சோப்புகளாலும, பவுடர்களாலும் உடலில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாதாலும் சருமம் வறட்சியடைகின்றது.

சரும பாதிப்புகளுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கின்றது. குளியல் பொடி தயாரிக்க

தேவையான பொருட்கள்...

சோம்பு - 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
வெட்டி வேர் - 100 கிராம்
அகில் கட்டை - 100 கிராம்
சந்தனத் தூள் - 150 கிராம்
கார்போக அரிசி - 100 கிராம்
தும்மராஷ்டம் - 100 கிராம்
கோரைக்கிழங்கு - 100 கிராம்
கோஷ்டம் - 100 கிராம்
ஏலரிசி - 100 கிராம்
பாசிப்பயிறு - 250 கிராம்
காய்ந்த ரோஜா இதழ் - 200 கிராம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக காய வைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த குளியல் பொடியை தினமும் குளிக்கும் போது தேவையான அளவு எடுத்து நீரில் குழைத்து உடல் முழுவதும் பூசி 20 ஊற வைத்து இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து குளித்து வந்தால் தேமல், கண்களில் கருவளையம், முகப்பரு, போன்ற பிரச்சனைகள் தீரும். மேலும் உடல் முழுவதும் நறுமணம் வீசத் தொடங்கும்.

இரண்டே நாளில் இப்படி அழகாகலாம்


முக்கியமான நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ளவேண்டும். ஆனால் இரண்டே நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் உங்களை நீங்கள் அழகுபடுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது. இரண்டு நாட்கள் போதும், உங்களை நீங்கள் சூப்பராக அழகாக்கிக்கொள்ள..! வீட்டிலே அதை செய்துவிடலாம்..!

சருமத்திற்கு:

வறண்ட சருமம் உங்களுக்கு பிரச்சினையாக இருந்தால் உடல் முழுவதும் ‘லிக்யூட் சோப்’ பூசி, ‘பாடி ஸ்கிரப்’ பயன்படுத்தி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின்பு நிறைய தண்ணீர் ஊற்றி, நன்றாக கழுவிவிடுங்கள். சருமத்திற்கு பளபளப்பு கிடைக்கும்.

அழகான விழிகளுக்கு :

டீ பேக் ஒன்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள். பின்பு அதை எடுத்து நன்றாக குளிரவையுங்கள். அதை கண்களை மூடிக்கொண்டு, கண் மீது எல்லா இடங்களிலும் படும்படி பத்து நிமிடங்கள் வையுங்கள்.

தேயிலையில் அடங்கியிருக்கும் கபீன், கண் இமைப் பகுதிகளை அழகாக்கி, கண்களை ஜொலிக்கவைக்கிறது. கண்களில் இருக்கும் வீக்கங்களை அகற்றி பளிச்சிடச்செய்யும். நன்றாக தூங்காவிட்டால் கண்களின் அடியில் கறுப்பு நிறம் படியும். அதையும் நீக்கும் சக்தி, டீபேக்கிற்கு இருக்கிறது.

முகப்பரு நீங்க :

பளிச்சென இருக்கும் முகத்தில் பருக்கள் தோன்றி நிறைய பெண்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது. அதற்கும் பரிகாரம் இருக்கிறது. ஒரு ஐஸ் கியூப்பை மஸ்லின் துணியில் பொதிந்து மூன்று நிமிடங்கள் முகப்பரு மீது வைத்திருங்கள். பின்பு துணியில் இருந்து ஐஸ் கியூப்பை நீக்கிவிட்டு, அந்த துணியை லாவண்டர் ஆயிலில் முக்கி, பரு மீது வையுங்கள். இவ்வாறு செய்தால், பாக்டீரியா இன்பெக்ஷன் நீங்கி, இரண்டு நாட்களில் முகப்பரு மறையும்.

கூந்தல் அழகுக்கு :

நீங்கள் விருந்து நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முதல் நாளே உங்கள் முடிக்கு ஏற்ற தரமான ஷாம்புவும், கண்டிஷனரும் பயன்படுத்தி தலையை நன்றாக கழுவுங்கள். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தலைக்கு குளித்து, 'பேன்' கீழே நின்று கூந்தலை நன்றாக உலர வையுங்கள்.

பின்பு கூந்தலை பல பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் ‘ப்ளோ டிரை’ செய்யுங்கள். இறுதியில் முடியின் இறுதிப்பகுதியில் ஹெயர் வாக்ஸ் பூசுங்கள். இதன் மூலம் முடி உடைந்து போன அழகு குறைபாடு நிவர்த்தி செய்யப்படும். அழகும், ஜொலிப்பும் கூந்தலுக்கு இதன் மூலம் கிடைக்கும்.

பாதங்களுக்கு :

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களில் பெட்ரோலியம் ஜெல்லி பூசி, சாக்ஸ் அணிந்துகொண்டு தூங்குங்கள். மறுநாள் பாதங்களுக்கு மென்மையும், அழகும் கிடைக்கும்.

மேக்-அப் நிலைத்திருக்க:

முகத்தில் பவுண்ட்டேஷனும், காம்பேக்ட் பவுடரும் பயன்படுத்திய பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் ஸ்பிரே செய்து, டிஸ்யூ பேப்பர் வைத்து ஒற்றி எடுத்தால், மேக்-அப் அதிக நேரம் நிலைத்திருக்கும். லிப்ஸ்டிக் அதிக நேரம் நிலைத்திருக்க, உதடுகளில் கண்சீலர் போட்ட பின்பு லிப்ஸ்டிக் போடுங்கள். நெயில் பாலீஷ் இளகிப்போகாமல் இருக்க, அதன் மேல் கிளீயர் கோட் ஒன்று கொடுங்கள்.

முகப்பரு போக வீட்டுக் குறிப்புகள்


முகப்பரு முகத்தின் அழகை கெடுப்பதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும். அதிலும் வலியின் போது முகப்பருவை அடிக்கடி தொடுவதால், அப்போது முகப்பரு வெடித்து பரவ ஆரம்பிக்கிறது.

ஆகவே அத்தகைய முகப்பருவை போக்குவதற்கும், அதனால் ஏற்படும் வலியை கட்டுப்படுத்துவதற்கும் பல இயற்கை பொருட்கள் வீட்டின் சமையலறையிலேயே உள்ளது. அத்தகைய பொருட்களைக் கொண்டு பராமரித்தால், நிச்சயம் முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அவை என்னவென்று பார்க்கலாம்....

• எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு முகப்பரு உள்ள சருமத்தில் தேய்த்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். குறிப்பாக இந்த முறையை தினமும் மேற்கொண்டால், முகப்பருவால் ஏற்படும் வலியை குணப்படுத்துவதோடு, முகப்பருவையும் போக்கலாம்.

• வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முகப்பரு மீது தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இல்லையெனில் வெந்தயக் கீரையை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

• அக்காலத்தில் எல்லாம் பெண்கள் குளிக்கும் போது நீரில் சிறிது வேப்பிலையை போட்டு குளிப்பார்கள். அதனால் தான் அவர்களுக்கு சரும பிரச்சனைகள் எதுவும் வராமல் இருந்தது. ஆகவே அத்தகைய வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நிச்சயம் முகப்பரு விரைவில் குணமாகும்.

• கற்றாழையும் பல சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. தினமும் இரண்டு முறை கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், நாளடைவில் முகப்பரு நீங்கிவிடும்.

• வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது தயிர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் செய்து, முகம் மற்றும் முகப்பரு உள்ள இடங்களில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும்.

• ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் அசிட்டிக் தன்மை அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், பல சரும பிரச்சனைகளைப் போக்கலாம். அதிலும் ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து அரைத்து பொடி செய்து, தண்ணீர் ஊற்றி கலந்து, அந்த பேஸ்ட்டை முகப்பரு உள்ள இடத்தில் தடவினால், வலி நீங்குவதோடு, முகப்பருவும் மறையும்.

பொடுகு தொல்லையால் ஏற்படும் அரிப்பு நீங்க

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு.குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும்.

எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம்.  சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். அரிப்பு நீங்கவும், பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்....

• வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். வால் மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்". தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

• பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்

• பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை. எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

• வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

• வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.

சரும சுருக்கத்தைப் போக்கும் வீட்டு ஃபேஸ் பேக்குகள்!!


முப்பது வயதானாலேயே சருமத்தில் ஒருவித முதுமைத் தோற்றமானது வெளிப்பட ஆரம்பிக்கும்.  சருமத்தை மென்மையாகவும், சுருக்கமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டுமெனில், நிச்சயம் சருமத்தை முறையாக பராமரித்து வர வேண்டும். இதற்கு பல வழிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று தான் ஃபேஸ் பேக்.

பொதுவாக ஃபேஸ் பேக்கில் நிறைய உள்ளன. அந்த ஃபேஸ் பேக்குகளை எளிதில் வீட்டிலேயே செய்யலாம். அதிலும் ஃபேஸ் பேக்குகள் செய்வது என்பது மிகவும் எளிது.

எனவே, விரைவில் முதுமை தோற்றத்தை தவிர்க்க வேண்டுமெனில், அத்தகைய முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்களை போக்குவதற்கான ஃபேஸ் பேக்குகளை போட வேண்டும். அந்த ஃபேஸ் பேக்குகளில் சரும சுருக்கத்தைப் போக்கும் சில சிறந்த ஃபேஸ் பேக்குகளை பார்க்கலாம்...

• முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் படிப்படியாக நீங்கும்.

• முல்தானி மெட்டியை முட்டை, கிளிசரின் மற்றும் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முதுமைத் தோற்றத்தை தவிர்க்கலாம். இந்த ஃபேஸ் பேக்கை 10 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்.  

• பாலில் முல்தானி மெட்டி பொடியை கலந்து, முகத்தில் தடவி காய வைத்து, பின் பால் கொண்டு 15 நிமிடம் லேசாக மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமம் இறுக்கமடையும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

•  அரிசி மாவில், ஆலிவ் ஆயில் மற்றம் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சரும சுருக்கங்கள் நீங்கும்.

• தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும இறுக்கமடைந்து முதுமை தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.

• அவகேடோவை மசித்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலரை வைத்து கழுவினால், அதில் உள்ள அவகேடோ கொலாஜனை அதிகம் உற்பத்தி செய்து, இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கும். 

அழகாக இருக்க ஈசியான வழிகள்



இன்றைய கால கட்டத்தில் அழகை பாதுக்காக பெண்கள் படாதபாடு படுகிறார்கள். அழகை பாதுகாக்க, மேம்படுத்த பெண்கள் என்னவெல்லாமோ செய்கிறார்கள். கருப்பும் ஓர் அழகு தான் என்பதை மறந்துவிட்டு சிவப்பாக ஆக கிரீம்களை பயன்படுத்துகின்றனர்.

