Saturday, 30 November 2013

சிறிய கண்களுக்கான மேக் அப் டிப்ஸ்

நமது முகத்தில் கண்கள் தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாகமாகும். நீங்கள் மனதில் நினைப்பதை உங்கள் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். நமது உணர்ச்சிகள் நல்லவையாக இருந்தாலும் சரி, கெட்டவையாக இருந்தாலும் சரி, நமது கண்கள் அதனை வெளிப்படுத்தும்.

சிறிய கண்களை பெரிதாக வெளிப்படுத்த.. கண்களுக்கான மேக் அப் டிப்ஸ்... சிறிய கண்களை உடையவர்களுக்கு கண்கள் பெரிதாக காட்டுவதற்கான சில ஒப்பனை டிப்ஸ்களை இப்பொழுது பார்க்கலாம்.

• மஸ்காராவை பயன்படுத்தி சிறிய கண்களை அழகாக மாற்றலாம். பொதுவாக, சிறிய கண்களின் கண் ஒப்பனைக்கு திக் மஸ்காரவை பயன்படுத்தவேண்டும். இந்த மஸ்காரா இமைகளை தடித்து காட்டி கண்களுக்கு மேலும் அழகு சேர்க்கும். கண் மஸ்காராவை மேல் மற்றும் கீழ் இமைகளுக்கும் பயன்படுத்தவேண்டும். எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகின்றோமோ நமது கண்களை அவ்வளவு அழகாக வெளிக்காட்டும்.

• சிறிய கண்களுக்கான ஒப்பனைகளில் ஒன்று இந்த ஐ லைனர். நமது கண்களை திருத்தி சீரான வடிவத்தை கொடுக்கும். மென்வண்ணம் அல்லது வெள்ளை ஐ லைனர்களை பயன்படுத்தினால் கண் மஸ்காராவை மேலும் எடுத்துக்காட்டும். அடர் வண்ண ஐ லைனரையும் பயன்படுத்தலாம். இரண்டையும் முயற்சி செய்து உங்கள் கண்களுக்கு எது பொருத்தமாக இருகின்றதோ அதை பயன்படுத்துங்கள்.

• ஐ ஷேடோ நமது கண்களை மிகவும் அழகாகக் காட்டும் கண் ஒப்பனைகளில் ஒன்றாகும். மாலை வேளைகளில் அடர் நிறங்களான கிரே, கருப்பு, ஊதா போன்றவற்றையும் மதிய வேளைகளில் ரோஸ், பழுப்பு மற்றும் மரூன் நிறங்களையும் பயன்படுத்தவேண்டும். இளம் பெண்களுக்கு அடர் நிற ஐ ஷேடோக்கள் அழகாக இருக்கும். நாம் அணிந்திருக்கும் உடைக்கும் ஆபரணங்களுக்கும் பொருத்தமான ஷேடோக்களையே பயன்படுத்தவேண்டும்.

• ஃபௌண்டேஷன் அல்லது ஐ ஷேடோ பயன்படுத்துவதற்கு முன்பு ப்ரைமர் பயன்படுத்த வேண்டும். அது நமது ஒப்பனை வெகு நேரம் வரை கலையாமல் இருப்பதற்கு உதவும். ஃபௌண்டேஷன் மற்றும் கன்சீலர்கள் நமது கண்ணின் கருவளையங்கள் மற்றும் பல குறைபாடுகளையும் குறைக்கச் செய்யும்.

• ஷிம்மர் பவுடர் சிறிய கண்களை பளிச்சிடச் செய்யும் ஒப்பனைகளில் ஒன்றாகும். இவை சிறிய கண்களால் கன்னங்கள் பெரிதாகக்காட்டுவதைத் தடுக்கும். இவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் அதிகமாக பயன்படுத்தினால் உங்கள் முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். இவை அனைத்தும் சிறிய கண்களுக்கான ஒப்பனை டிப்ஸ்களாகும். இரவு படுக்கச் செல்லும் முன்பு கண்டிப்பாக கண் ஒப்பனையை கலைக்க வேண்டும். நல்ல தரமான ஒப்பனை பொருட்களையே பயன்படுத்தவேண்டும். 

No comments:

Post a Comment