தோற்றம் அழகாக அமைவதற்கு கூந்தல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் சரியாக அமையாவிட்டால். பார்ப்பதற்கு பொலிவில்லாமல், களையிழந்து காணப்படும். அதனால் இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் தலைமுடியை நேராக்கல் (Straightening), பெர்மிங் போன்ற தலைமுடி சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
அழகை அதிகரிக்க விலை உயர்ந்த சிகிச்சைகளான இவைகளை மேற்கொண்டால், கூந்தலின் அமைப்புத் தரம் அதிகரிக்கப்போவது உண்மை தான். ஆனால் காலப்போக்கில் கூந்தலின் வேர்கள் பாதிப்படையும். கூந்தலை நிரந்தரமாக நேராக்க விரும்பும் பெண்கள் பார்லர் போய் அமரும் முன் பல ஆயிரம் முறை யோசித்துக் கொள்ளுங்கள்.
ஒரு முறை கூந்தலை நேராகி விட்டால், அதன் பின்னால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் நிரந்த பாதிப்புகள் சிலவற்றை அது ஏற்படுத்திவிடும்.ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால் கூந்தலுக்கு ஏற்பட போகும் பாதிப்புகளை பார்க்கலாம்.
• கூந்தலை ஸ்ட்ரெய்ட்டெனிங் பின் அதிகளவிலான முடி உதிர்தலை அனுபவிக்க நேரிடும். இது நிரந்தரமாக முடியை நேராக்குவதால் ஏற்பட போகும் பெரிய பிரச்சனை. அதனால் முடியை நேராக்கல் செய்யக்கூடாத காரணங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.
• கூந்தலை ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால், கூந்தலின் வேர்கள் உடனடியாக பாதிக்கப்பட்டுவிடும். கூந்தலின் வேர்கள் பாதிக்கப்பட்டால் புதிதாக வளரும் முடிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். ஆகவே முடியின் வேர்களை பாதுகாக்க கண்டிப்பாக ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதை தவிர்ப்பது நல்லது.
• கூந்தலை ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால் காலப்போக்கில் கூந்தல் கரடு முரடாக மாறிவிடும். ஏனெனில் கூந்தலை நேராக்க பயன்படுத்தும் ஜெல், கூந்தலின் அமைப்புத் தரத்திற்கு நல்லதல்ல. மேலும் அந்த ஜெல் நாட்கள் போக போக கூந்தலை சொரசொரப்பாக மாற்றி விடும். கூந்தலின் அமைப்புத் தரம் கரடு முரடாக மாறுவதால், முடியின் நுனிகள் பிரியத் தொடங்கும். இது ஒன்றோடு நிற்காமல் ஆயிரக்கணக்கில் பிரியத் தொடங்கும்.
• கூந்தலில் உள்ள ஜொலிப்பு நின்று போனால், பார்ப்பதற்கு வறண்டு களையிழந்து காட்சி அளிக்கும். முடியை ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால், கூந்தலின் ஜொலிப்பை அது எடுத்துவிடும். அதனால் கூந்தல் களையிழந்து காட்சி அளிக்கும். ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால் இந்த இயற்கையான ஜொலிப்பு மற்றும் மென்மையை கூந்தல் இழந்து விடுவதால், அதனை தவிர்ப்பது நல்லது.

No comments:
Post a Comment