இயற்கை முறையில் அழகை பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம் பெண்கள் என்று பீட்சா, பர்கர், பாஸ்தா என்று சாப்பிட்டு குண்டாக ஆக வேண்டாம். ஸ்லிம்மாகுகிறேன் என்ற பெயரில் பட்டினியும் கிடக்க வேண்டாம். மாறாக சத்தான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டாலே நீங்கள் ஸ்லிம்மாகவும், ஃபிட்டாகவும் இருக்கலாம்.

தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ப்ளர் வரை தண்ணீர் குடியுங்கள். இரவில் நன்றாக தூங்குவது உங்கள் அழகை பாதுகாக்க மிகவும் முக்கியம்.

சரியான தூக்கம் இல்லை என்றால் முகம் வாடி, கண்களைச் சுற்றி கருவளையம் வந்துவிடும். அதன் பிறகு அதுக்கு வேறு தனியாக கிரீம்கள் போடுவீர்கள். வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் அல்லது கடலை மாவால் கழுவவும்.

கடலை மாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி ஊற வைத்தும் கழுவலாம் அல்லது வெறுமனே முகத்தில் தடவியும் கழுவலாம். வீட்டு வேலைகளை செய்வது நம் உடல் நலத்திற்கு தான் நல்லது.

அதை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு நம் உடல் நலத்தை நாமே கெடுப்பானேன். முகம் பளப்பளப்பாக தேன் அல்லது பாலாடையை முகத்தில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவலாம் தினமும் 10 பாதாம் பருப்பு சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நல்லது.

நெய்ல் ஆர்ட்

நெய்ல் ஆர்ட் பல வகையான டிசைன்களை உடையது. உங்களது நகங்களை பிறரை கவரும் விதத்தில் அலங்கிரிக்க உங்களுக்கு குறைந்தது 4 நிறங்களில் நெய்ல் பாலிஷ்கள் தேவைப்படலாம். உங்கள் மனதிற்கு பிடித்த டிசைன்களை தேர்வு செய்யுங்கள். டிசைனை தேர்வு செய்யும்போது இன்னோவேடிவ்வாக யோசியுங்கள்.

பண்டிகைகள், மலர்கள், கார்டூன் உருவங்கள் என நீங்கள் நெய்ல் ஆர்ட்-க்கு தேர்வு செய்ய தீம்-கள் நிறைய உள்ளன. உதாரணதிற்கு நகங்களில் சுழல் போன்ற டிசைனை வரைய, உங்களுக்கு 3 கலர் நெய்ல் பாலிஷ்கள் தேவைப்படும்.

முதலில் ஒரு நிறத்தை வைத்து நகத்தில் சுழலை வரைந்து, மீதமிருக்கும் கலரை, முதலில் வரைந்த சுழலுக்கு உட்புறமாக, அடுக்கடுக்காக வரையலாம். இந்த டிசைன்தான் இப்போதைய டிரன்ட். உங்களிடம் 2 கலர் நெய்ல் பாலிஷ்கள் மட்டுமிருந்தால், ஒரு கலரை நகங்கள் முழுவதும் பூசி, மற்றொரு கலரை நகங்களின் நுனியில் மட்டும் மெல்லிய இழையாக பூசுங்கள்.

இந்த டிசைன் சிம்பிளாக இருந்தாலும், அசத்தலாக இருக்கும். நகங்களில் டிசைன்களுக்கு பதிலாக கார்ட்டூன் உருவங்கள், நட்சத்திரங்கள், மலர்கள், விலங்குகளில் முகங்கள், பழங்கள், கற்கள் பதித்த அலங்காரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

உங்கள் நகங்களுக்கு கிராபிக் டிசைன்களை போன்ற நெய்ல் ஆர்ட் செய்ய விருப்பப்பட்டால், உங்களுக்கு விருப்பமான நிறங்களை அருகருகே ஊற்றி ஒரு ஸ்பாஞ்சால் அந்த நிறங்களை தொட்டு, நகத்தில் பூசினால், நீங்கள் எதிர்பார்த்த கிராபிக் டிசைன் நெய்ல் ஆர்ட் கிடைக்கும்.

இந்த வகை நக அலங்காரங்களுக்கு உங்களுக்கு பல நிறங்களில் நெய்ல் பாலிஷ்கள், வெவ்வேறு அளவிலான பிரஷ்கள் தேவைப்படும். மெல்லிய பிரஷ்களுக்கு, நீங்கள் உபயோகிக்காத நெய்ல் பாலிஷ் பிரஷ்களின் பிரிஸில் – சை (Bristles) நீளவாட்டில் வெட்டிக்கொள்ளலாம்.

நெய்ல் ஆர்ட் போடும் முன்னும், போட்டு முடித்த பின்னும் நகங்களின் மீது டிரான்ஸ்பரன்ட் பாலிஷை பூசினால், உங்களின் நக அலங்காரம் நீண்ட நாட்களுக்கு அழகாக அப்படியே இருக்கும்.

கால் துர்நாற்றத்தை போக்கும் வழிகள்

கால் துர்நாற்றமானது மக்களின் மத்தியில் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்து வருகின்றது. இதை குணப்படுத்த பல்வேறு வீட்டு வைத்தியம் உள்ளன. கால் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்தால் பாக்டீரியா காரணமாக நாற்றம் ஏற்படுகின்றது. எனவே, இந்த பிரச்சனையை ஒழிக்க சிறந்த தீர்வுகள் வீட்டிலேயே உள்ளன.

அதற்கு முதலில் காலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதை தவிர ஹார்மோர் பிரச்சனைகள், மன அழுத்தம் போன்றவையும் தீர்க்கப்பட்டால் கால் துர்நாற்றத்திலிருந்து தப்பிக்க முடியும். தேநீர் பைகள் சிலவற்றை சூடான நீரில் போட்டு, காலை ஊர வைத்தால் கால் துர்நாற்றத்தை போக்க முடியும்.

மேலும் நீருடன் வினிகரைக் கலந்து, அதில் பாதத்தை ஊர வைத்தாலும், கால் துற்நாற்றத்தை அகற்ற முடியும். இதை தவிர பாக்டீரியாவை எதிர்த்து போராடும் சோப்புகளாலும் நல்ல தீர்வு கிடைக்கும். ஷூக்களுக்கு உள்ளே நீண்ட நேரம் சாக்ஸ் அணிந்திருந்தாலும் துற்நாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஏனெனில் பாக்டீரியாவானது ஈரத்தில் வளர்வதால், கால் ஈரத்துடன் இருக்கும் பொழுது, அவை வளர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக இத்தகைய துர்நாற்றத்தை வியர்வை சுரப்பிகள் தான் வளர்க்கின்றது. இந்த பாக்டீரியா மூலம் சுரக்கும் ஐசோவலீரிக் (isovaleric) அமிலம் கெட்ட வாசனையை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய கால் துர்நாற்றத்தைத் தவிர்ப்பதற்கு வீட்டிலேயே சில மருத்துவ முறைகளை உள்ளன. காலணிகளை சுத்தமாக வைத்திருந்தால் நாற்றத்தை போக்க முடியும். வழக்கமாக துணியை சுத்தம் செய்வது போல் சாக்ஸையும் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் செருப்புகளையும், ஷூக்களையும் வெயிலில் காய வைக்க வேண்டும்.

அதிலும் இவைகளை சுத்தம் செய்யும் போது, சமையல் சோடா சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சிறிய தொட்டியில் சூடான நீரை ஓரளவு நிரப்பி, அதில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலந்து, சில மணி நேரம் கால்களை அதனுள் வைத்திருக்க வேண்டும்.

இது எளிதில் கால் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. கால்களை ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை பாக்டீரியாவை எதிர்க்கும் சோப்பு மற்றும் சூடான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இந்த முறை கெட்ட நாற்றம் உருவாகாமல் பாதுகாத்து, பாக்டீரியாவை அழித்துவிடும்.

கால்களை அதிகமாக வியர்வை தாக்குகின்றது என்றால், உப்பைப் பயன்படுத்தி வாசனையை அகற்ற முடியும். அதற்கு ஒரு அகன்ற வாளியில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி, அதில் சிறிது உப்பு போட்டு நன்கு கலந்து, அந்த நீரில் சிறிது நேரம் கால்களை ஊற வைத்தால், கால்களில் இருக்கும் துர்நாற்றம் ஓடி விடும்.


கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய

* சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.

* கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

* அல்லது, வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.

* உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

குண்டான பெண்களுக்கு உடை அலங்கார டிப்ஸ்!

உடையை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து நம் மீதான வசீகரத்தை கூட்ட முடியும். இது ஆண்கள் - பெண்கள் இருவருக்குமே பொருந்தும்.

* உடை விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிந்து மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது. சரியான உடைகளை தேர்வு செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள மைனஸ்களை பிளஸ்களாக மாற்றலாம்.

* எடுத்துக்காட்டாக குண்டாக மற்றும் குள்ளமாக இருப்பவர்கள்,ரொம்ப ஒல்லியா இருப்பவர்கள், எனக்கு நல்ல ஸ்ட்ரக்சர் இருக்குங்க ஆனா பார்த்தால் ஸ்மார்ட்டா செக்ஸியா இல்லைன்னு நினைக்கிறவங்க, இவங்க எல்லோருமே இந்த பிரச்னையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம்.

* இவர்களுக்கு தாங்க இருப்பதிலேயே ரொம்ப சிரமம், எந்த உடை அணிந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பாங்க, அதற்க்கு காரணம் தங்கள் அதிகப்படியான சதைகள் தான். உடற்பயிற்சி அது இதெல்லாம் இருந்தாலும் நாம் உடையின் மூலம் எவ்வாறு ஓரளவு சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

* குண்டாக இருப்பவர்கள் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யவே கூடாது, காரணம் அவ்வகையான உடைகள் உடலோடு ஒட்டி உடல் பாகங்களை வெளிப்படையாக காட்டும். குறிப்பாக மார்பு, இடுப்பு மற்றும் பின்புறம், இது பார்ப்பவர்களுக்கு ஒரு வெறுப்பையே தரும்.

* இவ்வைகையான ஆடைகளை முற்றிலும் தவிர்த்து விடுதல் நலம், இல்லைங்க எனக்கு இந்த மாதிரி துணி தான் பிடிக்கும் என்றால் இருப்பதிலேயே குறைந்த அளவு வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யுங்கள். காட்டன் வகை உடைகள் சிறந்தது.

