Saturday, 30 November 2013

சரும அழகிற்கு ‘கொலோஜின்’

முப்பது வயதைக் கடக்கும் போது சருமத்தில் சுருக்கங்களும், படைகளும் தோன்றுகின்றன. ரத்த ஓட்டம் குறைவதும், கொலோஜின் உடலில் குறைவதும்தான் இதற்கான காரணம். இந்த குறைபாடுகளை களைந்து சருமத்திற்கு இளமையையும், அழகையும் தருவது கொலோஜின் சிகிச்சை.

இந்த அழகு சிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது தெரியுமா?

டீஹைட்ரேட்டிங் கிளன்சர் பயன்படுத்தி சருமத்தை முதலில் சுத்தம் செய்வார்கள். தொடர்ந்து டீடாக்சிபையிங் எக்ஸ்போலியேட்டர் கிரீம் பயன்படுத்தி முகம், கழுத்துப் பகுதி சருமத்தை நன்றாக ஸ்கிரப் செய்வார்கள். கண்களை சுற்றியுள்ள பகுதியை மிக மென்மையாக கையாண்டு ஸ்கிரப் செய்யவேண்டும்.

இவ்வாறு செய்வதால் செயலிழந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சி பெறும். நாலைந்து நிமிடங்களுக்கு பிறகு பஞ்சை பயன்படுத்தி இந்த கிரீமை துடைக்கவேண்டும். சருமத்தில் வெள்ளை, கறுப்பு புள்ளிகள் இருந்தால் அவைகளையும் நீக்க வேண்டும். அடுத்து கொலோஜின் கிரீம் பயன்படுத்தி சருமத்தை மேல் நோக்கி நன்றாக மசாஜ் செய்யவேண்டும்.

இந்த கிரீமில் கிளிசரின், திராட்சை பழத்தின் சக்தி இருக்கும். பின்பு கோலோஜின் ‘பேக்’ போடவேண்டும். மோய்சரைசர், ஒயிட்னிங் சீரம், வைட்டமின் சி மற்றும் திராட்சை சாறு அடங்கிய பேக்கை முகம் மற்றும் கழுத்தில் பூசவேண்டும். 15-20 நிமிடங்களில் கழுவி விடுவது அவசியம். பின்பு முகத்திற்கு ‘கூல் கம்பிரஷன்’ கொடுப்பார்கள்.

இந்த சிகிச்சையை முடித்துவிட்டு சன்ஸ்கிரீம் லோஷன் பூசிய பின்பே வெளியே கிளம்பவேண்டும்.

கவனிக்கத் தகுந்த விஷயங்கள்:

இந்த அழகு சிகிச்சைக்கு பிறகு ஒரு மாதம் வரை ஆன்டி ஆக்சிடென்ட் அடங்கிய பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்க்கவேண்டும். வைட்டமின் கேப்ஸ்யூல்களும் உட்கொள்ளலாம்.

காலை உணவுக்கு பிறகு பி காம்ப்ளக்ஸ், மதிய உணவுக்கு பிறகு வைட்டமின் சி, இரவு உணவுக்கு பிறகு வைட்டமின் ஈ போன்ற மாத்திரைகளை உடல் நிலைக்கு தகுந்தபடி உட்கொள்ளலாம். வாரத்தில் ஒருநாள் வீட்டிலே ‘ஸ்கின் புட் சிகிச்சை’ மேற்கொள்ளலாம்.

இதற்கு தேவைப்படும் கிரீமை வீட்டிலே தயாரிக்கலாம். மூன்று பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்து தோலை நீக்கிவிட்டு, அரையுங்கள். அரை தேக்கரண்டி ஓட்ஸ் பவுடர், அரை தேக்கரண்டி முட்டை மஞ்சள் கரு, நான்கு சொட்டு தேன் போன்றவைகளை பாதாம் அரைப்புடன் சேர்த்து கலந்திடுங்கள்.

அதிகமாக வறண்ட சருமம் என்றால், சிறிதளவு பாலாடை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த கிரீமை முகத்திலும், கழுத்திலும் பூசவேண்டும். 15 நிமிடங்கள் கடந்ததும், மீண்டும் ஒருமுறை பூசவேண்டும். அடுத்த பதினைந்து நிமிடங்களில் கழுவவேண்டும். இதை பயன்படுத்தினால் சருமம் பொலிவு பெறும். சுருக்கங்களும் நீங்கும்.

No comments:

Post a Comment