Sunday, 1 December 2013

நெய்ல் ஆர்ட்

நெய்ல் ஆர்ட் பல வகையான டிசைன்களை உடையது. உங்களது நகங்களை பிறரை கவரும் விதத்தில் அலங்கிரிக்க உங்களுக்கு குறைந்தது 4 நிறங்களில் நெய்ல் பாலிஷ்கள் தேவைப்படலாம். உங்கள் மனதிற்கு பிடித்த டிசைன்களை தேர்வு செய்யுங்கள். டிசைனை தேர்வு செய்யும்போது இன்னோவேடிவ்வாக யோசியுங்கள்.

பண்டிகைகள், மலர்கள், கார்டூன் உருவங்கள் என நீங்கள் நெய்ல் ஆர்ட்-க்கு தேர்வு செய்ய தீம்-கள் நிறைய உள்ளன. உதாரணதிற்கு நகங்களில் சுழல் போன்ற டிசைனை வரைய, உங்களுக்கு 3 கலர் நெய்ல் பாலிஷ்கள் தேவைப்படும்.

முதலில் ஒரு நிறத்தை வைத்து நகத்தில் சுழலை வரைந்து, மீதமிருக்கும் கலரை, முதலில் வரைந்த சுழலுக்கு உட்புறமாக, அடுக்கடுக்காக வரையலாம். இந்த டிசைன்தான் இப்போதைய டிரன்ட். உங்களிடம் 2 கலர் நெய்ல் பாலிஷ்கள் மட்டுமிருந்தால், ஒரு கலரை நகங்கள் முழுவதும் பூசி, மற்றொரு கலரை நகங்களின் நுனியில் மட்டும் மெல்லிய இழையாக பூசுங்கள்.

இந்த டிசைன் சிம்பிளாக இருந்தாலும், அசத்தலாக இருக்கும். நகங்களில் டிசைன்களுக்கு பதிலாக கார்ட்டூன் உருவங்கள், நட்சத்திரங்கள், மலர்கள், விலங்குகளில் முகங்கள், பழங்கள், கற்கள் பதித்த அலங்காரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

உங்கள் நகங்களுக்கு கிராபிக் டிசைன்களை போன்ற நெய்ல் ஆர்ட் செய்ய விருப்பப்பட்டால், உங்களுக்கு விருப்பமான நிறங்களை அருகருகே ஊற்றி ஒரு ஸ்பாஞ்சால் அந்த நிறங்களை தொட்டு, நகத்தில் பூசினால், நீங்கள் எதிர்பார்த்த கிராபிக் டிசைன் நெய்ல் ஆர்ட் கிடைக்கும்.

இந்த வகை நக அலங்காரங்களுக்கு உங்களுக்கு பல நிறங்களில் நெய்ல் பாலிஷ்கள், வெவ்வேறு அளவிலான பிரஷ்கள் தேவைப்படும். மெல்லிய பிரஷ்களுக்கு, நீங்கள் உபயோகிக்காத நெய்ல் பாலிஷ் பிரஷ்களின் பிரிஸில் – சை (Bristles) நீளவாட்டில் வெட்டிக்கொள்ளலாம்.

நெய்ல் ஆர்ட் போடும் முன்னும், போட்டு முடித்த பின்னும் நகங்களின் மீது டிரான்ஸ்பரன்ட் பாலிஷை பூசினால், உங்களின் நக அலங்காரம் நீண்ட நாட்களுக்கு அழகாக அப்படியே இருக்கும்.

No comments:

Post a Comment