* காட்டன் புடவைகளிலேயே பல வகை உண்டு. அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அணியலாம்.

* அடர்ந்த நிறமுள்ள உடைகளை குண்டாவனர்கள் அணிந்தால் ஒல்லியாக தெரிவார்கள்.

குள்ளமாக, குண்டாக இருப்பவர்களுக்கு அலங்கார குறிப்புகள்

* இவர்களும் வழுவழுப்பான உடைகளை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை. இவ்வகை உடைகள் இன்னும் உயரம் குறைந்தவர்களாக காட்டும். பெண்களுக்கு மிக முக்கியமான அம்சம் குறிப்பாக குள்ளமாக இருப்பவர்களுக்கு ஷோல்டர் அகலமாக இருப்பது, உங்கள் ஷோல்டர் அகலமாக இருக்க வேண்டியது அவசியம். 

* ஒரு சிலரை பார்த்தால் அவர்களுக்கு ஷோல்டர் அகலம் குறைவாக இருக்கும், அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி காட்டன் புடவைகள் தான் இவைகள் தான் உங்கள் சோல்டரை மறைத்து அகலப்படுத்தி காட்டும், அதோடு காட்டன் புடவை என்பதால் சதை பகுதிகளை அப்பட்டமாக காட்டாது. 

* பெண்கள் சுடிதார் அணியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தொள தொளன்னு அணியக் கூடாது குறிப்பாக குள்ளமாக குண்டாக உள்ளவர்கள், அதே போல ரொம்ப இறுக்கமாகவும். இடுப்பு பகுதியில் அளவு குறைத்து ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும் படி இருக்க வேண்டும். ரொம்ப இறுக்கமாகவும் இருந்தால் பின்புறம் அசிங்கமாக தெரியும்.

அழகை பராமரிக்க இயற்கை வழிகள்

இயற்கையான அழகுக்கு ஏங்காதவர்கள் யாரேனும் உண்டா? எப்போதும் அழகாகத் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உண்டு. அதற்காக பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது உண்டு. அதே நேரத்தில், வேதிப்பொருள் குறைவாக உள்ள அல்லது வேதிப்பொருட்களே இல்லாத அழகு சாதனப் பொருட்களையே விரும்புகிறோம்.

வேதிப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது மட்டுமல்ல. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அவை சருமத்திற்கு, கூந்தலுக்கு மற்றும் உடலுக்கு கேடுகள் விளைவிப்பவை என்றும் அனைவரும் நன்றாக அறிவோம்.

எனவே, வீட்டில் அன்றாடம் பயன்படுத்தி வரும் இயற்கையான பொருட்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உடலை அழகாகப் பராமரிப்பதற்காக, சில அழகுக் குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

இவற்றைச் செய்து வந்தால் உடல் மற்றும் முகம் இயற்கை வழியிலேயே அழகு பெறுவதுடன், மனதுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியை அளிக்கும். எனவே இவற்றை உடலை இயற்கை வழியில் மேலும் மெருகேற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு என்று எடுத்துக் கொண்டு பின்பற்றிப் பாருங்களேன்!

சிட்ரஸ் ஃபேஸ் மாஸ்க் :

சுருக்கமில்லாத சருமத்துடன் எப்போதும் இளமையாகத் தோன்றுவதையே அனைவரும் விரும்புவோம். எலுமிச்சைச் சாறு, தேன், சாத்துக்குடிச் சாறு மற்றும் தயிர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து கொண்டு, சுருக்கங்கள் உள்ள இடங்களில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். தயிருக்கு இயற்கையிலேயே, ப்ளீச் செய்யும் குணம் உண்டு என்பதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளும் இக்கலவையைப் பயன்படுத்தினால் காணாமல் போகும்.

முட்டையின் வெள்ளைக் கரு :

முகத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை மென்மையாக தோற்றமளிப்பதற்கு மற்றுமொரு அழகுக்கலவையும் உண்டு. முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக ஒரு கரண்டியினால் கலக்க வேண்டும்.

அதன்பின் அந்த கலவையை கண்கள், தாடைகள், நெற்றி, கன்னம் போன்ற பகுதிகளில் பூச வேண்டும். பின் அவை நன்றாக காய்ந்த பிறகு கழுவித் துடைத்துவிட வேண்டும். இவ்வாறு தவறாது செய்து வந்தால், மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் ஆகியவை மெல்ல மறைவதைக் காண முடியும். சுருக்கங்கள் மறைவதனால், இளமையான தோற்றமும் கிடைக்கும்

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக் காய்களை வட்ட வடிவிலான துண்டுகளாக வெட்டி, அவற்றைக் கண்கள் மீது சிறிது நேரம் வைத்து வந்தால், அது கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்களைப் நீங்கும். மேலும் இத்தகைய வெள்ளரிக்காயைக் கொண்டு சிறந்த ஃபேஷியல் மாஸ்க் செய்யலாம். அதற்கு சிறிய வெள்ளரிக்காயை, ஓட்ஸ் உடன் மிக்ஸியில் போட்டு அரைத்து, தயிருடன் கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்

பழங்கள் மற்றும் காய்கறிகள் :

செர்ரி, தக்காளி, உருளைக் கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்றாக பசை போல அரைக்கவும். இக்கலவையை முகத்தில் தடவி நன்றாகக் காயும் வரை காத்திருக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனால் பக்க விளைவுகள் ஏதுமின்றி முகம் எப்போதும் பளபளப்பாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்.

திராட்சை :

திராட்சைப் பழங்கள் ஒரு அற்புதமான க்ளின்சர்களாகச் செயல்படும். எனவே அவற்றை எடுத்து சாதாரணமாக முகத்தில் அழுத்தித் தேய்த்தாலே போதும். முகம் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும். முகத்தில் பருக்களும், சிறு கட்டிகளும் நிறைந்து அவஸ்தைப்படுவோருக்கு பயன் தரும் சிறப்பான மாஸ்க்.

எலுமிச்சை சாறுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இக் கலவையை முகத்தில் பிரச்சினை உள்ள பகுதிகளில் தடவி ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்வதால், முகத்தில் உள்ள பருக்களும் சிறு கட்டிகளும் நீங்கும்.

மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் :

பளிச்சிடும் நிறத்தில் சருமம் பிரகாசிக்க மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் உதவும். அதற்கு சிறிது மஞ்சள் தூள், பாதாம் எண்ணெய், கடலை மாவு, பால், சந்தனப் பவுடர் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். இக்கலவையை தினமும் முகத்தில் பூசிவந்தால், முகம் மாசு மருவின்றிப் பொலிவுடன் திகழும்.

ஈஸ்ட்டுடன் கூடிய தயிர் மாஸ்க் :

எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தின் விளைவாக முகத்தில் பரு மற்றும் தோல் தடித்தல் உண்டாகும். மேலும் சருமத் திலுள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக எண்ணெய் சுரக்கும். ஈஸ்ட்டுடன் சிறிது தயிரை கலந்து முகத்தில் தடவினால், எண்ணெய் வழி வதைக் குறைத்து பருக்கள் தோன்றுவதையும் குறைக்கும்.

தேயிலைத்தூள் பை :

கொதிக்கும் நீரில் தேயிலைத்தூள் பைகளை 10 நிமிடங்கள் ஊற வைத்து, பின் நன்றாகக் குளிர வைத்து, நீரில் அலசிய கூந்தலில் இந்த நீரைத் தடவ வேண்டும். இதனால் தலைமுடிக்கு கூடுதல் பளபளப்பைத் தரும் திறன் தேயிலைக்கு உண்டு. மேலும் இந்த முறை தலைமுடியிலுள்ள சிக்குகளை நீக்கி எளிதாகப் பராமரிக்கவும், தலைமுடியை மென்மையாக்கவும் இது உதவுகிறது.

சோள மாவு மற்றும் வாழைப்பழம் :

சோள மாவும், வாழைப் பழங்களும் நம் வீடுகளில் எப்போதும் இருக்கும். இரண்டையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொண்டு, பாதங்களில் தடவி, பின்பு பாதங்களை 30 வினாடிகளுக்கு மசாஜ் செய்தாலே போதும். உடனடியாகவே பாதங்கள் மென்மை யாவதை உணர முடியும்.

சோளமாவு ஒரு சிறந்த எக்ஸ்ஃ பொலியேட்டராக செயலாற்றி, பாதங்களிலுள்ள சருமத்தின் கடினத்தன்மையைப் போக்கும். மேலும் இதில் உள்ள வாழைப்பழமானது பாதங்களை மென்மையாக்கும்.

மாய்ஸ்சுரைசர் :

கைகளை வறட்சியின்றி வைப்பதற்கு வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே மாய்ஸ் சுரைசரைத் தயாரிக்கலாம். அதற்கு முட்டையின் மஞ்சள் கரு, தேன், ஆலிவ் எண்ணெய், சர்க்கரை, எலுமிச்சை ஆகிய வற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒவ்வொரு முறையும் கைகளைக் கழுவும் போது இதனைப் பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பாத்திரங்கள் துலக்கியிருந்தாலும், துணிகள் துவைத்திருந்தாலும், கைகள் வறண்டு போகாமல் மென்மையாகவே இருக்கும்.

ஆரஞ்சு ஸ்டிக் :

ஆரஞ்சு ஸ்டிக் ஒன்றை கொண்டு நகங்களைச் சுத்தம் செய்து நகங்களின் முனையைத் தேய்த்து மழுங்கச் செய்யலாம். சுத்தமான சோப்புத் தண்ணீரில் கைகளை 5 நிமிட நேரம் நனைக்கவும். பின்பு ஆலிவ் எண்ணெய் கொண்டு தினந்தோறும் விரல் நுனிகளை மசாஜ் செய்தால். உங்கள் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

அழகான உதடுகளை பெற :

உதடுகள் வறண்டு போகும் தன்மை உடையவையாக இருந்தால், பாதாம் எண்ணெய் தடவி வரவும். குளிர் காலங்களில் உதடுகள் வெடிக்கின்றனவா? ஆமெனில் சிறிது தேனைத் தடவலாம். இயற்கையான அழகுடன் உதடுகளைப் பெற வேண்டுமென விரும்பினால், உணவில் நிறைய பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

.




