Saturday, 30 November 2013

மென்மையான சருமத்திற்கு வழிகள்

நமது சருமமானது தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்புடையதாகவே அமைந்துள்ளது. ஆனால், இந்த தட்பவெப்ப நிலைகள் அதிகரிக்கும் போது அவை நமது சருமத்தை பெரிதும் பாதிக்கின்றது. இதனால் சரும வறட்சி, பருக்கள், தேமல் மற்றும் சில சரும நோய்கள் போன்றவை வர வாய்ப்பளிக்கின்றது.

தற்போது முன்பை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில், வருடம் முழுவதும் ஒரே நிலையில் இருக்கும் சருமத்தை பெறும் வாய்ப்புகள் தான் அதிகம். ஆகவே நமது முகத்தை பேணிப் பாதுகாப்பது முதன்மையாக இருக்கின்றது.

எனினும், சருமத்தை மென்மையாகவும், வழுவழுப்பாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். மேலும் இயற்கையாகவே நிறம் மாறினாலும், நமது சருமத்தை உறுதியாகவும், நிறமாகவும், வறட்சியின்றி இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு இதோ சருமத்தை அழகாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்ள சில எளிதான வழிகள் உள்ளன. அவற்றை பார்க்கலாம்.

• தினமும் பிரஷைக் கொண்டு உடல் முழுவதும் வட்ட இயக்கமாக தேய்க்க வேண்டும். இதன் மூலம், இரத்த ஓட்டம் ஊக்குவிப்பது, செல்லுலைட் குறைய செய்வது மட்டுமல்லாது, இறந்த செல்களை உதிரச் செய்து, அதன் கீழ் இருக்கும் மென்மையான சருமத்தை வெளிக்காட்டும்.

உடலை பிரஷ் கொண்டு தேய்த்தப் பின்பு, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்க்ரப் உபயோகித்து குளிக்கவும். அதிலும் தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து தடவி வந்தால், சருமம் ஸ்பா சிகிச்சைக்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்தும். இதனால், சருமம் அழகாகவும், நல்ல நறுமணத்தையும் பெறக்கூடும்.

• சருமத்தை மென்மையாக வைப்பதில் பாடி வாஷ்கள் நல்ல பயனை அளிக்கின்றது. பலவற்றில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் சரும உறுதிக்கு தேவையான பொருட்களும் உள்ளது. ஆகவே உங்களுக்கு தேவையான ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். அதிலும் அவை சருமத்தில் அதிகப்படியாக தங்கும் மாசுக்களை நீக்குமாறும் இருக்கலாம். மேலும் சரும உரிப்பிற்கு தேவையான ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் கிளைக்கோலிக் அமிலங்களும் இவற்றில் உள்ளது.

• மூன்று நாட்கள் டிடாக்ஸ் பயன்படுத்தி வந்தால், அது வயிற்று உப்புசத்தை குறைத்து, சருமத்தை பொலிவை அதிகரிக்கும். அதற்கு ஜூஸ்களை அதிகம் பருகி, காபி, மது, சர்க்கரை, உப்பு போன்றவற்றை தவிர்த்தால், மூன்றே நாட்களில் உப்புசம் குறையும். இதனால் வயிறு சீரடைந்து தட்டையாகி விட்டதை உணர முடியும்.

• ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை முற்றிலும் நீக்குவது என்பது முடியாது என்றாலும், அதனை தடுக்க தினமும் மாய்ஸ்ச்சுரைஸ் செய்வது மற்றும் நிறைய தண்ணீர் அருந்துவதாலும் தடுக்க முடியும். அதுமட்டுமின்றி ஸ்ட்ரெச் மார்க்குகளை மங்கச் செய்வதற்கு, ரெட்டினால் உள்ள பொருட்களைப் பயன்படுத்தலாம்.

இது அணுக்களின் உற்பத்தியையும், கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்யும். மாறாக, ஸ்ட்ரெட்ச் மார்க்குகளில் சன் ஸ்க்ரீன் லோஷன் தடவினால், அது மேலும் சருமத்தை கருமையாக்கி வெளிப்படுத்தும்.

No comments:

Post a Comment