Saturday, 30 November 2013

அழகு தரும் வைட்டமின்கள்

ஒவ்வொரு வைட்டமின்னுக்கும் உடலைக் கட்டுப்படுத்தும் பல வேலைகள் இருக்கின்றன. இதனால் ஒன்று குறைந்தாலும் சமநிலை இழப்பு ஏற்படும். பி வைட்டமின்கள் நீரில் கரையக் கூடியவை. அதனால் உடலில் சேமித்து வைக்க முடியாது என்பதால் தினமும் அவற்றை சாப்பிட வேண்டியது அவசியம். சிறுவயதில் முதிய தோற்றம் ஏற்படுவதை தயமின் என்ற பி1 வைட்டமின் தடுக்கிறது.

இது சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், ஓட்மீல், சோயா பீன்ஸ், முந்திரி போன்றவற்றில் கிடைக்கிறது. தோல் மற்றும் உடலில் உள்ள எல்லா செல்களும் புதுப்பிக்கப் பயன்படும் ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி2. இவை பால், முட்டை, இறைச்சி, கல்லீரல், தானியங்கள், பச்சை காய்கறிகளில் கிடைக்கின்றன.

செல் மெட்டாபாலிசம், கார்போஹைட்ட்ரேட் கிரகிப்புக்கு நியாசின் என்ற வைட்டமின் பி3 தேவை. இதன் மூலம் ஆற்றல் கிடைப்பதோடு, இறந்த செல்கள் அழிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டு, புது செல்கள் உருவாக்கப்படும். மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசியில் இந்த வகை வைட்டமின் கிடைக்கிறது. சுழற்சியை தடுத்து, கொழுப்பு உடைதலை வேகமாக்கி பருக்கள் உருவாகாமல் தடுக்கிறது வைட்டமின் பி5. இவை மக்காச்சோளம், முட்டை, சீஸ், இறைச்சி, தக்காளியில் கிடைக்கிறது.

தோலின் எண்ணெய் பசைமிக்க பகுதிகளில் செதில் உரியும் நோயை சரிசெய்ய உதவுகிறது. பைரிடாக்சின் என்ற வைட்டமின் பி6. இரவ முழு தானியங்கள்,கல்லீரல், பயறுகள், வாழைப்பழம் போன்றவற்றில் உள்ளன. பயோடின் என்ற வைட்டமின் பி7 கூந்தல் வளர்ச்சிக்கும், சருமம், நகங்கள் மெருகேறுவதற்கும் உதவுகிறது.

இவை பயறுவகைகள், பழங்கள், காய்கறிகள்,முட்டை,சீஸ் போன்றவற்றில் கிடைக்கிறது. ரத்த சிவப்பு அணுக்கள் உருவாகி, முதிர்வடைந்து, மெருகேறுவதற்கு போலிக் அமிலம் என்ற வைட்டமின் பி9 தேவைப்படுகிறது. இவைகள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும், இளநரையை தடுக்கவும் உதவுகிறது. இந்த சத்து வைட்டமின் பசலைக்கீரை, ஈரல், ஆரஞ்சு ஜூஸ்,கருஞ்சீரகம் போன்றவற்றில் உள்ளது.

சருமத்தின் செல்களை புதுப்பித்து அழகுப்படுத்தும வேலையை கோபாலமின் என்ற வைட்டமின் பி12 செய்கிறது. இவை முட்டை, கோழி, தயிர், பால் பயறு போன்றவற்றில் கிடைக்கிறது. உடலில் செல்களைப் பராமரிப்பதற்கான ஆற்றலைத் தருவதற்குத் தேவையான கலோரிகளை பெற பி வைட்டமின்கள் உதவுகின்றன.

இறந்த செல்களை மாற்றுவது, சருமத்தை இளமையாகவும், மிருதுவாகவும், வைத்திருக்க உதவும் எண்ணெய் உற்பத்தி செய்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்கள் உதவுகின்றன. வைட்டமின் என்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கு உதவுகிறது.




No comments:

Post a Comment