ஸ்மார்டாக இருப்பவர்களுக்கான உடை அழகு டிப்ஸ்

* இதற்கெல்லாம் காரணம் உடை மட்டுமே. ஏனோ தானோவென்று உடை அணிவதாலே அவ்வாறு தெரிகிறீர்கள். இதற்க்கும் உங்கள் முக அழகிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.கறுப்பாக மாநிறமாக இருப்பவர்கள் ப்ரைட்டான உடைகள் தேர்வு செய்வது நலம். நீங்கள் பேன்ட் அணிபவராக இருந்தால் பெண்களுக்கு என்றே தற்போது பல ப்ரேண்ட்களில் அலுவலக உடை வெளியிட்டு உள்ளார்கள், நீங்கள் அதை பயன்படுத்தலாம்.

* பேன்ட் மற்றும் வழுவழுப்பான சட்டை தான் தற்போதைய ஃபேஷன், மாடர்னாகவும் அதே சமயம் கவர்ச்சியாகவும் இருக்கும். சுடிதார் அணிபவராக இருந்தால் சரியான ஃபிட் உள்ள இடுப்பளவு சின்னதாக உள்ள சுடிதாரை தான் தேர்வு செய்ய வேண்டும், லூசான உடைகளை அணியக்கூடாது.

* நான் அலுவலகம் எல்லாம் போவதில்லை சுடிதாரும் போடுவதில்லை புடவை மட்டும் தாங்க கட்டுவேன் என்று சொல்கிறீர்களா! கவலையே படாதீங்க. உலகிலேயே டீசன்ட்டாகவும் அதே சமயம் செக்ஸியாகவும் உள்ள உடை என்றால் அது புடவை தான். நல்ல ஸ்ட்ரக்சர் உள்ளவர்களுக்கு எந்த புடவை வேண்டும் என்றாலும் கட்டலாம் அனைத்துமே சிறப்பாக இருக்கும்.

* புடவை கட்டுவது பெரிய விஷயமில்லை அதை சரியான முறையில் கட்ட வேண்டும். என்னங்க நீங்க! எவ்வளவு வருசமாக புடவை கட்டுறேன் எனக்கு புடவை கட்டுறத பற்றி சொல்றீங்களே என்று கோபப்படாதீங்க. ஒரு சிலர் புடவையை ஃப்ளீட் ஒழுங்காக வைக்க மாட்டார்கள்,

* கால் முழுவதும் மறையும் படி கட்ட மாட்டார்கள் தூக்கியபடி இருக்கும், பார்டர் சரியான பக்கத்தில் அளவில் இருக்க வேண்டும், முந்தானை நீளம் குறைவாக இருக்கும், கீழ் பகுதியில் ஃப்ளீட் சரியாக எடுத்து விடாமல் அசிங்கமாக இருக்கும், உடலை சுத்தி வைத்து கட்டியது போல இருக்க கூடாது இது மாதிரி நிறைய இருக்கு.

முக்கியமான விஷயம் பெண்களின் லோ ஹிப். பெரும்பாலும் இதை போல இப்போதைய பெண்கள் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அது அனைவருக்கும் நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே நன்றாக இருக்கும். இதை விலாவாரியாக விவரிக்க முடியாது என்பதால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

* செக்ஸியாக இருக்க வேண்டுமே தவிர ஆபாசமாகவோ அல்லது மற்றவர்கள் பார்த்து வேறு விதமாக கிண்டலடிக்கும் படியோ உடை அணியக்கூடாது. அதிகப்படியான லோ நெக் மற்றும் லோ ஹிப் அவ்வாறான தோற்றத்தை தந்து விடும். ஒரு சிலருக்கு அது அழகாக இருக்கலாம், ஆனால் அவர்கள் பெரும்பான்மையானவர்கள் கிடையாது.

* அதே போல பெண்களுக்கே உள்ள எண்ணம் மிகவும் விலை உயர்வான ஆடையை அணிந்தால் மட்டுமே அழகாக தெரிவோம் என்று, இது முற்றிலும் தவறான எண்ணம். மிக குறைந்த விலைகளில் கூட அழகான புடவைகள் உள்ளது, எந்த உடையாக இருந்தாலும் நமக்கு பொருத்தமாக உள்ளதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, விலை உயர்ந்ததாக உள்ளதா என்று பார்க்க கூடாது.

* நான் கூறிய எல்லாவற்றையும் விட மிக மிக மிக முக்கியமானது தன்னம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருப்பதும் தான். ஒருவரை மிக அழகாக காட்டுவதில் மிக முக்கிய பங்காற்றுவது உடை தான், எனவே இப்படி எல்லாம் இருக்கிறோமே என்று வருத்தப்படாமல் உடைகளை உங்கள் உடல்வாகிற்கு தகுந்த மாதிரி மாற்றி அமைப்பதன் மூலம் நம்மிடம் உள்ள சில குறைகளை வெற்றி கொள்ள முடியும்.

* இது வரை உங்களை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் நீ மட்டும் கொஞ்சம் கலராக இருந்து இருந்தா அல்லது எடை கூடி, குறைந்து இருந்தா இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்லுபடி ஆகி விடும். அதே போல இன்னொரு முக்கியமான விஷயம் உடை விசயத்தில் நன்கு ஆர்வம் இருப்பவர்களால் மட்டும் தொடர்ந்து இதை பின் பற்ற முடியும், மற்றவர்கள் ஆசைக்கு ஒரு வாரம் இருந்து விட்டு வழக்கம் போல புலம்பி கொண்டு இருப்பார்கள்.

* எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்பது அனைத்திற்கும் பொருந்தும் நம் உடை தேர்வு உட்பட. மேற்கூறிய அனைத்தும் பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமே, மற்றவர்கள் இதை மனதில் வைத்துக்கொள்ளலாம், அதே போல ஓரளவு குண்டாக உள்ளவர்களுக்கு மட்டுமே நமது ஆடையை மாற்றி அமைப்பதின் மூலம் ஓரளவு சரி செய்யலாம், அதிக குண்டாக உள்ளவர்கள் உடற்பயிற்சியை தவிர வேறு வழி இல்லை

வெள்ளரிக்காய் மாஸ்க்

வெள்ளரி எல்லா சருமத்தினருக்கும் மிகவும்  நல்லதாகும்.வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். இது பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது. வெள்ளரிக்காய் மாஸ்க் உபயோகிக்கும் முறை:-

முடியை கெட்டியாக முடிந்து கொள்ளவும். தூய்மையான நீரைக் கொண்டு நன்றாக முகத்தைக் கழுவிக் கொள்ளவும். வெள்ளரிக்காய், தேன்,மற்றும் புதினா சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைப்பழசாறு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.

அகன்ற பாத்திரம் மற்றும் மிருதுவான பிரஷ்ஷை உபயோகித்து முகத்திற்கு “மாஸ்கை பூசவும்.  முகத்தின் மென்மையான பாகங்களான கண்களின் ஓரம், இமைகள் மற்றும் உதடுகள் ஆகியவற்றில் மாஸ்கை தடவுவதை தவிர்க்கவும்.

ஆனால் கண்ணின் மீது வெள்ளரியை வட்டமாக வெட்டி வைக்கவும். மாஸ்க் தடவிய பிறகு குறைந்தது அரை மணி நேரம் காய வைக்கவும். பின்பு மாஸ்கை அகற்றும் போது கவனத்துடன் அகற்றவும். மீண்டும் தூய்மையான நீரால் நன்றாக முகத்தைத் துடைத்துக் கழுவவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.









*

சரும குறைபாட்டை போக்கி இளமை தோற்றம் தரும் தேன்

சிறு சிறு தேன் துளிகள் சருமத்தைப் பராமரிக்கும் பணியினை ஆச்சரியப்படத் தக்க வகையில் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது வரை பருகும் தேநீரில் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்தியிருப்பீர்கள். இப்போது அழகுப் பராமரிப்பிற்கு தேனைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி, அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈரமாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி, அதன் இளமைத் தன்மையைப் பேணுகின்றது.

மேலும் இந்த தேன் சருமத்திற்கான பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப் பிற்கான அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, பண்டைக் காலத்திலிருந்து சிறந்த உணவுப் பெருளாக பயன்படும் தேன் தற்போது, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் பயன்படுகிறது.

மொத்தத்தில் அழகுப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக தேன் இருக்கும். இப்போது கூந்தல் பராமரிப்பிற்கும், சருமப் பராமரிப்பிற்கும் சில தேன் கலந்த வீட்டுக்குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திப் பாருங்கள்.

கூந்தலுக்கு :

சிக்கலற்றபட்டுப் போன்ற கூந்தல் வேண்டுமா? அதுவும் குறிப்பாக மழைக்காலங்களில் கூந்தல் எண்ணெய் பசையின்றி பட்டுப்போல மென்மையாக இருக்க வேண்டுமா? அப்படியாயின் இம்முறையைப் பயன்படுத்திப்பாருங்கள்.

ஒரு கிண்ணத்தில், இரண்டு மேசைக் கரண்டி தயிர், இரண்டு முட்டைகள் (வெள்ளைக்கரு மட்டும்), எலுமிச்சைச் சாறு, ஐந்து துளி தேன் ஆகியவை கலந்து கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் அரை மணிநேரம் கழித்து, தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். இதனால் கூந்தலானது பட்டுப்போல மென்மையாகி இருப்பதைக் கவனிப்பீர்கள்.

பளபளப்பான கூந்தலுக்கு :

தேனுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து கூந்தல் மீது தடவி, சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் அலசினால், கூந்தல் பளபளப்புடன் இருப்பதைக் காண முடியும்.

பருக்கள்  :

சிலரது சருமம் எளிதில் பருக்கள் உருவாவதற்கு வசதியானதாக இருக்கும். பருக்கள் நிறைந்த சருமம் உண்மையிலேயே பராமரிப்பதற்கு கடினமானது தான். பருக்களைப் போக்குவதும் கடினமான காரியம் தான். எனவே வீட்டில் உள்ள மசாலா பொருள்களில் ஒன்றான பட்டையையும் சிறிது தேனையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பின் இதனை பருக்களின் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்க விடுங்கள். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவுங்கள். பருக்களைப் போக்குவதற்கு இது சிறப்பான ஒரு வீட்டு மருத்துவம்.

கலப்பட தேனுக்கான அறிகுறிகள்  :

மார்க்கெட்டில் மிக எளிதாகக் கிடைக்கும் பொருள் தான் தேன் என்றாலும், அது தரமான தேனா என்று பார்த்து வாங்குங்கள். தேனில், வெல்லப்பாகு அல்லது சர்க்கரைப்பாகு அல்லது சில சமயங்களில் தண்ணீர் கலந்தும் கலப்படமான தேன் விற்கப்படுகிறது.

