மஞ்சளை ஒருசில பொருட்களுடன் சேர்த்து சருமத்தை பராமரித்து வந்தால், சருமத்தின் கருமை நிறம் முற்றிலும் நீங்கி, சருமம் விரைவில் வெள்ளையாவதை உணரலாம். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும். சருமத்தை வெள்ளையாக்கும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்குகளைப் பார்ப்போமா!!!
மஞ்சள் மற்றும் மில்க் க்ரீம்: மஞ்சள் துளை, மில்க் க்ரீமுடன் சேர்த்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், விரைவில் சருமம் வெள்ளையாகும். ஏனெனில் இதில் உள்ள மில்க் க்ரீம் சருமத்தின் ஈரத்தன்மையை தக்க வைக்கவும், மஞ்சள் தூள் சருமத்தின் கருமை நிறத்தை போக்கும்.
மஞ்சள் மற்றும் தேன்: மஞ்சள் தூளை 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மைதா சேர்த்து கலந்து, கெட்டியான பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
மஞ்சள் மற்றும் சந்தனம்: சருமத்தில் உள்ள பருக்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று காணப்பட வேண்டுமெனில், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பேஸ்ட், சிறிது சந்தனப் பொடி, 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, அந்த கலவையை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர்: 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் ரிலாக்ஸ் ஆவதுடன், சருமம் வெள்ளையாகவும் காணப்படும்.
மஞ்சள் மற்றும் முல்தானி மெட்டி: அனைவருக்குமே முல்தானி மெட்டியைப் பற்றி நன்கு தெரியும். அதிலும் முல்தானி மெட்டி பருக்கள் மற்றும் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைப் போக்க வல்லது என்பதும் தெரியும். ஆனால் அந்த முல்தானி மெட்டியை மஞ்சள் தூள் மற்றும் பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவினால் சருமம் பளிச்சென்று காணப்படும்.
No comments:
Post a Comment