Saturday, 30 November 2013

சப்போட்டா பழம் தரும் அழகு பராமரிப்பு

சப்போட்டா பழத்தில் உள்ள அதிக அளவு பால் தன்மையால், பல் துவாரங்களை நிரப்பும் ஒரு கச்சா பொருளாகப் பயன்படுத்தலாம். சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும். அதிலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் `ஈ' சத்தினால், ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் பெற உதவி செய்கிறது.

எனவே, சப்போட்டா பழம் சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நல்லது. சப்போட்டா விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால், தலைமுடி ஈரப்பதமாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது.

மேலும் இது தலைமுடிக்கு பளப்பளப்பை தருகிறது மற்றும் சுருட்டை முடிக்கு சிறந்தாகக் கருதப்படுகிறது. இந்த எண்ணெயை கூந்தலுக்கு உபயோகப்படுத்துவதால், கூந்தலில் அதிகமாக வழவழப்புத் தன்மை இல்லாமல், எளிதில் உறிஞ்சப்பட்டு முடியை மென்மையாக இருக்க உதவுகிறது

சப்போட்டா விதையின் எண்ணெய் உச்சந்தலைக்கு ஊட்டம் அளித்து, எரிச்சலூட்டும் ஸ்கால்ப்பிற்கு நிவாரணமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியைக் கொடுக்கிறது. மேலும் இந்த எண்ணெய் சரும அழற்சி காரண மாக தலைமுடி உதிர்வதற்கு சிகிச்சையளிப்பதிலும் திறன் மிக்கதாக செயல்படுகிறது.

சப்போட்டா விதைகளை பேஸ்ட் செய்து, அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, பின்பு இதனை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக தேய்க்கவும். பிறகு மறுநாள் காலையில் தலைமுடியை நன்றாக அலசவும்.

இது தலைமுடியை மென்மையாக்கச் செய்து, பொடுகுப் பிரச்சனைக் கூட கட்டுப்படுத்த உதவுகிறது. சப்போட்டா பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்ததுள்ளது.

எனவே, அது உடலில் சீக்கிரம் முதுமை அடையச் செய்யும் மூலக்கூறுகளின் தீவிரத்தை குறைத்து, விரைவில் முதுமை அடைவதை தடுக்கும் பொருளாக விளங்குகிறது. மேலும் இது சுருக்கங்களைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது.

No comments:

Post a Comment