கலப்படம் செய்யப்பட்ட தேனில் இயற்கையான மருத்துவக் குணங்கள் இருப்பதில்லை. ஆகவே தேனை வாங்கும் போது கவனமாக இருங்கள். சுத்தமான தேனா அல்லது கலப்படம் செய்யப்பட்ட தேனா என்று சோதனை செய்ய ஒரு எளிய வழி, அதனை உறைய வைத்துப் பார்ப்பது ஆகும்.

அதற்கு வாங்கிய தேனை, வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைத்திருந்து எடுத்துப் பாருங்கள். சுத்தமான தேன் என்றால், அதே பிசுபிசுப்புடன் பாகு நிலையிலேயே இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன் என்றால், உறைந்திருக்கும். வீட்டு தேன் பாட்டிலைச் சுற்றி எறும்புகள் மொய்க்கின்றனவா?

அப்படியென்றால் அது கலப்படமான தேன். சுத்தமான தேன் எறும்புகளை அண்டவிடாது. சிறிது நாள் கழித்து தேன் படிகங்களாக அடியில் படிகிறதா? அப்படி யென்றால், அது கலப்படமான தேன் ஆகும். ஏனெனில் அதில் சர்க்கரைப்பாகு கலக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்.

தேன் வாங்கும் போது மேற்கூறிய சோதனைகளைச் செய்து பார்த்துக் கவனமுடன் வாங்குங்கள். தேனின் மருத்துவக் குணங்களைப் பெறுங்கள். நல்ல தேனை அடையாளம் கண்டுவிட்டீர்கள் என்றால், அந்தக் கம்பெனித் தயாரிப்புகளையே தொடர்ந்து வாங்குங்கள்.

அனைவருக்கும் ஏற்ற உடை அழகு டிப்ஸ்!



* கறுப்பாக மாநிறமாக இருப்பவர்கள் ப்ரைட்டான உடைகள் தேர்வு செய்வது நலம். நீங்கள் பேன்ட் அணிபவராக இருந்தால் பெண்களுக்கு என்றே தற்போது பல ப்ரண்ட்களில் அலுவலக உடை வெளியிட்டு உள்ளார்கள், நீங்கள் அதை பயன்படுத்தலாம்.

* பேன்ட் மற்றும் வழுவழுப்பான சட்டை தான் தற்போதைய ஃபேஷன், மாடர்னாகவும் அதே சமயம் கவர்ச்சியாகவும் இருக்கும். சுடிதார் அணிபவராக இருந்தால் சரியான ஃபிட் உள்ள இடுப்பளவு சின்னதாக உள்ள சுடிதாரை தான் தேர்வு செய்ய வேண்டும், லூசான உடைகளை அணியக்கூடாது.

* நான் அலுவலகம் எல்லாம் போவதில்லை சுடிதாரும் போடுவதில்லை புடவை மட்டும் தாங்க கட்டுவேன் என்று சொல்கிறீர்களா! கவலையே படாதீங்க. உலகிலேயே டீசன்ட்டாகவும் அதே சமயம் செக்ஸியாகவும் உள்ள உடை என்றால் அது புடவை தான்.

நல்ல ஸ்ட்ரக்சர் உள்ளவர்களுக்கு எந்த புடவை வேண்டும் என்றாலும் கட்டலாம் அனைத்துமே சிறப்பாக இருக்கும்.புடவை கட்டுவது பெரிய விஷயமில்லை அதை சரியான முறையில் கட்ட வேண்டும்.

பார்டர் சரியான பக்கத்தில் அளவில் இருக்க வேண்டும், கீழ் பகுதியில் ஃப்ளீட் சரியாக எடுத்து விடாமல் அசிங்கமாக இருக்கும், உடலை சுத்தி வைத்து கட்டியது போல இருக்க கூடாது.

முக்கியமான விஷயம் பெண்களின் லோ ஹிப். பெரும்பாலும் இதை போல இப்போதைய பெண்கள் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அது அனைவருக்கும் நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே நன்றாக இருக்கும்.

* செக்ஸியாக இருக்க வேண்டுமே தவிர ஆபாசமாகவோ அல்லது மற்றவர்கள் பார்த்து வேறு விதமாக கிண்டலடிக்கும் படியோ உடை அணியக்கூடாது. அதிகப்படியான லோ நெக் மற்றும் லோ ஹிப் அவ்வாறான தோற்றத்தை தந்து விடும். ஒரு சிலருக்கு அது அழகாக இருக்கலாம், ஆனால் அவர்கள் பெரும்பான்மையானவர்கள் கிடையாது.

* அதே போல பெண்களுக்கே உள்ள எண்ணம் மிகவும் விலை உயர்வான ஆடையை அணிந்தால் மட்டுமே அழகாக தெரிவோம் என்று. இது முற்றிலும் தவறான எண்ணம். மிக குறைந்த விலைகளில் கூட அழகான புடவைகள் உள்ளது, எந்த உடையாக இருந்தாலும் நமக்கு பொருத்தமாக உள்ளதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, விலை உயர்ந்ததாக உள்ளதா என்று பார்க்க கூடாது.

* நான் கூறிய எல்லாவற்றையும் விட மிக மிக மிக முக்கியமானது தன்னம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருப்பதும் தான். ஒருவரை மிக அழகாக காட்டுவதில் மிக முக்கிய பங்காற்றுவது உடை தான், எனவே இப்படி எல்லாம் இருக்கிறோமே என்று வருத்தப்படாமல் உடைகளை உங்கள் உடல்வாகிற்கு தகுந்த மாதிரி மாற்றி அமைப்பதன் மூலம் நம்மிடம் உள்ள சில குறைகளை வெற்றி கொள்ள முடியும்.

* இது வரை உங்களை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் நீ மட்டும் கொஞ்சம் கலராக இருந்து இருந்தா அல்லது எடை கூடி, குறைந்து இருந்தா இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்லுபடி ஆகி விடும்.

அதே போல இன்னொரு முக்கியமான விஷயம் உடை விசயத்தில் நன்கு ஆர்வம் இருப்பவர்களால் மட்டும் தொடர்ந்து இதை பின் பற்ற முடியும், மற்றவர்கள் ஆசைக்கு ஒரு வாரம் இருந்து விட்டு வழக்கம் போல புலம்பி கொண்டு இருப்பார்கள்.

* எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்பது அனைத்திற்கும் பொருந்தும் நம் உடை தேர்வு உட்பட. அதே போல ஓரளவு குண்டாக உள்ளவர்களுக்கு மட்டுமே நமது ஆடையை மாற்றி அமைப்பதின் மூலம் ஓரளவு சரி செய்யலாம்.

தலைமுடி பாதுகாப்பிற்கு சில எளிய குறிப்புகள்

வாரத்திற்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தடவி ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லது.

• ஈரமான தலைமுடியை நேராக ‘ட்ரையர்’ என்ற கருவி போட்டு காய வைக்க கூடாது.

• தலைமுடியை ந‎ன்றாகத் துவாலையால் துடைத்து விட்டு ‘ட்ரையர்’ போட்டு காய வைக்கலாம்.

• தலைமுடிக்கு பயன்படுத்தும் ஹேர் ஆயில், ஷாம்பூ, முதலியவற்றை அடிக்கடி மாற்றக் கூடாது.

• ஒருவர் உபயோகித்த சீப்பு துவாலையை மற்றவர் உபயோகிக்க கூடாது.

• தலைமுடி நுனியில் அல்லது மேல்புறம் ப்ளாஸ்டிக் ரப்பர் பாண்ட், ப்ளாஸ்டிக் ஹெட்பாண்ட் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

• வெயிலில் போகும் போது தலைமுடியை வெயில் படாமலிருக்கும்படி கவனமாக குடை அல்லது தொப்பி ‘ஸ்கார்ப்’ பய‎ன்படுத்திப் பாதுகாக்கவும்.

அழகான கூந்தலுக்கு...

நீண்ட, அழகான கூந்தலைப் பெற எல்லா பெண்களுக்குமே ஆசைதான். கழித்து அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால் முடிகொட்டுவது நின்றுவிடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளைக் கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சம்பழச்சாறு கலந்து கலக்கி, தலையில் தேய்த்துக் குளித்துவர தலைமுடி உதிர்வது நிற்கும்.

இளநரை மீண்டும் கறுப்பாக மாறுவதற்கு, அடிக்கடி உணவில் நெல்லிக்காயைச் சேர்த்து வருவது நலம். வெந்தயம், குன்றிமணியைப் பொடி செய்து, தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து ஒரு வாரத்துக்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்திப் பூவை இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி ஊறவைத்துத் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக மாறும். தலைமுடி கருமை, மினுமினுப்புப் பெற அதிமதுரம் 20 கிராம் எடுத்து 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவைத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற, மரிக்கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்குத் தடவினால் பலன் இருக்கும். வேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீரில் வேகவைத்து, ஒருநாள் முளைக்கீரை வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும்.

முடி நன்கு வளர்வதற்கு கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கலாம்.

ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்க உதவும் இயற்கை எண்ணெய்கள்!!!

அழகைக் கெடுக்கும் விஷயங்களில் ஸ்ட்ரெட்ச் மார்க் முக்கிய பிரச்சனையாக உள்ளது.. இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் உடலின் வயிறு, தொடை, பேக் போன்ற இடங்களில் தான் பெரும்பாலும் வரும். சில சமயங்களில் சிலருக்கு மார்பகங்களில் கூட வரும்.

இந்த ஸ்ட்ரெட்ச் மார்க் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் கருத்தரித்தல், உடல் எடை அதிகரித்தல், ஜிம் சென்று பயிற்சி செய்தல் போன்ற காரணங்களால், சருமமானது திடீரென்று விரிந்து சுருங்கும் போது, தழும்புகளாக மாறுகின்றன.

ஆகவே இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குளை போக்குவதற்கு பல க்ரீம் மற்றும் ஜெல் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் இவை எந்த ஒரு பலனையும் தருவதில்லை. அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு முயற்சித்தால், நிச்சயம் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கலாம்.

அதிலும் இயற்கை எண்ணெய்கள் கொண்டு தினமும் மசாஜ் செய்து வருவதன் மூலம், விரைவில் சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைய வைக்கலாம். அதுமட்டுமின்றி, சருமத்தில் வறட்சி ஏற்படுவதையும் தடுக்க முடியும். அவை என்னவென்று பார்க்கலாம்..

• ரோஸ்மேரி ஆயிலை பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தினமும் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், தழும்பானது படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்.

• ஆலிவ் ஆயிலைக் கொண்டு, மசாஜ் செய்து வந்தாலும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்கலாம். மேலும் இதனால் சருமம் நன்கு ஈரப்பசையுடன் வறட்சியடையாமல் இருக்கும்.

• பாதாம் எண்ணெயில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் ஒன்று தான் ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்குவது. அதற்கு பாதாம் எண்ணெயை, ஆலிவ் ஆயில் மற்றும் கோதுமை எண்ணெயுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் 15 நிமிடம் மசாஜ் செய்து கொண்டு படுக்க வேண்டும். இதனால் நாளடைவில் தழும்புகள் மறைந்துவிடும்.

• லாவெண்டர் எண்ணெயுடன், ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

 முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்.

*  கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.

*  நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது எப்படி?



முகத்திற்கு பேஷியல் தானாகவே செய்து கொள்ளும் போது கவனக் குறைவாக சரியாக செய்யாவிட்டால் தோலில் பிரச்சினைகள் உண்டாகும். அலர்ஜி எரிச்சல் ஏற்படலாம். சரியான க்ரீம்மை அளவாகப் போட்டு சரியாக ஆவி பிடிக்க வைத்து கறுப்புப் புள்ளிகளை (பிளாக் ஹெட்ஸ்) நீக்க வேண்டும்.

அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் தவறியும் கூட தானே செய்து கொள்ளக் கூடாது. இனி வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். முகத்தினை நரம்புகள் தெரியாமல் மசாஜ் செய்யக் கூடாது. முகத்தை நன்றாகக் கழுவி விட்டு சில வகை பேக்குகளை மட்டுமே போடலாம்.

- உலர்ந்த சருமத்தினர் புருவத்திற்கு விளக்கெண்ணெய் தடவவும். உதட்டின் மேல் வாசலீன் அல்லது கிளிசரின் தடவவும், பால், ஓட்ஸ், பாதம் எண்ணெய் சிறு துளிகள் கலந்து போட்டு சில நிமிடங்கள் ஊறிய பிறகு முகத்தை கழுவிக் கொள்ளவும்.

- சாதாரண சருமம் உள்ளவர்கள் ஒரு பிடி புதினா, இரண்டு வேப்பிலை, இரண்டு துளசி இலைகளை அரைத்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறிய பின் முகத்தைக் கழுவலாம்.

- எண்ணெய் சருமம் உள்ளவர்கள் பன்னீர், ஓட்ஸ், ஆஸ்ட்டிரிஞ்சன்ட், தயிர், எலுமிச்சைச்சாறு, ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.

- முகம் பளபளப்பாக இருக்க பாசிப்பயிறு, சம்பங்கி விதை, கார்போக அரிசி, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து அதில் சிறிதளவு எடுத்து பன்னீரில் கலந்து முகத்தில் பேக் போல் வாரம் ஒரு முறை போட்டு சில நிமிடங்கள் ஊறி பிறகு கழுவ வேண்டும்.

- ரசாயன வகை கிரீம்களையும் மற்ற அழகு சாதனங்களையும் உபயோகிக்கும் போது முகம் உடனடியாக பளபளப்பாகி பலன் அளிப்பது போல் தோன்றினாலும், நாளாவட்டத்தில் முகத்தின் பொலிவு மறைந்து விடும். அதுவே மூலிகைகளை உபயோகித்து வந்தால் பலன் தெரிய சில காலம் ஆனாலும் சருமம் பாதுகாப்பாக இருக்கும்.

மாசு மருவற்ற சருமத்திற்கு தேன்

முகத்திலுள்ள சருமம் மாசு மருவின்றித் திகழ வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியெனில் பின்வரும் தேன் ஃபேஸ் மாஸ்க்கை செய்து பாருங்கள். அதற்கு சிறிது தேன், கடலை மாவு, சந்தனம், பன்னீர் ஆகியவற்றைக் கலந்து கெட்டியான பதத்திற்குக் கலந்து கொள்ளுங்கள்.

பின் இதனைக் கொண்டு முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போல பூசிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் நன்றாகக் காயவிடுங்கள். நன்கு காய்ந்ததும், முகத்திலிருந்து உரித்தெடுங்கள். இம்மாஸ்க்கானது முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவது மட்டுமின்றி, முகத்தை மென்மையாகவும் ஆக்கும்.

அதிலும் வாரமொரு முறையாவது இதனைச் செய்து வந்தால், நல்ல பலன் தெரியும். சூரிய ஒளி அதிகம் படுவதால், சருமம் கருமை அடைகிறதா? அப்படியென்றால் அதற்கு சிறப்பான தீர்வாக தேன் அமையும். தேன், பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து கொள்ளுங்கள்.

பின் அதனை சூரிய ஒளியால் கருமை அடைந்த பகுதிகளில் இக்கலவையைத் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின் தண்ணீர் கொண்டு நன்கு அலசிவிடுங்கள். தீப்புண் தழும்புகள் நெருப்பில் சுட்டுக் கொண்டீர்களா? உடனடியாக தீக்காயத்தின் மீது சிறிது தேனைத் தடவுங்கள்.

தேனுக்குக் காயத்தினை ஆற்றும் தன்மையும், கிருமி நாசினித் தன்மையும் உண்டு. இதன் காரணமாக தீப்புண் எளிதில் ஆறுவதோடு, தீக்காயத்தால் உண்டாகும் தழும்புகளும் வழக்கத்தை விட குறைவான அளவில் இருக்கும்.

தேவையற்ற முடிகளை நீக்குதல்

முகத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற முடிகளை நீக்க விரும்பினால், இம்முறையைச் செய்துபாருங்கள். ஒரு கிண்ணத்தில், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை, சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை ஒரு கரண்டி கொண்டு நன்றாக அடித்துக் கலக்கிப் பசை போலாக்குங்கள். பின் இதனை அப்படியே ஒரு மைக்ரோவேவ் ஓவனில் மூன்று நிமிடங்கள் வைத்து சூடு செய்யுங்கள்.

பிறகு வெளியே எடுத்து, கை சூடு தாங்கும் பதத்தில் வந்ததும், அதனை முகத்தில் முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். குறிப்பாக முடியானது எந்த திசையை நோக்கி வளர்ந்துள்ளனவோ, அந்தத் திசைகளில் தடவ வேண்டியது முக்கியம்.

இப்போது ஒரு சுத்தமான பருத்தியால் ஆன துணி ஒன்றை எடுத்துக் கொண்டு, முகத்தில் இக்கலவை தடவிய பகுதியின் மேல் போர்த்தி அழுத்தி எதிர்த்திசையில் இழுங்கள்.

இப்போது முகத்தில் உள்ள முடிகள் வேரோடு அகற்றப்பட்டுவிடும். இதனால் முகத்தில் நீண்ட காலத்திற்கு முடிகள் வளராமல், முகம் வழவழப்புடன் திகழும்.

வேலைக்கு போகும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்

தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழகை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஆகவே அத்தகைய பெண்களுக்கு ஒருசில எளிமையான அழகு குறிப்புகளை பரிந்துரைக்கிறோம்..

* கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், கருவளையமின்றியும் இருக்க, தினமும் காலையில் எழுந்ததும், உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க செல்ல வேண்டும்.

* சில பெண்களுக்கு முகத்தில் உள்ள முடியானது நன்கு தெரியும். இதனை மறைக்க வேண்டுமெனில், ஃபௌண்டேஷன் போடலாம். இல்லையெனில், வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையை முகத்தில் தேய்த்து வந்தால், முடி தெரியாது.

* சரும பிரச்சனைகளிலேயே முகப்பரு பிரச்சனையால் தான் பெரும்பாலானோர் அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் பேக்கை, வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும்.

* சரும சுருக்கம் ஏற்பட்டால், அது முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்தும். இதனை தற்காலிகமாக மறைக்க கன்சீலர் பயன்படுத்தலாம். ஆனால் இயற்கையாக மறைக்க வேண்டுமெனில், தயிரை முகத்திற்கு தடவி நன்கு உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ச்சியாக வாராவாரம் ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் தெரியும்.

* கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமெனில், பீர் அல்லது பீர் ஷாம்பு கொண்டு கூந்தலை அலச வேண்டும். வேண்டுமெனில், ஒயின், வோட்கா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

* நகங்கள் அழகாக இருப்பதற்கு நெயில் பாலிஷ் போடுகிறோம். ஆனால் அந்த நெயில் பாலிஷ் சீக்கிரமே போய்விடுவதால், அது நகங்களின் அழகைக் கெடுக்கிறது. ஆகவே அது நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமெனில், பால் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, பின் நெயில் பாலிஷ் போட வேண்டும்.

* முழங்கை வறட்சியுடன் அசிங்கமாக இருந்தால், அதனை போக்க தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, முழங்கையும் மென்மையாக இருக்கும்.

கூந்தல் வளர்ச்சிக்கான குறிப்புகள்

ஹேர் ஸ்கிரைப்பர் : முடியில் ஷாம்பு போடும் போது விரலால் மண்டையோட்டு பகுதியில் மசாஜ் செய்வதை மேலும் சிறப்பாக செய்ய ஹேர் ஸ்கிரைப்பர் உதவும். ரப்பரால் உருவாக்கப்பட்ட இதன் பற்கள், மண்டையோட்டுப் பகுதி சருமத்தில் பட்டு ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும்.

ஹேர் மூஸ் : ஷேவிங் நுரை வடிவத்தில் காணப்படும். இதை பயன்படுத்தினால் கூந்தலின் உள்பகுதி அடர்த்தியாக இருப்பது போல் தோன்றும்.

ஹேர் சிரம் :  கூந்தலுக்கு பாலிஷிங் எபக்ட் கிடைப்பதற்கு உதவும். ஜொலிப்பு அதிகரிக்கும். முடி, ஒன்றுக்கு ஒன்று ஒட்டாமல் பிரிந்து அழகாக காணப்படும்.

ஹேர் மாஸ்க் : முடியை மென்மையாக்கும். இந்த மென்மைக்காகதான் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தி வருகிறோம். ஹேர் மாஸ்க் அதன் நவீனமாகும். மொராக்கோ ஆயில்...... முடிக்கு பலத்தை தருவது சுரோட்டினாகும். அதன் இழப்பை ஈடுகட்டுவதால், முடி பலம் பெறும்.




முகத்தில் கரும்புள்ளிகளை போக்கும் மாஸ்க் மருத்துவம்

மூக்கின் ஓரங்களில் தங்கியுள்ள கரும்புள்ளிகளை தேய்த்து தேய்த்து சோர்ந்து விட்டீர்களா? அப்படியெனில், அதனைப் போக்க வேறு என்ன வழி உள்ளது என்று யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

சரி, இந்த கரும்புள்ளிகள் எப்படி வரு கிறதென்று தெரியுமா? சருமத்துளைகளானது எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந்த செல்களால் அடைக்கப்படுகிறதோ, அப் போது தான் கரும்புள்ளிகள் உருவாகின்றன. பொதுவாக இந்த கரும்புள்ளிகள் மூக்கு, தாடை, நெற்றி மற்றும் கன்னங்களில் அதிகம் காணப்படும்.

ஏனெனில் அந்த இடங்களில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால், அந்த பகுதிகளில் அதிகம் ஏற்படுகிறது. எனவே தான் முகத்திற்கு அவ்வப்போது மாஸ்க், ஸ்கரப் போன்றவற்றை மேற்கொள்வது இன்றியமையாததாக உள்ளது.

அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி ஸ்கரப் செய்ய வேண்டாம். வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு, அருமையான முறையில் கரும் புள்ளிகளை போக்கலாம். இப்போது முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்குவதற்கு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும் என்று பார்ப்போம்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் பவுடரை பாலில் கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், கரும் புள்ளிகளானது எளிதில் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.

தயிர் :

தயிரில் தேன் மற்றம் கடலை மாவு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய வைத்து, தண்ணீர் ஊற்றி மீண்டும் ஸ்கரப் செய்ய வேண்டும்.

எலுமிச்சை :

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் இருப்பதால், அதனைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசையுடன், கரும்புள்ளிகளும் நீங்கிவிடும். மேலும் முகமும் வெள்ளையாகும்.

ஆரஞ்சு தோல் :

ஆரஞ்சு தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தை ஸ்கரப் செய்து, உலர விட்டு கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடாவும் ஒரு சூப்பரான கரும்புள்ளியைப் போக்கும் பொருள் தான். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, ஈரமான முகத்தில் அதனைக் கொண்டு மசாஜ் செய்தால், கரும்புள்ளிகளுடன் முகப்பருக்களும் நீங்கி விடும்.

கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்

முள்ளங்கி :

முள்ளங்கியை சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, உலர வைத்து கழுவினாலும், கரும்புள்ளிகள் மறையும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நூறு சதவீத உண்மை. அந்த அகத்தை மாசற்ற வகையில் பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது.

அழுக்கு படிந்த முகத்தை நாம் கண்ணாடியில் பார்க்கும்போதே தன்னம்பிக்கை என்பது பறிபோய்விடும். அதனை நம்பிக்கையாக மாற்ற மேற் கூறிய மாஸ்க் வகைகளை (குறைந்த செலவு மட்டுமே) பயன்படுத்தி அகத்தை மேலும் அழகுற செய்வோம்.

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் போல் அரைத்து, 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

கொத்தமல்லி :

கொத்தமல்லியை அரைத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் லேசாக மசாஜ் செய்து, வெது வெதுப்பாக இருக்கும் நீரில் அலச வேண்டும்.

வெள்ளரிக்காய் :

முகத்திற்கு ஆவிப்பிடித்து 10 நிமிடம் கழித்து, வெள்ள ரிக்காயை அரைத்து முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு இருக்கும்.

இஞ்சி :

ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, அதனை முகத்தில் 5-10 நிமிடம் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு 23 முறை செய்து வந்தால், கரும்புள்ளி போவது உறுதி.


முகத்தின் கருமையை போக்கும் இயற்கை மாஸ்க்குகள்

முட்டை : முட்டையை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

பப்பாளி : பப்பாளியும் கரும்புள்ளியைப் போக்கும் பொருட்களில் சிறந்தது. எனவே நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து அலச வேண்டும்.

கடலை மாவு : கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும்.

கற்றாழை : கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம்.

வேப்பிலை : வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் ஆவிப்பிடித்து, முகத்தை நல்ல சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.

சந்தனம் : சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

பட்டை : பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் : பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும்.

டூத் பேஸ்ட் : கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் டூத் பேஸ்ட் தடவி காய வைத்து, பின் மென்மையாக மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஆவி பிடித்து, காட்டனால் தேய்த்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவ தோடு, சருமத்துளைகளும் மூடிக் கொள்ளும்.

ஆலிவ் ஆயில் : 5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத் தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஆவிப்பிடித்து, ஈரமான துணியால் தேய்த்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்கி விடும்.

எண்ணெய்தன்மை கொண்ட கூந்தல் பராமரிப்பு

எண்ணெய் தன்மை கொண்ட கூந்தல் என்றால் பிரச்சனை அதிகம். உஷ்ணம் அதிகரிக்கும் போதும், டென்ஷன் கூடும் போதும் எண்ணெய் அதிகம் சுரக்கும். இந்த வகையான கூந்தலைக் கொண்டவர்களின் மயிர்கால் எப்பொழுதும் எண்ணெய்யில் ஊறியது போல் காட்சியளிக்கும். கூந்தலை அடிக்கடி கழுவாவிட்டால் சொறி ஏற்படும்.

பங்கல் இன்பெக்ஷன் வாய்ப்பு மிக அதிகம் என்பதால் தினமும் கூந்தலுக்கு ஷாம்பு போட்டு கழுவவேண்டியதிருக்கும். கழுவும்போது ஹேர் ஸ்கிரபர் பயன்படுத்தி தலை சருமத்தை தேய்த்து கழுவ வேண்டும். வறண்டு போய் காணப்படும் முடியின் கீழ்ப்பகுதியில் மட்டும் கண்டிஷனர் போடலாம்.

முடி உலர்ந்த பின்பு சீவுவதற்கு முன்பு ரொம்ப வறண்டு போய் காணப்பட்டால் சிரம் போட்டுகொள்ளலாம். தலை சருமத்தில் இன்பெக்ஷன் இருந்தால் 15 நாட்களுக்கு ஒருமுறை சிறிதளவு பீர் எடுத்து அதில் பஞ்சை முக்கி மண்டை ஓட்டுப்பகுதியில் தேய்த்து கழுவுவது நல்லது.

மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்குகள்!!


மஞ்சளை ஒருசில பொருட்களுடன் சேர்த்து சருமத்தை பராமரித்து வந்தால், சருமத்தின் கருமை நிறம் முற்றிலும் நீங்கி, சருமம் விரைவில் வெள்ளையாவதை உணரலாம். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும். சருமத்தை வெள்ளையாக்கும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்குகளைப் பார்ப்போமா!!!

மஞ்சள் மற்றும் மில்க் க்ரீம்: மஞ்சள் துளை, மில்க் க்ரீமுடன் சேர்த்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், விரைவில் சருமம் வெள்ளையாகும். ஏனெனில் இதில் உள்ள மில்க் க்ரீம் சருமத்தின் ஈரத்தன்மையை தக்க வைக்கவும், மஞ்சள் தூள் சருமத்தின் கருமை நிறத்தை போக்கும்.

மஞ்சள் மற்றும் தேன்: மஞ்சள் தூளை 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மைதா சேர்த்து கலந்து, கெட்டியான பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

மஞ்சள் மற்றும் சந்தனம்: சருமத்தில் உள்ள பருக்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று காணப்பட வேண்டுமெனில், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பேஸ்ட், சிறிது சந்தனப் பொடி, 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, அந்த கலவையை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர்: 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் ரிலாக்ஸ் ஆவதுடன், சருமம் வெள்ளையாகவும் காணப்படும்.

மஞ்சள் மற்றும் முல்தானி மெட்டி: அனைவருக்குமே முல்தானி மெட்டியைப் பற்றி நன்கு தெரியும். அதிலும் முல்தானி மெட்டி பருக்கள் மற்றும் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைப் போக்க வல்லது என்பதும் தெரியும். ஆனால் அந்த முல்தானி மெட்டியை மஞ்சள் தூள் மற்றும் பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவினால் சருமம் பளிச்சென்று காணப்படும். 

உடல் அழகிற்கு ஆலோசனைகள்

 ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங்கள் கழித்து கடலை மாவை உபயோகித்து முகம் கழுவ வேண்டும்.

* சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

* மஞ்சள் தூள், சந்தனப் பொடி மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

* பாலை உபயோகித்து சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது.

* அறையில் எப்போதும் ஈரப்பதம் நிலவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல்லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது.

* வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம் `ஷவரில்` நிற்பது சருமத்துக்கு நல்லது. குளித்த பிறகு துண்டை வைத்து முரட்டுத் தனமாக உடம்பை துடைக்கக் கூடாது. மென்மையாக உடம்பின் மீது துண்டை ஒற்றி எடுக்க வேண்டும்.

* வைட்டமின் `ஏ` மற்றும் `சி` அதிகமுள்ள உணவை உண்டு வந்தால் சருமத்துக்கு நல்லது.

* கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.

* பாலும், எலுமிச்சை சாறும் கலந்த கலவையை முகத்தில் பூசி இயற்கையான முறையில் `பிளீச்` செய்யலாம்.

* வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

* கடுகு எண்ணையை உடலில் பூசி 5 நிமிடங்களுக்குத் தேய்க்க வேண்டும். அதற்குப் பிறகு கடலை மாவு அல்லது சோப்பை உபயோகித்துக் குளிக்க வேண்டும்.

* ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

* உடலில் `புளோரின்` பற்றாக் குறையால் சருமம் சொரசொரப்பாக மாறுகிறது. உணவை சமைத்து உண்பதால் உணவில் இருக்கும் `புளோரின்` சத்து போய்விடுகிறது. இதைத் தடுக்கப் பச்சைக் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆட்டுப் பால், வெண்ணை, முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேன்டும்.

* சருமத்தின் மீது சொறி சொறியாக வருவது `சிலிக்கான்` பற்றாக் குறையின் அறி குறியாகும். பார்லி, தக்காளி, ஸ்டிராபெர்ரி பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினை ஏற்படாது.

* `குளோரோபில்` பற்றாக்குறையால் தோல் உறியும். இதைத் தடுக்க கோதுமை மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பாலாடையுடன் கடலை மாவை சேர்த்து கண், புருவம் மற்றும் உதடுகளைத் தவிர்த்து முகத்தின் இதர பகுதிகளில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்துக் குளித்தால் சருமம் மென்மையாக மாறும்.

* நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் சருமம் மினுமினுப்பாக மாறும்.

பூசணிக்காய் ஃபேஸ் பேக்

உடல் அழகைப் பராமரிப்பதற்கு நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் உதவியான உள்ளன.  காய்கறிகளில் ஒன்றான பூசணிக்காயை வைத்து எவ்வாறு அழகைப் பராமரிக்கலாம் என்று பார்க்கலாம். பூசணிக்காயை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்றும், எந்த பொருளுடன் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம் என்றும் பார்க்கலாமா…

* பூசணிக்காயின் கூழை எடுத்து, தினமும் 10 நிமிடம் முகத்திற்கு தேய்த்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும்.

* பூசணிக்காயின் கூழை, முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் அழகாகக் காணப்படும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த முறை சரியானதாக இருக்கும். அதற்கு பூசணிக்காயை நன்கு மசித்து, அதில் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

* முகம் கருப்பாக காணப்பட்டால், அதனை போக்குவதற்கு, பூசணிக்காய் கூழுடன், சிறிது சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 4-5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கருமை நிறம் மங்குவதோடு, பருக்கள் நீங்கி, கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.

* இந்த முறையில் ஃபேஸ் பேக்குடன், ஸ்கரப்பும் உள்ளது. அதற்கு மசித்த பூசணிக்காயில், கடலை மாவை சேர்த்து, சிறிது பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் அனைத்து சருமத்தினருக்கும் நல்ல பலனைத் தரும். அதிலும் இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும்.

* பூசணிக்காய் கூழுடன், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் குளிர்ச்சியான நீரில் கழுவிட வேண்டும்.

* இந்த ஃபேஸ் பேக், பழங்களைக் கொண்டு ஃபேஷியல் போட்டது போன்ற தீர்வைத் தரும். அதற்கு பூசணிக்காய் கூழை, பாதாம் பொடியுடன் சேர்த்து, தேன் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, காய வைத்து, நீரில் கழுவ வேண்டும்.

விஸ்கி ஃபேஸ் பேக்குகள்

ஆல்கஹாலை குடித்தால் தான் உடலுக்கு பிரச்சனைகள் வருமே தவிர, அதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமம் நன்கு ஜொலிக்கும். மேலும் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் நிறைய ஆல்கஹால்கள் பயன்படுகின்றன.

தற்போது விஸ்கி ஃபேஷியல் பெண்களிடையே பிரபலமான ஒன்றாக உள்ளது. இத்தகைய விஸ்கி ஃபேஸ் பேக் போடுவதற்கு, அழகு நிலையங்களில் நிறைய செலவாகும். ஆனால் அந்த விஸ்கி ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே முயற்சி செய்யலாம்.

ஆமாம், இந்த விஸ்கி ஃபேஸ் பேக் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

•  1 டீஸ்பூன் விஸ்கியை, 3 மிலி தண்ணீருடன் கலந்து முகத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான கையால் முகத்தை மசாஜ் செய்து, பின் சுத்தமான நீரில் கழுவினால், சருமத்தில் பொலிவு அதிகரிப்பதோடு, சருமம் இறுக்கமடையும்.

• எலுமிச்சை பழ சாறுடன் விஸ்கி சேர்த்து மாஸ்க் போட்டால், சருமத்தில் ஏற்படும் பருக்களை தவிர்க்கலாம். அதற்கு விஸ்கியுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

• தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சுரைசர். எனவே 2 டீஸ்பூன் விஸ்கியை தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முதுமைத் தள்ளிப் போவதோடு, சரும வறட்சியும் நீங்கும்.

• சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களை போக்க முட்டை ஒரு சிறந்த பொருள். எனவே இத்தகைய முட்டை நன்கு அடித்து, அதில் சிறிது விஸ்கி, எலுமிச்சை சாறு மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி, சரும சுருக்கங்கள் மறையும்.

முகச்சுருக்கத்தை போக்கும் வெங்காயம்


முகத்தில் சுருக்கங்கள் தோன்றுகின்றதா முகம் வாட்டமா இருந்த மாதிரி இருக்குதா! கவலைய விடுங்க. வெங்காயம் சிறந்த கிருமி நாசினியாகும்,முகத்தில் காணப்படும் வடுக்ககளையும், மேடு பள்ளங்களையும் நீக்குவதற்கு வெங்காயத்தை சாறு எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுக வேண்டும்.

அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைவதை காணலாம். வெங்காயத்தை நன்கு மசித்து அதனுடன் தேன் விட்டு கலந்து பேக் போல் செய்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் முகச்சுருக்கம் படிப்படியாக குறைந்து விடும். கண்கள் சோர்வாக இருந்தால் குளிர்ந்த நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கண்களை விழித்து அலம்பினால் சோர்வு போய் புத்துணர்ச்சி கிட்டும்.

சரும வறட்சியைத் போக்கும் இயற்கை லோசன்கள் .


சரும வறட்சி உண்ணும் உணவுகள் மற்றும் காலநிலை மாறுபாடுகளினால் ஏற்படக்கூடியவை. இவ்வாறு சரும வறட்சி ஏற்பட்டால், முறையான பராமரிப்பு மிகவும் இன்றியமையாதது. இல்லாவிட்டால், அது இன்னும் மோசமான நிலையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக, சரும வெடிப்புக்கள், சருமம் மென்மையிழத்தல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

இத்தகைய சரும வறட்சியைத் தடுக்க எந்த பொருட்களைப் பயன்படுத்தினால் நல்ல நிவாரணம் கிடைக்கும் என்று தெரியாது. இங்கு குறிப்பிட்டுள்ளவற்றை தினமும் மேற்கொண்டு வந்தால், சரும வறட்சியில் இருந்து விரைவிலேயே விடுபடலாம்.

• ஒரு பெளலில் ஒரு கப் பால் மற்றும் ஒரு கப் தயிரை ஊற்றி நன்கு நுரைக்க அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். இந்த கலவையை தினமும் வறட்சி ஏற்படும் இடங்களில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

• சீஸ் ஒரு மென்மையான பொருள். இத்தகைய பொருளை சருமத்தில் பயன்படுத்தினால், சரும வறட்சி நீங்குவதோடு, சருமம் பொலிவாகவும் மாறும். அதற்கு ஒரு பௌலில் 1/2 கப் துருவிய சீஸ் மற்றும் பால் சேர்த்து, ஓரளவு கெட்டியான பேஸ்ட் போல் செய்து, அதனை சருமத்தில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், வறட்சியானது நீங்கிவிடும்.

• அவகேடோவும் சரும வறட்சியைப் போக்குவதில் ஒரு சிறப்பான பொருள். அத்தகைய அவகேடோவை அரைத்து, அதனை பாலுடன் சேர்த்து சற்று கெட்டியாக கலந்து, சருமத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

• நல்ல மென்மையான மற்றும் வறட்சியில்லாத சருமம் வேண்டுமெனில், 1 கப் பாதாம் பொடியில், 1/2 கப் பால் சேர்த்து கெட்டியாக கலந்து, சருமத்தில் தடவி, ஊற வைத்து கழுவ வேண்டும்.

• 5 தக்காளியை சற்று கெட்டியாக அரைத்து, அதில் 1/2 கப் பால் ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். கலவையானது கெட்டியானதும், அதனை சருமத்தில் தடவி நன்கு காய வைத்து, இறுதியில் பாலால் கழுவி, பின் தண்ணீரில் அலச வேண்டும்.

மேலே கூறியுள்ள இந்த இயற்கை முறைகளை பின்பற்றி வந்தால் சருமத்தில் உண்டாகும் வறட்சி படிப்படியாக நீங்கும்.

பொடுகை நீக்கும் சிறந்த ஹேர் மாஸ்க்குகள்!!!

பொடுகுத் தொல்லை பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று. வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி பொடுகை நீக்க வேண்டும். இப்போது பொடுகை இயற்கை முறையில் போக்குவதற்கு எந்த ஹேர் மாஸ்க் சிறந்தது என்று ஒருசில பராமரிப்பு பொருட்களையும், அதற்கான முறையையும் பார்க்கலாம்.

எலுமிச்சை :  எலுமிச்சை ஒரு நல்ல பொடுகை நீக்கும் பொருட்களில் ஒன்று. அதற்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றை விட்டு, முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 10-15 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் மைல்டு ஷாம்பு கொண்டு முடியை நீரில் அலச வேண்டும்.

கொத்தமல்லி :  கொத்தமல்லியை அரைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளித்தால், பொடுகு போய்விடும். அதிலும், இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும்

ஆலிவ் ஆயில் :  தினமும் இரவில் படுக்கும் முன், ஸ்கால்ப்பில் ஆலிவ் ஆயிலை தடவி, ஊற வைத்து, காலையில் எழுந்து குளித்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

தயிர் : தயிரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, கலந்து ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு அலசிவிட்டால், தயிர் ஸ்கால்ப்பை சுத்தம் செய்து, எலுமிச்சை சாறு பொடுகு மற்றும் இறந்த செல்களை வெளியேற்றிவிடும். மேலும் இந்த முறை தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

வேப்பிலை : வேப்பிலையில் உள்ள கசப்பு தன்மையாலேயே, கிருமிகள் எங்கிருந்தாலும் அகன்றுவிடும். அந்த வகையில் பொடுகுத் தொல்லை இருந்தால், அதனைப் போக்குவதற்கு, வேப்பிலையை அரைத்து, அதில் மிளகு தூள், வெந்தயப் பொடி மற்றும் சிறிது கற்பூரம் சேர்த்து கலந்து, சிறு துளி எலுமிச்சைசாறு சேர்த்து, எண்ணெயுடன் கூடிய தலை மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

செம்பருத்தி :  செம்பருத்தியின் இலை மற்றும் பூ, முடிக்கு மிகவும் நல்லது. அதிலும் இது முடியின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பொடுகை போக்கும் பொருட்களில் ஒன்றாகவும் உள்ளது.

அதற்கு நீரில் செம்பருத்தியின் இலை அல்லது பூவை போட்டு கொதிக்க விட்டு, நீரை வடிகட்டி விட்டு, இலை அல்லது பூவை நன்கு அரைத்து, அதில் சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் பொடுகு நீங்குவதோடு, முடி நன்கு கருப்பாக வளரும்.

பருக்களை நீங்க உதவும் பழங்கள்

செர்ரி: செர்ரிப் பழத்தை அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் 2 முறை செய்து வந்தால் பருக்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

தக்காளி : தினமும் தக்காளியை அரைத்து அதனை முகத்திற்கு தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், பருக்கள் படிப்படியாக மறைந்துவிடும்.

சிவப்பு திராட்சை: சிவப்பு திராட்சையை தயிர் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி ஊற வைத்து 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் 3 முறை செய்து வந்தால் முகப்பருக்களை எளிதில் மறையச் செய்யலாம்.

ஆரஞ்சு : சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழமும் சருமத்தின் அழகை அதிகரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதற்கு ஆரஞ்சு பழத்தைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யலாம் அல்லது ஆரஞ்சு பழத் தோலை பொடி செய்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்